என் மலர்

  நீங்கள் தேடியது "MIVI"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மிவி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
  • இந்த சவுண்ட்பார்கள் கணினி மற்றும் டிவி உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

  மிவி நிறுவனத்தின் போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மிவி S60 மற்றும் S100 சவுண்ட்பார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய மிவி போர்ட் S16 மற்றும் S24 மாடல்கள் பேப்ரிக் டிசைன், மேட் பினிஷ் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பார் டிவி மற்றும் கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம்.

  பெயருக்கு ஏற்றார்போல் மிவி போர்ட் S16 மாடல் 16 வாட் அவுட்புட் வழங்குகிறது. இதே போன்று மிவி போர்ட் S24 மாடல் 24 வாட் அவுட்புட் வழங்கும். டூயல் பேசிவ் ரேடியேட்டர்கள் இருப்பதால் குறைந்த பிரீக்வன்சிக்களிலும் சீரான சவுண்ட் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக சப்-வூபர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 அம்சங்கள்:

  இந்த சவுண்ட்பாரில் பல்வேறு இன்புட் மோட்கள் உள்ளன. அதன்படி ப்ளூடூத், AUX, யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சவுண்ட்பார் பயனர்கள் வீட்டில் இருந்தபடி சினிமா தர சவுண்ட் அனுபவிக்க செய்கிறது.


   மிலி போர்ட் S16 மாடலில் 2000 எம்ஏஹெச் பேட்டரியும், போர்ட் S24 மாடலில் 2500 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார்கள் டிசி அடாப்டர் மூலம் சக்தியூட்டிக் கொள்ளலாம். இவை பிளாக் நிறத்தில் கிடைக்கின்றன.

  இதில் வால்யூம், பிளே, பாஸ், டிராக் கண்ட்ரோல் போன்ற கண்ட்ரோல்கள் உள்ளன. இத்துடன் ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட், எப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி, AUX மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த சவுண்ட்பார் உடன் ரிமோட், பவர் அடாப்டர், யூசர் மேனுவல், வாரண்டி கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை அறிமுக சலுகையாக முறையே ரூ. 1,299 மற்றும் ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இரு சவுண்ட்பார்களின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 1,999 என மாறி விடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப்புடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.
  • வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் கொண்டுள்ள MIVI Duopods F40 இயர்பட்ஸ், வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே மற்றும் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

  MIVI Duopods F60 கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது MIVI Duopods F40 மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. F60 மாடலில் இருந்ததைப் போல் இதிலும் 13mm டிரைவர்ஸ், புளுடூத் 5.1, வாய்ஸ் கேன்சலேசன், அலெக்ஸா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதுதவிர இயர்பட்ஸை தொட்டாலே மொபைல் அழைப்புகளை ஏற்கவோ மற்றும் தவிர்க்கவோ முடியும்.

  ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப்புடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது. 70 சதவீத வால்யூமை வைத்திருந்தால் மட்டுமே 50 மணிநேரம் இடைவிடாது கேட்க முடியுமாம். 500mAh பேட்டரியுடன் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி கேஸில் உள்ள LED டிஸ்பிளே பேட்டரியில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.


  வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் இதில் உள்ளது. MIVI Duopods F40 இயர்பட்ஸ், வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே மற்றும் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.1,199 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், இது பிளிப்கார்ட் மற்றும் MIVI தளத்தில் ரு.999க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.

  ×