என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    போக்கோ
    X
    போக்கோ

    விரைவில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் போக்கோ

    போக்கோ நிறுவனம் விரைவில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    போக்கோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் M2131W1 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதோடு ரஷ்யா எலெக்டிரானிக் சான்றிதழை பெற்று இருக்கிறது. 

    புதிய போக்கோ வாட்ச் டிசைன், அம்சங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போதைய ரெண்டர்களின் படி போக்கோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     போக்கோ வாட்ச்
    Photo Courtesy: Digit

    டிசைனை பொருத்தவரை சதுரங்க வடிவம் கொண்ட பாடி, வலது புறத்தில் நேவிகேஷன் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 360x320 பிக்சல் ரெசல்யூஷன், ஓரங்களில் சிறு வளைவுகள் காணப்படுகின்றன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை போன்றே போக்கோ வாட்ச் மாடலிலும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 டிராக்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய போக்கோ வாட்ச் 225mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய போக்கோ வாட்ச் மட்டுமின்றி போக்கோ நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இன் இயர் ரக டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, 28 மணி நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×