search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2T ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2T ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2T விவரங்கள் மற்றும் ரெண்டர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் சாதனங்களையும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    புதிய நார்டு 2T மாடல் ஃபிளாக்‌ஷிப் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் அறிமுகம் செய்து இருக்கும் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒன்பிளஸ் நார்டு 2T

    ஒன்பிளஸ் நார்டு 2T எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.43 இன்ச் FHD+ ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர்
    - ARM G77 MC9 GPU
    - 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 3.1) மெமரி
    - 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், OIS
    - 8MP அல்ட்ரா வைடு கேமரா
    - 2MP மோனோ கேமரா
    - 32MP செல்பி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz) 2X2 MIMO, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4500mAh பேட்டரி
    - 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் 

    புதிய ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 635 என துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடும் இதே தினத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

    இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். 5ஜி வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. திட்டமிட்டப்படி அனைத்து பணிகளும் நடைபெறும் பட்சத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி உள்ளிட்டவை இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். 

    இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியாக முட்டுக் கட்டையாக இருப்பது ஸ்பெக்ட்ரம் ஏலம் மட்டும் தான். மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. முன்னதாக டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

     5ஜி

    எதுவாயினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் அதி வேகமாக நடைபெற்று விடும். இதே நிலை மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் பொருந்தாது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்னமும் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 4ஜி சேவைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே 4ஜி கோர் உருவாக்கி விட்டது. இதனை உருவாக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சி மையம், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ரெண்டர்களை தொடர்ந்து, Z ப்ளிப் 4 மாடலுக்கான கேட் சார்ந்த ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் சாம்சங் ப்ளிப் போனின் புது மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    கேலக்ஸி Z ப்ளிப் 4
    Photo COurtesy: @OnLeaks

    அதன்படி புது கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் கேமரா மாட்யூல் சற்றே வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் 120Hz டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 3700mAh பஏட்டரி வழங்கப்படலாம். முந்தைய கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலில் 3300mAh பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத்துடன் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 போன்ற மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம். இந்த பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான பிக்சல் பட்ஸ் ப்ரோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    கூகுள் நிறுவனம் ஒருவழியாக புது பிக்சல் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை 199 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. விற்பனை ஜூலை மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ கூகுள் நிறுவனத்தின் புதிய ஆடியோ சாதனம் ஆகும். இதில் 11mm ஸ்பீக்கர் டிரைவர், ANC வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6-கோர் ஆடியோ சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூகுள் உருவாக்கிய அல்காரிதம்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன. மேலும் இதன் ஆடியோ அனுபவத்தை கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக ஆடியோ குழு உருவாக்கி இருக்கிறது.

     கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ

    தலைசிறந்த ANC அனுபவத்தை வழங்கும் நோக்கில் நியூரல் பிராசஸிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெளிப்புற சத்தத்தை மிக குறைந்த லேடன்சியிலும் கண்டறியும். பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலில் டிரான்ஸ்பேரன்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற சத்தத்தை பயனர் விருப்பப்படி கேட்க வழி செய்யும். 

    அமெரிக்காவில் புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 21 ஆம் தேதி துவங்குகிறது. கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல்: கோரல், ஃபாக், சார்கோல் மற்றும் லெமன்கிராஸ் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய புரோஜெக்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டு ஜெப்ரானிக்ஸ், ZEB-PixaPlay 11 எனும் பெயரில் புதிய புரொஜெக்டர்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது பயனருக்கு திரையரங்கு போன்ற பெரிய திரை அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறது.

    நீண்ட பணிநாட்கள், மனஅழுத்தம் மிகுந்த மீட்டிங் மற்றும் தினசரி வேலைகள் முடிந்தவுடன், விருப்பப்படி உங்களுக்கு பிடித்த திரைப்படத்தைப் பார்த்து, ஓய்வெடுக்கலாம், அடுத்த ஒரு வார பணிகளுக்கு உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இது உதவும்.

    புதிய புரொஜெக்டர் கொண்டு 381cms அளவுள்ள பெரிய திரையில் நீங்கள் பார்க்கும் அனுபவத்தை உயர்த்தும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் மகத்தான அனுபவத்தைப் பெற முடியும். தெளிவான காட்சிகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், தொடர்கள், ஆன்லைன் கற்றல் வகுப்புகள், கேம்கள் மற்றும் பலவற்றை பார்க்கலாம். 

    அதன் கையடக்கமான மற்றும் இலகுரக வடிவமைப்பு அதை எடுத்துச் செல்லவும் சவுகரியமான சாதனமாக மாற்றுகிறது. அத்துடன் இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உள்ளது. புரொஜெக்டரில் 720p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080p FHD ஆதரவும் உள்ளது. எனவே நீங்கள் அசத்தலான காட்சிகள், கூரான, மிகத் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லலாம். 

     ஜெப்ரானிக்ஸ் புரோஜெக்டர்

    நீங்கள் பார்க்கும் காட்சிகளில் சிறந்த ஒலியை வழங்கும் வகையில் புரொஜெக்டரில் இன்பில்ட் ஸ்பீக்கர் இருப்பதால், காட்சிகளுடன் ஆடியோ அனுபவத்தையும் பெற்று மகிழலாம். முழுமையான ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு, Zebronics-ன் பரந்த அளவிலான இணக்கமான மாடல்களில் இருந்து ஸ்பீக்கரை கூடுதலாக வாங்கிக் கொள்ளலாம்

    LED ப்ரொஜெக்டரில் MicroSD, AV-இன்/AUX அவுட், USB, HDMI போன்ற பல கனெக்டிவிட்டிக்கள் உள்ளன. மீடியா பிளேபேக்கில் USB பென் டிரைவ் மற்றும் மைக்ரோ SD கார்டு வசதி உள்ளது. வீடியோ உள்ளீடு HDMI மூலம் கொடுக்கப்பட முடியும்.

    பவர் பேங்க்குடன் இணக்கமாக இருப்பதால் விற்பனைக்கு கிடைக்கும் மற்ற புரொஜெக்டர்களில் இருந்து இது தனித்து நிற்கிறது. உங்கள் பொழுதுபோக்கை நீங்கள் எங்கும் எடுத்துச் சென்று பவர் பேங்க் மூலம் இயக்கலாம், இருப்பினும் இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் எல்லா வகையிலும் மக்களுக்கு பிரீமியம் அனுபவத்தை அளிக்கும்.

    இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ZEB-PixaPlay 11 புரொஜெக்டர் அமேசான் வலைதளத்தில் ரூ. 6 ஆயிரத்து 299 விலையில் கிடைக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் 30 மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10 பிட் கலர் ஸ்கிரீன், HDR10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் பக்கவாட்டு பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோட்டோரோலா எட்ஜ் 30

    மோட்டோரோலா எட்ஜ் 30 அம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
    - அட்ரினோ 642L GPU
    - 6GB/ 8GB LPDDR5 ரேம்
    - 128GB UFS 3.1 மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
    - 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2 (2.5cm மேக்ரோ ஆப்ஷன்)
    - 2MP டெப்த் சென்சார், f/2.4
    - 32MP செல்பி கேமரா, f/2.25
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4020mAh பேட்டரி
    - 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் மீடியோர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெற முடியும்.

    ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் உங்களின் மாடலும் இடம்பெற்றுள்ளதா என பாருங்கள்.


    ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கஸ்டம் ஓ.எஸ். ஸ்கின் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில், இந்தியாவில் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். பெறும் முதற்கட்ட ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ இருக்கின்றன. ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவதை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனை பயனர்கள் ஒன்பிளஸ் ஃபோரம் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

     ரியல்மி GT 2 ப்ரோ

    இது முதற்கட்ட பீட்டா வெர்ஷன் என்பதால் மிக முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ்.- முதற்கட்டமாக ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சோதனை செய்யப்பட இருக்கிறது. வரும் மாதங்களில் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 13 ஸ்கின் வெளியிடப்படும்.

    ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் முதற்கட்ட பீட்டா வெர்ஷன் ஆகும். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. 4 ஸ்கின் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. ரியல்மி GT 2 ப்ரோ மாடலை தொடர்ந்து ரியல்மி GT, ரியல்மி GT நியோ 3, ரிய்மி 9 ப்ரோ பிளஸ் மற்றும் பல்வேறு இதர மாடல்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய PS5 அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    சோனி PS5 கேமிங் கன்சோல் அடுத்த விற்பனை நாளை (மே 13) நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு புதிய PS5 அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஸ்டாக் தட்டுப்பாடு பிரச்சினையில் சோனி சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக குறைந்த யூனிட்கள் அவ்வப்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு சோனி PS5 அடுத்த விற்பனை நாளை நடைபெற இருக்கிறது.

    விற்பனைக்கு முன்பே இதனை வாங்குவதற்கான முன்பதிவுகள் அமேசான், ஷாப் அட் எஸ்.சி., கேம்ஸ்திஷாப், க்ரோமா, ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் என பல்வேறு முன்னணி தளங்களில் நடைபெற்று வருகிறது. சோனியின் புதிய PS5 கேமிங் கன்சோல் விற்பனை நாளை மதியம் சரியாக 12 மணிக்கு துவங்க இருக்கிறது. முந்தைய விற்பனைகளை போன்றே இந்த முறையும் விரைவில் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் சோனி PS5 ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆன டிஸ்க் எடிஷன் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் மற்றொரு வேரியண்ட் ஆன PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வலைதளங்களில் PS5 மாடலுடன் கிரான் டூரிஸ்மோ 7 கேம் சேர்த்து ரூ. 52 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி S22 மாடலின் புது நிறத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் புதிதாக பின்க் கோல்டு நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இதுவரை மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தான் இந்த ஸ்மார்ட்போனின் புது நிறம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S22 மாடலில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8GB+128GB மற்றும் 8GB+256GB என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி S22

    புதிய பின்க் கோல்டு நிறம் மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் தற்போது- கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. புதிய பின்க் கோல்டு நிற சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் பின் கோல்டு நிற 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிற வேரியண்ட்களின் 8GB+256GB மாடல் விலை ரூ. 76 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கூகுள் நிறுவனம் விரைவில் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் டேப்லட் மாடல்களை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் வாட்ச் மாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இதில் வளைந்த ஸ்கிரீன், டோம்டு டிசைன் உள்ளது. இத்துடன் டாக்டைல் கிரவுன் மற்றும் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பேண்ட்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் GPS வசதி, 5ATM அல்லது 50m வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எல்.டி.இ. ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் இதய துடிப்பு சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் மற்றும் ஃபிட்பிட் இண்டகிரேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கூகுள் பிக்சல் டேப்லட்

    பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் மாடல்களுடன் பிக்சல் டேப்லட் மாடலுக்கான டீசரையும் கூகுள் தனது IO நிகழ்வில் வெளியிட்டது. நெக்சஸ் டேப்லெட் விற்பனையை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியதை அடுத்து கூகுள் அறிமுகம் செய்யும் முதல் பிக்சல் சீரிஸ் டேப்லட் மாடல் ஆகும். இந்த ஆண்ட்ராய்டு டேப்லட் கூகுள் டென்சார் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    டீசரின் படி புது பிக்சல் டேப்லட் மாடலில் பெரிய ஸ்கிரீன், மேல்புற பெசலில் கேமரா, பவர் பட்டன், பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, பக்கவாட்டுகளில் குவாட் ஸ்பீக்கர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆண்ட்ராய்டு 13 அல்லது ஆண்ட்ராய்டு 13L ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய வெளியீடும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை I/O நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதில் 6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் சிப்செட், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12.2MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4306mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கூகுள் பிக்சல் 6a

    கூகுள் பிக்சல் 6a அம்சங்கள்:

    - 6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
    - கூகுள் டென்சார் பிராசஸர் 
    - 848MHz மாலி G78 MP20 GPU
    - டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
    - 6GB LPDDR5 ரேம்
    - 128GB (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12.2MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ், OIS
    - 12MP 107° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, PDAF
    - 8MP செல்பி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள்
    - 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4/5 GHz), ப்ளூடூத் 5.2 LE, GPS
    - யு.எஸ்.பி டைப் சி 3.1
    - 4,306 பேட்டரி
    - 18W பாஸ்ட் சார்ஜிங் 

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல், சால்க் மற்றும் சேஜ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 34 ஆயிரத்து 745 ஆகும். அமெரிக்காவில் இதன் விற்பனை ஜூலை 28 ஆம் தேதி தொடங்குகிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பிக்சல் 6a மட்டுமின்றி கூகுள் நிறுவனம் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களுக்கான டீசரையும் கூகுள் I/O நிகழ்வில் வெளியிட்டது. இரு ஸ்மார்ட்போன்களின் டிசைனை வெளிப்படுத்தும் டீசர்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் புதிய தலைமுறை கூகுள் டென்சார் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். வழங்கப்பட இருக்கின்றன.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த 128GB ஐபோன் 13 மாடல் இந்தியாவில் ரூ. 79 ஆயிரத்து 990 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டிற்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி 128GB ஐபோன் 13 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. இந்த விலை அமேசான் தளத்தில் மட்டும் அமலாகி இருக்கிறது. ஆப்பிள் இந்தியா இ-ரிடெயில் விலையை விட இது ரூ. 10 ஆயிரம் குறைவு ஆகும். விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரத்து 800 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் 13 விலை ரூ. 59 ஆயிரத்து 100 விலையிலேயே வாங்க முடியும்.

     ஐபோன் 13

    ஐபோன் 13 128GB மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 58 ஆயிரத்து 900-க்கு கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அல்லது மாத தவணை முறையில் வாங்கும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    128GB மட்டுமின்றி 256GB மற்றும் 512GB மாடல்களுக்கும் அசத்தான விலை குறைப்பு, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 256GB மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 10 ஆயிரத்து 410 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரத்து 800 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 13 256GB மாடலை ரூ. 68 ஆயிரத்து 690 விலையில் வாங்கிட முடியும்.

     ஐபோன் 13

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 256GB மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியும், ரூ. 16 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையாக வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது 256GB ஐபோன் 13 விலை ரூ. 68 ஆயிரத்து 690 என மாறி விடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை தேர்வு செய்யும் போது ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    512GB ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 5 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி 512GB ஐபோன் 13 விலை ரூ. 93 ஆயிரத்து 190 என மாறி விடும். ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஐபோன் வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 16 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது 512GB ஐபோன் 13 விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி விடும். 

    ×