ரூ. 999 விலையில் புது இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டுயோபாட்ஸ் F50 இயர்பட்ஸ்-ஐ மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.1 தொழில்நுட்பம், ஏஏசி கோடெக் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
ரூ. 999 விலையில் புது இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
Published on

மிவி டுயோபாட்ஸ் F50 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் புதிய மேட் இன் இந்திய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும். சமீபத்தில் தான் மிவி டுயோபாட்ஸ் A350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது F50 மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் 13 மில்லிமீட்டர் எலெக்ட்ரோ டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.1 தொழில்நுட்பம், AAC மற்றும் SBC கோடெக் சப்போர்ட், டூயல் MEMS மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளன.

புதிய மிவி டுயோபாட்ஸ் F50 முழு சார்ஜ் செய்தால் 8.5 மணி நேரத்திற்கான பிளேபேக் மற்றும் கேஸ் சேர்த்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த இயர்பட்ஸ் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் கண்ட்ரோல், கூகுள், சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மிலி டுயோபாட்ஸ் F50 மாடல் பிளாக், வைட், பின்க் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் பினிஷ் கொண்டிருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் ரூ. 999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com