search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    மோட்டோ G52
    X
    மோட்டோ G52

    பட்ஜெட் விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மோட்டோரோலா

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் வெளியீடு பற்றி மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+pOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி, 5ஜி, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மோட்டோ G52

    மோட்டோ G52 சிறப்பம்சங்கள்:

    - 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் pOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4GB / 6GB ரேம்
    - 64GB / 128GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8 
    - 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 16MP செல்ஃபி கேமரா, f/2.45
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

    புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 4GB, 64GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும், 6GB, 128GB  மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை மே 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 

    Next Story
    ×