என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  எலான் மஸ்க்
  X
  எலான் மஸ்க்

  எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் புது சிக்கல் - வெளியான அதிர்ச்சி தகவல்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் புது சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.  டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குகிறார். எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்து இருப்பதை அடுத்து இந்த தகவல் வெளியானது. 

  இதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் அரங்கேற இருக்கும் மாற்றங்கள், பணி நீக்க நடவடிக்கைகள் என டுவிட்டர் நிர்வாகம் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இது தவிர எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து உலக பணக்காரர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த முன்னணி அதிகாரிகளும் தங்களின் கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

  டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாக வாங்கப் போவதாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க இருப்பதை அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மறு பரிசீலனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

   டுவிட்டர்

  இது குறித்து அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த பரிவர்த்தனை குறித்து ஆழமான விசாரணை நடத்துவது பற்றி அமெரிக்க பெடரல் வர்த்தக கூட்டமைப்பு அடுத்த மாதம் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  இந்த விசாரணை நடைபெறும் பட்சத்தில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது மேலும் சில மாதங்கள் வரை தாமதமாகலாம். 

  இதுதவிர டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான பரிவர்த்தனை முழுமை பெறும் பட்சத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  Next Story
  ×