என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டது. பிக்சல் 6a பற்றிய ரெண்டர்கள் மற்றும் புகைப்படங்கள் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தான், தற்போது பிக்சல் 6a மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடல் தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், மே மாத வாக்கில் கூகுள் நிறுவனம் எப்போதும் பிக்சல் a சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவில் சோதனை செய்யப்படுவது பிக்சல் 6a மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் நேரடியாக வெளியிட்ட ஸ்மார்ட்போனாக பிக்சல் 4a இருக்கிறது. கூகுள் தரத்தில் அசத்தலான வெளியான பிக்சல் 4a மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. அதீத வரவேற்பு காரணமாக முன்னணி வலைதளங்களில் பிக்சல் 4a விற்பனை துவங்கிய போதெல்லாம், அடிக்கடி விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தது.
இந்தியாவில் பிக்சல் 6a மாடலை வெளியிடுவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் 2022 I/O நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய பிக்சல் 6a சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் இந்திய வெளியீட்டு விவரங்களையும் இதே நிகழ்வில் எதிர்பார்க்க முடியும்.
போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய கேமிங் ஹெட்செட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போர்டிரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேமிங் ஹெட்செட் ஜெனிசிஸ் என அழைக்கப்படுகிறது. கேமிங் ப்ரியர்களின் கேமிங் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருப்பதாக போர்டிரானிக்ஸ் தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் 'டாக் ஒன்' எனும் பெயரில் போர்டபில் வயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கேமிங் ஹெட்செட் மாடலை போர்டிரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஜெனிசிஸ் மாடல் தொடர்ச்சியாக கேமிங் செய்வோருக்கு ஏற்ப கச்சிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. அசத்தலான ஸ்டைல் மட்டுமின்றி அதிக உறுதியுடன் இந்த ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சேசிஸ் இந்த ஹெட்செட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த ஹெட்செட் உறுதியுடன் இருப்பதோடு எளிதில் வளைக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ள மெமரி ஃபோம் ஹெட் குஷன் மற்றும் இயர் கஃப்கள் நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தும் போதும், அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்கும். மேலும் இது இடையூறை ஏற்படுத்தாது.
ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட்டில் 40mm டிரைவர்கள் உள்ளன. இவை சீரான ஆடியோவை எவ்வித இரைச்சலும் இன்றி வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த ஹெட்செட் FPS ரக கேம்களை விளையாடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதில் உள்ள கஸ்டமைஸ் செய்யக் கூடிய ஆம்னி டைரெக்ஷனல் மைக்ரோபோன், பேக்கிரவுண்ட் சத்தத்தை போக்குகிறது.
புதிய போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் மாடல் பிளாக், கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் அறிமுக சலுகையாக ரூ. 1099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை போர்டிரானிக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் நடைபெறுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய புது தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் சுழலும் (ரோலபில்) ஸ்கிரீன் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எல்.ஜி. நிறுவனம் ரோலபில் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்குள் எல்.ஜி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை விட்டே வெளியேறி விட்டது.
இதுதவிர ஒப்போ நிறுவனமும் ரோலபில் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த கான்செப்ட் போனை 2020 ஆண்டிலேயே காட்சிப்படுத்தி இருந்தது. இதன் வர்த்தக மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

கோப்புப்படம்
இந்த நிலையில் தான் மோட்டோரோலா நிறுவனமும் ரோலபில் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோலபில் ஸ்கிரீன் கொண்ட புது மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது உலகின் முதல் ரோலபில் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. மற்றும் ஒப்போ நிறுவனங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்த சாதனங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் ஃபிளெக்சிபில் ஸ்கிரீனை கொண்டிருக்கும் என்றும் இதனை செங்குத்தாகவும் நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது. காம்பேக்ட் மோடில் ஸ்கிரீனின் மூன்றில் ஒரு பகுதியை கீழ்வாக்கில் சுழற்ற முடியும். அந்த வகையில் மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் பாக்கெட்களில் எளிதாக வைத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் 5ஜி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பேட் 5ஜி மாடல் இரண்டு வெவ்வேறு பிராசஸர்களுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு உள்ளது.
அதன் படி ரியல்மி அறிமுகம் செய்யப் போகும் பெரிய சாதனமாக ரியல்மி பேட் 5ஜி மாடல் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த டேப்லெட் மாடலின் ப்ரோடோடைப் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 5ஜி மாடலின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட வேரியண்ட் LCD ஸ்கிரீன், 2.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் மற்றும் 8360mAh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி பேட் 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் உடனே அறிமுகம் செய்யப்படுமா அல்லது ரியல்மி பேட் 5ஜி மாஸ்டர் எக்ஸ்புளோரர் எடிஷன் பெயரில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய வெளியீட்டை உணர்த்தும் தகவல்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4, கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 மாடல்களின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதில் புதிய சாதனங்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
எனினும், முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் EB-BF936ABY மற்றும் EB-BF937ABY மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் பேட்டரிகள் EB-BF721ABY and EB-BR722ABY மாடல் நம்பர்களை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவை தவிர புது சாதனங்கள் பற்றி வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யூஷன் கொண்ட மேம்பட்ட அண்டர்-டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய விவோ X80 மற்றும் விவோ X80 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விவோ X80 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இவை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விவோ X80 மாடலில் FHD+ ஸ்கிரீன், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸரும், விவோ X80 ப்ரோ மாடலில் குவாட் HD+ ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ X80 அம்சங்கள்:
- 6.78 இன்ச் 2400x1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, MEMC
- 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்,
- மாலி -G710 10-core GPU
- 12GB LPDDR5 ரேம்,
- 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED ஃபிளாஷ், OIS
- 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
- 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.98
- 32MP செல்பி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
- யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
- 4500mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங்
விவோ X80 ப்ரோ அம்சங்கள்:
- 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் HD+ E5 10-பிட் AMOLED LTPO ஸ்கிரீன், 1-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், MEMC
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்
- அட்ரினோ 730 GPU / மாலி -G710 10-core GPU
- 12GB LPDDR5 ரேம்,
- 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.57, LED ஃபிளாஷ், OIS
- 48MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.85
- 32MP செல்பி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
- 4700mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
விவோ X80 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் X80 ஸ்மார்ட்போன் அர்பன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் 12GB + 256GB மெமரி ஆப்ஷனில் கிடைக்கின்றன. விவோ X80 மாடல் விலை 800 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 61 ஆயிரத்து 615 என்றும் விவோ X80 ப்ரோ மாடல் விலை 1143 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 88 ஆயிரத்து 030 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய விவோ X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டிரீமிங் சாதனம் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் தளத்தில் உள்ள கேம்களை பயன்படுத்த முடியும்.
சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் வழங்குவதற்கென எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் செயலி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் சாதனங்களில் ஃபோர்ட்னைட் கேமினை இலவசமாக விளையாட முடியும் என மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் ஸ்டிரீமிங் ஸ்டிக் தோற்றத்தில் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் அல்லது ரோக்கு போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. பயன்களும் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் போன்றே திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் கேம்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய எக்ஸ்பாக்ஸ் டி.வி. ஸ்டிக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் செயலி அடுத்த 12 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இரு திட்டிங்களின் மூலம் எக்ஸ்பாக்ஸ் பயனர் எண்ணிக்கையை வெகுவாக அதிகப்படுத்த முடியும் என்றே தெரிகிறது.
விவோ நிறுவனம் இந்தியாவில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
விவோ நிறுவனம் தனது Y75 4ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு புது விவோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ Y75 4ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், 8GB ரேம், 128GB மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா மற்றும் 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ Y75 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
- 8GB ரேம்
- 128GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP இரண்டாவது கேமரா
- 2MP மூன்றாவது கேமரா
- 44MP செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4020mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது. அதன்படி புதிய விவோ Y75 4ஜி வேரியண்ட் விலை அதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும். ஐபோன் 13 ஆப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த மாடல் ஆகும். இதில் மேம்பட்ட கேமரா, சிறிய நாட்ச் மற்றும் பல்வேறு அதிரடியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் 13 மாடலை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஐபோன் 13 பேஸ் வேரியண்ட் 128GB மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை வழக்கமாக ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனை ரூ. 44 ஆயிரத்து 477 வரையிலான தள்ளுபடியில் வாங்கிட முடியும். இவ்வாறு செய்ய பல்வேறு சலுகைகளை இணைக்க வேண்டி இருக்கும்.

ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களில் ஒன்று மேபில் ஸ்டோர். இந்தியாவில் மேபில் ஸ்டோர் தற்போது ஐபோன் 13 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 387 வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஐபோன் 11 போன்ற பழைய சாதனங்களை எக்சேன்ஜ் செய்து கூடுதல் தள்ளுபடிகளை பெறலாம். இப்படியாக ஐபோன் 13 மாடலை ரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.
கூடுதல் தள்ளுபடி வேண்டும் என்ற பட்சத்தில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் பைபேக் வேல்யூ சலுகையை கருத்தில் கொள்ளலாம். இதில் ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 24 ஆயிரம் வரை பைபேக் வேல்யூ வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஐபோன் 13 வாங்குவோருக்கு மேபில்ஸ்டோர் கூடுதலாக ரூ. 5 ஆயிரம் போனஸ் வவங்குகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஐபோன் 13 மாடலை ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன், டி.வி. மற்றும் IoT சாதனங்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அமேசான் சம்மர் சேல், ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் கீழ் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இவை ஒன்பிளஸ் 10R, புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் மற்றும் நார்ட் பட்ஸ் மாடல்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 10R மற்றும் 150W சூப்பர்வூக் எண்டியூரன்ஸ் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் 10R 80W சூப்பர்வூக் மாடல்களின் விலை முறை ரூ. 41 ஆயிரத்து மற்றும் ரூ. 36 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளில் ரூ.2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ. 17 ஆயிரம் மற்றும் ரூ. 14 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு 2 மற்றும் PAC-MAN எடிஷன்களுக்கு முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்து ரூ. 1000 தள்ளுபடி பெற முடியும்.

ஒன்பிளஸ் டி.வி. 43 இன்ச் Y1S ப்ரோ மாடல் ரூ. 26 ஆயிரத்து 499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 43 இன்ச் 4K டி.வி. Y1S ப்ரோ மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்களுக்கான பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் டி.வி. Y1, Y1S சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் டி.வி. U1S சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரண்டு புது சலுகைகளுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொண்ட சலுகைகளை வழங்கி வருகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொண்ட பலன்களை அறிவித்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனணும் இதே போன்ற சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகைகள் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டா மட்டும் வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் ஒரு மாதத்திற்கான சலுகையில் அதிக விலைக்கு அதிக டேட்டா வழங்குகிறது. இதே போன்று மூன்று மாத சலுகையிலும் அதிக விலைக்கு அதிக டேட்டா வழங்குகிறது.
புது சலுகை விவரங்கள்
ஏர்டெல் ரூ. 399 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ. 839 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்கள் வேலிடிட்டி
இரண்டு ஏர்டெல் சலுகை விவரங்களும் ஏர்டெல் வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் அனைத்து செக்பாயிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் எட்ஜ் 30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் மாடலாக இருக்கும். புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அளவில் 6.79mm மெல்லியதாக இருக்கும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. மேலும் இது உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது.

மோட்டோ எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 8GB ரேம்
- 128GB / 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
- 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
- 2MP டெப்த் சென்சார், f/2.4
- 32MP செல்ஃபி கேமரா, f/2.25
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
- யு.எஸ்.பி. டைப் சி
- 4020mAh பேட்டரி
- 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்
புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ரிலைன்யஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.






