என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஒன்பிளஸ் நார்டு பட்ஸ்
  X
  ஒன்பிளஸ் நார்டு பட்ஸ்

  30h பிளேபேக் வழங்கும் ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசில் முதல் இயர்பட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முதல் நார்டு சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 94ms அல்ட்ரா லோ லேடன்சி, 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த bass அனுபவத்தை வழங்குகின்றன.

  இயர்பட் மிக கச்சிதமாக காதுகளில் பொருந்திக் கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் இயர் டிடெக்‌ஷன் அம்சம் வழங்கப்படவில்லை. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் தோற்றம் கொண்டிருக்கின்றன. புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் IP55 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. 

  ஒன்பிளஸ் நார்டு பட்ஸ்

  இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.8 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதனால் காதுகளில் அணிந்து கொள்ள சவுகரியமாக இருக்கும். இதனுடன் மூன்று அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. இதன் இயர்பட்கள் 7 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் அலோன் பிளேபேக் வழங்கும். இதில் உள்ள பிளாஷ் சார்ஜ் அம்சம் பத்து நிமிட சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

  ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடல் பிளாக் ஸ்லேட் மற்றும் வைட் மார்பில் நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 10 ஆம் தேதி துவங்குகிறது. 
  Next Story
  ×