என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட்டில் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றாக மெசேஜ் ரியாக்ஷன்ஸ் உள்ளது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களிடையே இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம் ஸ்டேபில் மற்றும் பீட்டா பில்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
புது அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜிக்கள் மூலம் பதில் அனுப்ப முடியும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் பிகரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கையும் 2GB வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதன் அளவு 100MB-யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்த இரு அம்சங்களும் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புது அம்சங்கள் பற்றிய அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. இத்துடன் க்ரூப் சாட்களின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரியாக்ஷன்ஸ் அம்சத்தில் முதற்கட்டமாக சில எமோஜிக்கள் மட்டும் வழங்கப்பட்டு, அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது. இத்துடன் வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் எண்ணிக்கை 256-இல் இருந்து 512 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் ஆறு எமோஜிக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இவற்றை பயன்படுத்த மெசேஜை அழுத்திப் பிடித்து, திரையின் மேல் தோன்றும் எமோஜிக்களில் ஒன்றை தேர்வு செய்தாலே போதுமானது.
விவோ நிறுவனத்தின் புதிய V23e 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் V23e 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் தற்காலிக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சம்மர் ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.
விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB +128GB மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சன்ஷைன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. தற்போது நடைபெற்று வரும் சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் மே 10 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதுவரை V23e 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 20 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.

விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.எப்.சி. வங்கி, ஒன் கார்டு மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஆப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோரில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED பேனல், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் புது சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குகிறார். எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்து இருப்பதை அடுத்து இந்த தகவல் வெளியானது.
இதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் அரங்கேற இருக்கும் மாற்றங்கள், பணி நீக்க நடவடிக்கைகள் என டுவிட்டர் நிர்வாகம் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இது தவிர எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து உலக பணக்காரர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த முன்னணி அதிகாரிகளும் தங்களின் கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாக வாங்கப் போவதாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க இருப்பதை அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மறு பரிசீலனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த பரிவர்த்தனை குறித்து ஆழமான விசாரணை நடத்துவது பற்றி அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு அடுத்த மாதம் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விசாரணை நடைபெறும் பட்சத்தில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது மேலும் சில மாதங்கள் வரை தாமதமாகலாம்.
இதுதவிர டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான பரிவர்த்தனை முழுமை பெறும் பட்சத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் பேட் மாடல் இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்டு இருக்கிறது என பிரபல டிப்ஸ்டர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்த டேப்லெட் தற்போது நிறுவனத்தினுள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார். இந்த டிரேட்மார்க் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பம் தவிர இந்த லிஸ்டிங்கில் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

Photo Courtesy: TechDroider
மார்ச் மாத வாக்கில் இந்த டேப்லெட்-ஐ உற்பத்தி செய்யும் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட் 2022 முதல் அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஓ.எஸ். டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஓ.எஸ். ஆகும்.
தற்போது டிரேட்மார்க் பெற்று இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் பேட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் சாதனமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த டேப்லெட் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடலுடன் ஒன்பிளஸ் பேட் அறிமுகம் செய்யப்படவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் சலுகைகளை ஜியோ அறிவித்து இருக்கிறது.

புது சலுகை விலை மற்றும் பலன்கள்:
- ரூ. 151 டேட்டா ஆட் ஆன் சலுகை - தினமும் 8GB டேட்டா, ஆக்டிவ் பிளான் நிறைவுபெறும் வரை வேலிடிட்டி
- ரூ. 33 ஒரு மாத சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி
- ரூ. 583 - இரண்டு மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி
- ரூ. 783 - மூன்று மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்களுக்கான சலுகைகளை தேர்வு செய்வோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பலன்களை மூன்று மாதங்களுக்கும் தொடர்ச்சியாக பெற, ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்து அக்கவுண்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும்.
புதிய பிரீபெயிட் சலுகை விவரங்கள் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி லமற்றும் அனைத்து செக் பாயிண்ட்களிலும் கிடைக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை அதன் நிறுவனர் தனது டுவிட்டர் பதில் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 இந்த ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என மார்ச் மாதம் வாக்கில் அறிவித்து இருந்தது. அப்போதே, புதிய நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸரை மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது.
“144 மில்லியன் டாலர்களை முதலீடாக ஈட்டி இருக்கிறோம். 300-க்கும் அதிகமானோர் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறோம். குவால்காம் டெக்னாலஜீஸ் போன்ற நம்பத்தகுந்த நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். உறங்கி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் போன் 1 மாடலை அறிமுகம் செய்ய தயாராகி விட்டோம்,” என கார்ல் பெய் தெரிவித்து இருந்தார்.
6/9 at 4:20
— Carl Pei (@getpeid) May 4, 2022
இந்த நிலையில், புதிய நத்திங் போன் 1 மாடலுக்கான வெளியீட்டு தேதியை கார்ல் பெய் அறிவித்து இருக்கிறார். நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜூன் 9 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக நத்திங் நிறுவனம் நத்திங் லான்ச்சர் பீட்டா வெர்ஷனை உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டு இருந்தது. நத்திங் லான்ச்சர் பீட்டா நத்திங் ஓ.எஸ். இண்டர்பேஸ் போன் 1 மாடலில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் லான்ச்சர் பீட்டாவில் பெரிய ஐகான்கள், போல்டர்கள், பிஸ்போக் கடிகாரம், வானிலை விட்ஜெட், நத்திங் தீம் கொண்ட வால்பேப்ர்கள், மூன்று ஒரிஜினல் ரிங்டோன்கள் இடம்பெற்றுள்ளன.
நத்திங் ஓ.எஸ். பீட்டா வெர்ஷன் சாம்சங் கேலக்ஸி S21, சாம்சங் கேலக்ஸி S22, கூகுள் பிக்சல் 5 மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த லான்ச்சர் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் நிலைமை மேலும் மோசம் அடையும் என பில் கேட்ஸ் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்க வாங்குகிறார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், குறிப்பாக போலி தகவல்களை கையாளும் விதத்தில் டுவிட்டர் நிறுவன பிரச்சினைகள் எலான் மஸ்க் தலைமையின் கீழ் மேலும் மோசமாகும் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார். தி வால் ஸ்டிரீட் ஜர்னல் நடத்திய சி.இ.ஓ. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பில் கேட்ஸ் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் கொடர்ந்து பேசிய பில் கேட்ஸ், ‘‘அவர் அதனை மேலும் மோசமானதாக மாற்றி விடலாம். அது அவரின் போக்கு கிடையாது - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அவரின் சாதனைகள் பெரியது. அந்தந்த துறைகளில் கைத்கேர்ந்த வல்லுனர்களை பணியில் அமர்த்தி இரு நிறுவனங்களில் அவர் வெற்றி பெற்று விட்டார். ஆனால் சமூக வலைதள துறையில் அப்படி வெற்றி பெற்று விட முடியாது. சமூக வலைதள சேவைகளை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்விக்குறி தான்" என்று தெரிவித்து இருக்கிறார்.

‘‘இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது, ஆனால் எப்போதும் நாம் திறந்த மனதுடன் அனுக வேண்டும், எலான் மஸ்க்-ஐ குறைத்து மதிப்பிடவும் முடியாது," என அவர் மேலும் தெரிவித்தார்.
டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை பின்பற்றி வரும் பல கடுமையான திட்டங்களில் மாற்றம் செய்ய எலான் மஸ்க் உறுதி அளித்து இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் டுவிட்டர் தளத்தில் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கான எலான் மஸ்க்-இன் அணுகுமுறை டுவிட்டர் தளத்தில் தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகளவில் பரவ வழி வகுக்கும் என பில் கேட்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதோடு, “பருவ நிலை மாற்றத்திற்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறேன். இந்த இலக்கை அடைவதில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் எலான் மஸ்க் பற்றி நல்ல விதமாக கூற என்னிடம் எதுவும் இல்லை. அவர் டுவிட்டர் தளத்தை மோசமான ஒன்றாக மாற்றினால், அப்படியே செய்யட்டும். நான் அதை பற்றி நிச்சயம் பேசுவேன், ஆனால் இப்படித் தான் நடக்கும் என்று மட்டும் கூற மாட்டேன்" என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சீன வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷன்களை விட அதிகளவு சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறது.

மே மாதம் இந்த மாடல்களின் வெளியீடு நடைபெற இருப்பதை அடுத்து, ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்கள் பற்றிய புது தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்களின் வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறது. வெளியீடு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
எனினும், புதிய ரெட்மி நோட் 11T சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் இவற்றின் விலை CNY 1599 இல் இருந்து CNY 2500, இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 400-இல் இருந்து ரூ. 29 ஆயிரத்து 700 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு மாடல்களில் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 144Hz LCD ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோட் ஒன்றிற்கு உணவை சாப்பிட்டு பார்க்க பயிற்ச்சி அளித்து வருகின்றனர். ஏன் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரோபோட் செஃப் ஒன்றிற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்க்க பயிற்சி அளித்து வருகின்றனர். உணவை சமைத்து முடித்து, அதில் எல்லா சுவைகளும் சரியாக உள்ளதா என்று மனிதர்கள் உணவை ருசி பார்ப்பதுண்டு. இதே வேளையை செய்யவே இந்த ரோபோட்-க்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்ப்பது மட்டுமின்றி, அதில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் ரோபோட் விளக்குகிறது.
வரும் ஆண்டுகளில் மனிதர்கள் இன்று செய்து வரும் சமையல் வேளையையும் ரோபோக்கள் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் இவை நாளடைவில் மனிதர்களை விட சிறப்பாக சமையல் செய்து விடுமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்த ரோபோட்டே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர். முதற்கட்டமாக ரோபோக்கள் முட்டை பொறியல் மற்றும் தக்காளியை வெவ்வேறு விதமாக மென்று சாப்பிட பயிற்சி அளிக்கப்பட்டது.

மூன்று வெவ்வேறு நிலைகளில் மென்று சாப்பிடும் வழிமுறைகளை தொடர்ந்து ரோபோட் ஒன்பது விதமான முட்டை பொறியல் மற்றும் தக்காளிகளை சாப்பிட்டது. இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு உணவிற்கான சுவையை ரோபோட் அறிந்து கொள்ளும். இதில் இருந்து கிடைக்கும் தரவுகளை கொண்டு ரோபோட் சமையில் கலையில் புகுத்தி, சிறப்பான சமையலை செய்திட வழிவகுக்கும்
மனிதர்களை போன்றே மென்று சாப்பிட்டு, சுவையை உணர வைக்கும் போது ரோபோக்களால் ஒருநாள் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு உணவு வகைகளை சிறப்பாக சமைக்க முடியும். மேலும் ஒவ்வொருத்தரின் விருப்பத்திற்கு ஏற்ப ருசியாகவும் சமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் முன்பே, புதிய பிக்சல் பட்ஸ் மாடல் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் கூகுள் பிக்சல் பட்ஸ் A சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் I/O 2022 நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தான் டிப்ஸ்டரான ஜான் ப்ரோசர் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ விவரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் - ரியல் ரெட், கார்பன், லிமான்செல்லோ மற்றும் ஃபாக் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த இயர்பட்ஸ் மாடலுக்கான அறிவிப்பு கூகுள் I/O நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறுத. எனினும், இதுபற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் பட்ஸ் A மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என தெரிகிறது. இந்தியாவில் பிக்சல் பட்ஸ் A மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
டுவிட்டர் சமூக வலைதளத்தில் அசத்தலான புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டுவிட்டர் தளத்தில் சர்கில்ஸ் (Circles) என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஷாட்லிஸ்ட் அம்சத்தை போன்றே டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சம் ஆகும். சர்கில்ஸ்-இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் டுவிட்களை பார்க்கவோ, ரிப்ளை செய்யவோ முடியும். இது மட்டுமின்றி டுவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
புது அம்சம் மட்டுமின்றி ரிவைஸ் செய்யப்பட்ட ஹெல்ப் செண்டர் பக்கத்தில் டுவிட்டர் சர்கில் அம்சம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது. இது டுவிட்டர் கம்யூணிடிஸ் அல்லது ப்ரோடெக்டட் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானது ஆகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு சர்கிலை மட்டுமே உருவாக்க முடியும். ஒரு சர்கிலில் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். சர்கிலில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களை சர்கிலை உருவாக்கியவரால் மட்டுமே பார்க்க முடியும். சர்கிலினுள் பதிவிடப்படும் டுவிட்களை ரிடுவிட் செய்ய முடியாது. சர்கில் அம்சம் டுவிட்களை யார் பிடிக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி விடும். எனினும், தகவல்களில் உள்ள மீடியா அல்லது ஸ்கிரீன்ஷாட்களை பயனர்கள் ரி-ஷேர் செய்ய முடியும்.
ஒருமுறை சர்கிலில் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கன்வெர்சேஷனை மியூட் செய்யலாம் என டுவிட்டர் தெரிவித்து உள்ளது.
விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் T சீரிசின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் விவோ T1 ப்ரோ 5ஜி மற்றும் விவோ T1 44W என அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய விவோ ஸ்மார்ட்போன்களிலும் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ T1 44W மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், விவோ T1 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், அதிகபட்சம் 8GB பேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க விவோ T1 44W மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 5000mAh பேட்டரி, 44W சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. விவோ T1 ப்ரோ மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 4700mAh பேட்டரி மற்றும் 66QW சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

விவோ T1 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
- 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 6GB / 8GB ரேம்
- 128GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.79, LED ஃபிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4700mAh பேட்டரி
- 66W ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ T1 44W அம்சங்கள்
- 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB ரேம், 64GB மெமரி
- 8GB ரேம், 128GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5mm ஆடியோ ஜாக்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய விவோ T1 ப்ரோ ஸ்மார்ட்போன் டர்போ பிளாக் மற்றும் டர்போ சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
விவோ T1 44W ஸ்மார்ட்போன் மிட்நைட் கேலக்ஸி, ஸ்டேரி ஸ்கை மற்றும் ஐஸ் டான் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 8 ஆம் தேதி தொடங்குகிறது.






