search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பிக்சல் போல்டு
    X
    பிக்சல் போல்டு

    கூகுள் பிக்சல் போல்டு வெளியீட்டு விவரம் - இணையத்தில் லீக் ஆன புது தகவல்..!

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 12L வெர்ஷனில் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இத்துடன் கூகுள் டென்சர் சிப்செட் கொண்டு கூகுள் நிறுவனம் தனது வன்பொருள் பிரிவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து இருப்பது தெரியவந்தது. 

    இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியான தகவல்களில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. டிஸ்ப்ளே வினியோகம் சந்தையில் அதிக பரீட்சயம் கொண்ட ராஸ் யங் இந்த தகவலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிக்சல் போல்டு மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

     பிக்சல் போல்டு

    அதன்படி கூகுள் பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு சிறந்த சப்போர்ட் வழங்குவது பற்றிய குறியீடுகள் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

    விலையை பொருத்தவரை புதிய பிக்சல் போல்டு மாடல் விலை 1400 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 மாடலை விட 400 டாலர்கள் குறைவு, கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலை விட 400 டாலர்கள் அதிகம், ஆனால் கூகுள் பிக்சல் 6 மாடலை விட 800 டாலர்கள் வரை அதிகம் ஆகும்.
    Next Story
    ×