search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Homepod"

    • ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஹோம்பாட் மாடலை இருவித நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • புது ஹோம்பாட் மாடலில் முற்றிலும் புதிய S7 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது 2nd Gen ஹோம்பாட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனம் 2017 வாக்கில் அறிமுகம் செய்த ஹோம்பாட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 2021 வாக்கில் ஒரிஜினல் ஹோம்பாட் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் ஹோம்பாட் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    இதில் முற்றிலும் புதிய S7 சிப், பில்ட்-இன் டெம்பரேச்சர் மற்றும் ஹூமிடிட்டி சென்சார் உள்ளது. இந்த சென்சார் ஹோம்பாட் மினி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஹோம்பாட் மாடல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மெஷ் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இத்துடன் வொவன் பவர் கேபிள், பேக்லிட் டச் சர்ஃபேஸ் உள்ளது.

    ஹோம்பாட் 2nd Gen அம்சங்கள்:

    4-இன்ச் கஸ்டம் என்ஜினியரிங் செய்யப்பட்ட ஹை-எக்ஸ்கர்ஷன் வூஃபர்

    20mm டைஃப்ராம் பில்ட்-இன் பேஸ்-EQ மைக்

    லோ-ஃபிரீக்வன்சி கலிபரேஷன் மைக்ரோபோன்

    நான்கு மைக்ரோபோன் டிசைன்

    மேம்பட்ட கம்ப்யுடேஷனல் ஆடியோ

    ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ்

    S7 சிப்செட்

    ரூம் சென்சிங் தொழில்நுட்பம்

    பிரிசைஸ் டைரக்ஷனல் கண்ட்ரோல்

    அல்ட்ரா வைடு பேண்ட் தொழில்நுட்பம்

    அதிகபட்சம் ஆறு குரல்களை கண்டறிந்து கொள்ளும் வசதி

    பில்ட்-இன் தட்ப-வெப்ப சென்சார்

    வைபை, ப்ளூடூத் 5.0, திரெட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஆப்பிள் ஹோம்பாட் 2nd Gen மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை பிப்ரவரி 3 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஆப்பிள் ஹோம்பாட் மினி ரூ. 9 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×