என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  மோட்டோ ரெவோ 2
  X
  மோட்டோ ரெவோ 2

  ரூ. 13,999 துவக்க விலையில் புது டி.வி. மாடல்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
   

  மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டோ ரெவோ 2 சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வெவ்வேறு அளவுகள், டிஸ்ப்ளே ரெசல்யூஷனில் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. 

  அதன்படி ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD, 40 மற்றும் 43 இன்ச் FHD, 43, 50 மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு 11 ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும். இவற்றில் டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைபை மற்றும் டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் 4K டி.வி. மாடல்களில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், 4D சவுண்ட், MEMC மற்றும் ALLM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

  கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ZX2 மற்றும் ரெவோ மாடல்களை தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதன் அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி.வி. மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ள. எனினும், மோட்டோ டி.வி. மாடல்களில் சற்றே வித்தியாசமான V வடிவ ஸ்டாண்ட் வழங்கப்பட்டு உள்ளது. 

  மோட்டோ ரெவோ 2

  மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் அம்சங்கள்:

  - 32 இன்ச் 1366x768 HD ரெடி டிஸ்ப்ளே
  - 40, 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
  - 43, 50, 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
  - குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
  - மாலி G31 MP2 GPU (HD மற்றும் FHD) 
  - மாலி G52 MP2 GPU (4K)
  - 2GB ரேம்
  - 8GB மெமரி
  - ஆண்ட்ராய்டு டி.வி. 11
  - வைபை 802.11 ac (2.4GHz), ப்ளூடூத் Bluetooth, (HD மற்றும் FHD) / 3 (4K) x HDMI போர்ட்கள், 2x USB 2.0, ஈத்தர்நெட்
  - 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள்
  - டால்பி ஆடியோ (HD மற்றும் FHD) 
  - டால்பி அட்மோஸ் (4K)

  விலை விவரங்கள்:

  - மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD ரெடி டி.வி. ரூ. 13 ஆயிரத்து 999
  - மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 40 இன்ச் FHD டி.வி. ரூ. 20 ஆயிரத்து 990
  - மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ்  43 இன்ச் FHD டி.வி. ரூ. 23 ஆயிரத்து 990
  - மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் 4K டி.வி. ரூ. 26 ஆயிரத்து 990
  - மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 50 இன்ச் 4K டி.வி. ரூ. 31 ஆயிரத்து 990
  - மோட்டோரோலா ரெவோ 2  சீரிஸ் 55 இன்ச் 4K டி.வி. ரூ. 37 ஆயிரத்து 999

  Next Story
  ×