என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  பராக் அகர்வால்
  X
  பராக் அகர்வால்

  எலான் மஸ்க் கையில் டுவிட்டர் - இனி இருண்ட காலம் தான்... சி.இ.ஓ. பராக் அகர்வால் புலம்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.


  டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்ககாரரான எலான் மஸ்க் வாங்குகிறார். இதை அடுத்து, டுவிட்டருக்கு, "இனி இருண்ட காலம் தான். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்," என டுவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் நிறுவனம் விற்கபட்டால் இது தான் ஏற்படும் என அவர் தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் டுவிட்டர் தனிச்சிறப்பு கொண்டிருக்கிறது. டுவிட்டர் தளத்தை உலக தலைவர்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க் முயற்சித்து வந்தார். 

  அதன்படி அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்து வந்தார். டுவிட்டர் நிறுவன பங்கு ஒன்றுக்கு 54.20 டாலர் வரை கொடுக்க தயார் என்றும் அறிவித்து இருந்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். இதன் காரணமாக டுவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

  இந்த நிலையில் தான் எலான் மஸ்க் கொடுக்கும் விலைக்கே டுவிட்டர் நிறுவனத்தை ஒப்படைக்க அதன் நிர்வாகம் ஒப்புக் கொண்டு இருப்தாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் பங்கு ஒன்றிற்கு 54.2 டாலர்கள் என்ற கணக்கில் வழங்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

   டுவிட்டர்

  அதன்படி 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர்  ஒப்புக் கொண்டுள்ளது. டுவிட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  எனினும், இதற்கான பரிவரத்தனை எப்போது நடைபெறும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை யார் வழிநடத்துவார் போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

  "ஒட்டு மொத்த உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பந்தம் மற்றும் குறிக்கோளை டுவிட்டர் கொண்டிருக்கிறது. எங்களின் குழுக்கள் மற்றும் அவர்களது பணியை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது," என டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.

  "தலைசிறந்த ஜனநாயகத்திற்கு சிறந்த அடித்தளமே கருத்து சுதந்திரம் தான். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விவாதங்கள் நடைபெறும் டிஜிட்டல் டவுன் ஸ்கொயர் தான் டுவிட்டர். இதுவரை இல்லாத வகையில் டுவிட்டர் தளத்தை சிறப்பான ஒன்றாக மாற்ற விரும்புகிறேன். இதற்காக புது அம்சங்களை வழங்க இருக்கிறேன். மேலும் இதன் அல்காரிதம்களை ஓபன் சோர்ஸ் ஆக மாற்றி நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி, ஸ்பாம் பாட்களை வீழ்த்த முடிவு செய்துள்ளேன். டுவிட்டரில் ஏராளமான தனித்துவம் உள்ளது. இதனை வெளிக் கொண்டு வர பயனர்கள் மற்றும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்." என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். 
  Next Story
  ×