search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    மோட்டோ எட்ஜ் 30
    X
    மோட்டோ எட்ஜ் 30

    அதிரடி அம்சங்களுடன் விரைவில் இந்தியா வரும் புது மோட்டோ ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய  மிட் ரேன்ஜ் எட்ஜ் 30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் மாடலாக இருக்கும். புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அளவில் 6.79mm மெல்லியதாக இருக்கும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. மேலும் இது உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. 

     மோட்டோ எட்ஜ் 30

    மோட்டோ எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
    - அட்ரினோ 642L GPU
    - 8GB ரேம்
    - 128GB / 256GB மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
    - 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
    - 2MP டெப்த் சென்சார், f/2.4
    - 32MP செல்ஃபி கேமரா, f/2.25
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4020mAh பேட்டரி
    - 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

    புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ரிலைன்யஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    Next Story
    ×