search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனம் பிக் டி.வி. டேஸ் பெயரில் நடத்தும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    சாம்சங் இந்தியா நிறுவனம் “சாம்சங் பிக் டி.வி. டேஸ்” பெயரில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்த விற்பனையில் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் ஹை-எண்ட் டி.வி. மாடல்களை வாங்கும் போது சிறந்த டீல்கள் மற்றும் நிச்சய பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 

     சாம்சங் பிக் டி.வி. டேஸ் சலுகை

    சாம்சங் பிக் டி.வி. டேஸ் 2022 சலுகை விவரங்கள்:

    - 75 இன்ச் அல்லது அதிக இன்ச் கொண்ட சாம்சங் நியோ QLED 8K டி.வி. வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 

    - சாம்சங் நியோ QLED, QLED டி.வி.க்கள், 75 இன்ச் ஃபிரேம் டி.வி.க்கள், க்ரிஸ்டல் 4K UHD டி.வி. 75 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன்

    - சாம்சங் 50 இன்ச் நியோ QLED டி.வி., 50 இன்ச் அல்லது 55 இன்ச் QLED டி.வி. வாங்கும் போது ரூ. 8 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஸ்லிம்ஃபிட் கேமரா பரிசு

    - சாம்சங் 50 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்கும் போது 20 சதவீதம் கேஷ்பேக், மிக எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது

    - சாம்சங் QLED டி.வி. மாடல்களுக்கு 10 ஆண்டுகள் நோ ஸ்கிரீன் பர்ன் இன் வாரண்டி, தேர்வு செய்யப்பட்ட சாம்சங் டி.வி. மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    சாம்சங் அறிவித்து இருக்கும் பிக் டி.வி. டேஸ் சிறப்பு விற்பனை மே 14 ஆம் தேதி துவங்கி ஜூன் 30, 2022 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை நாடு முழுக்க முன்னணி விற்பனை மையங்களில் கிடைக்கிறது. 
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புது Y01 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y01 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது விவோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய விவோ போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 2GB ரேம், 32GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ Y01

    விவோ Y01 அம்சங்கள்:

    - 6.51 இன்ச் HD+ 720x1600 பிக்சல் ஹாலோ ஃபுல் வியு டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
    - 2GB ரேம்
    - 32GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 11.1
    - 8 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5MP செல்பி கேமரா
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 5000mAh பேட்டரி

    புதிய விவோ Y01 ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் மட்டுமே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனின் காப்பர் பிளஷ் நிற வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புது நிறம் தவிர சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. 

     சாம்சங் கேலக்ஸி F23 5ஜி

    சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன்:

    - 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் Snapdragon 750G 8nm பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 4GB / 6GB ரேம்
    - 128GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஓன் யு.ஐ. 4.1
    - டூயல் சிம்
    - 50MP பிரைமரி, f/1.8 
    - 8MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 8MP செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - சாம்சங் பே
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0
    - யு.எஸ்.பி.டைப் சி 
    - 5000mAh பேட்டரி
    - 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி 

    சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் காப்பர் பிளஷ் 4GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை எப்படி பெற வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களின் விலையும் எப்போதும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், முன்னணி வலைதளங்கள், ஆப்பிள் ரிசெல்லர்கள் ஐபோன் மற்றும் இதர சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அவ்வப்போது வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    அந்த வரிசையில் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஐஸ்டோர் இந்தியா தளம் ஐபோன் SE3 மாடலுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. ஐஸ்டோர் இந்தியா சலுகைகளின் படி ஐபோன் SE3 மாடலை அனைத்து சலுகைகளுடன் வாங்கும் போது குறைந்த பட்சமாக ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். 

     ஐபோன் SE 3 சலுகை

    புதிய ஐபோன் SE3 (64GB) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஐஸ்டோர் வழங்கும் கேஷ்பேக் சலுகையை சேர்க்கும் போது ஐபோன் SE3 விலை ரூ. 42 ஆயிரத்து 900 என மாறி விடுகிறது. இத்துடன் ஐபோன் 8 64GB மாடலை நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் போது ஐபோன் SE3 (64GB) மாடலை ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். 

    இதேபோன்று ஐபோன் 8 64GB மாடல் நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், ஐஸ்டோர் கேஷ்பேக் சலுகையும் சேர்த்தால், ஐபோன் SE3 (128GB) மாடலை ரூ. 34 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். எக்சேன்ஜ் இன்றி ஐஸ்டோர் கேஷ்பேக் மட்டும் சேர்க்கும் பட்சத்தில் இதன் விலை ரூ. 47 ஆயிரத்து  900 என மாறும். 

    இந்தியாவில் ஐபோன் SE3 (256GB) மாடல் ரூ. 58 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் ஐஸ்டோர்
    கேஷ்பேக் சேர்த்தால் ஐபோன் SE3 (256GB) மாடல் விலை ரூ. 57 ஆயிரத்து  900 என மாறும். இத்துடன் ஐபோன் 8 64GB மாடலை நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் போது ஐபோன் SE3 டாப் எண்ட் மாடலை ரூ. 44 ஆயிரத்து 990 விலையில் வாங்கிடலாம். 
    ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    ரியல்மி நிறுவனம் மே 18 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரியல்மி நிறுவனத்தின் டெக்லைஃப் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

     ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100

    இதில் 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே, ஸ்கின் மற்றும் பாடி டெம்பரேச்சர் மாணிட்டர், இதய துடிப்பு டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ரியல்மி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்த ரியல்மி டெக்லைஃப் S100 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.

    புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 மாடல் இரண்டு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட டையல், பக்கவாட்டில் நேவிகேஷன் பட்டன், 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு பில்ட் இன் அம்சங்களான ரிமைண்டர்கள், காலண்டர் மற்றும் வானிலை சார்ந்த அப்டேட்கள் வழங்கப்படுகிறது. 

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
     

    மோட்டோரோலா நிறுவனம் மேவன் “Maven” குறியீட்டு பெயரில் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை போன்றே கிளாம்ஷெல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மோட்டோரோலா ரேசர் புது வேரியண்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், டிஸ்ப்ளே துறை வல்லுனரான ராஸ் யங் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும என அவர் தெரிவித்து உள்ளார். முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருந்தது. மெயின் டிஸ்ப்ளே போன்றே கவர் டிஸ்ப்ளேவும் பெரியதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் 2.7 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது. புதிய ரேசர் மாடலில் 3 இன்ச் வரையிலான எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு ஸ்கிரீன்களும் சீனா ஸ்டார் ஒப்டோ-எலெக்டிரானிக்ஸ் உற்பத்தி செய்து வழங்க இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ரேசர் மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    புகைப்படங்களை எடுக்க 32MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிகபட்சமாக 12GB ரேம், 512GB மெமரி, 2800mAh பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டி.வி. சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நிறுவன மாடல்களை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் டி.வி. மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ஹார்டுவேர், தரவுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் காரணமாக போட்டியாளர்களை எதிர்கொள்ள நிலவும் இடைவெளியை போக்க வழி செய்யும் என ஆப்பிள் வல்லுனராக அறியப்படும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார். தற்போது ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

     ஆப்பிள் டி.வி.

    ஆப்பிள் டி.வி. 4K மாடல் 32GB மற்றும் 64GB வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 179 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 870 மற்றும் 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 419 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஹோம் தியேட்டர் இன்ஸ்டால் செய்வோர் மத்தியில் தலைசிறந்த மாடலாக விளங்குகிறது. மேலும் இதில் உள்ள எகெஸ்டண்டட் டிஸ்ப்ளே ஐடெடிபிகேஷன் டேட்டா (EDID) போன்ற அம்சம் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும்.

    EDID அம்சம் செட்-டாப் பாக்ஸ் அல்லது புளூ-ரே பிளேயர் மற்றும் இதர சாதனங்களை எதுபோன்ற டிஸ்ப்ளே பிளக்-இன் செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறியும். ஆப்பிள் டி.வி. HD மாடலிலும் EDID அம்சம் வழங்கப்பட்டு இருந்தாலும், இது 4K மாடலில் உள்ள சில அம்சங்களை செயல்படுத்த திணறும். 
    சாம்சங் அறிமுகம் செய்த ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ப்ளூடூத் சான்றளிக்கும் வலைதளம் மற்றும் பல்வேறு இதர வலைதளங்களில் வெளியாகி இருந்தது. 

    இந்த வரிசையில், கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் புதிய சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடலின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. FCC வலைதள விவரங்களின் படி புது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் SM-M135M எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலில் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனுடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.0, 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது டெப்த் கேமரா, 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் நிறுவனம் உலகம் முழுக்க 32 நாடுகளில் இணைய சேவை வழங்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.


    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான, ஸ்டார்லின்க் தற்போது 32-க்கும் அதிக நாடுகளில் கிடைப்பதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஸ்டார்லின்க் வலைதளத்தில் எந்தெந்த நாடுகளில் இணைய சேவை தற்போது கிடைக்கிறது (Available) என்றும், எங்கு இந்த இணைய சேவையை பெற காத்திருக்க வேண்டும் (Waitlist) என்றும் எங்கு விரைவில் (Coming Soon) வழங்கப்பட இருக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளது. 

    கோப்புப்படம்

    அதன்படி முதற்கட்டமாக ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படும் நாடுகள் பட்டியலில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் Availabale பிரிவில் இடம்பெற்று உள்ளன. இங்கு ஸ்டார்லின்க் சேவையை உடனடியாக பயன்படுத்த முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்ரிக்கா, தென்மேற்கு அமெரிக்க நாடுகளில் விரைவில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது.

    இதை அடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை Coming Soon பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல்  ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உலகம் முழுக்க 32 நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது. இதை அடுத்து இந்தியா போன்ற நாடுகளிலும் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படலாம்.
    மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை பற்றிய புது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


    மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11.6 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டிராய் (மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியும், வயர்லைன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 24 கோடியாகவும் இருக்கிறது.

    வயர்லெஸ் சந்தாதாரர்கள் வளர்ச்சி 0.05 சதவீதமும், வயர்லைன் சந்தாதாரர்கள் வளர்ச்சி 1.31 சதவீதமும் பதிவாகி உள்ளது. டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சேர்த்துள்ளன. இரு நிறுவனங்களும் வயர்லெஸ் மற்றும் வயர்லைன் பிரிவுகளில் புது வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. 

     டிராய்

    இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பிப்ரவரி மாத வாக்கில் 1,66.05 மில்லியனில் இருந்து மார்ச் மாதத்தில் 1,166.93 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. இதில் நகர பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 64.77 கோடியில் இருந்து 64.71 கோடியாக சரிந்துள்ளது. ஊரக பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 51.82 கோடியில் இருந்து 51.98 கோடியாக அதிகரித்துள்ளது.

    மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியில் இருந்து 114.15 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பங்கும் உள்ளடக்கியது ஆகும். ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதத்தில் 22.55 லட்சம் புது பயனர்களையும், ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புது பயனர்களையும் எட்டியுள்ளது. 

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 28.18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் முறையே 1.27 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 101 பயனர்களை இழந்துள்ளன. 
    ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர் வெளியிடப்பட்டது. மேலும் நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நார்சோ 50 சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்படுகிறது. இது அந்த பிரிவில் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். 

    டீசரில் புது ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டிமென்சிட்டி 920 பிராசஸர் கொண்டு அறிமுகமான ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகும். எனினும், இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 990 என்றே தொடங்குகிறது. 

    அந்த வகையில், நார்சோ 50 ஸ்மார்ட்போன் விலை இதைவிட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் மற்றும் 5 அடுக்கு கூலிங் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை பெருமளவு குறைக்க வழி செய்யும். இத்துடன் கேமிங் அனுபவமும் இந்த மாடலில் சிறப்பானதாகவே இருக்கும். 

    கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800u பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய நார்சோ 50 சீரிசில் அதிநவீன மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் நார்சோ ஸ்மார்ட்போன்களிலேயே இது மிகவும் மெல்லிய மாடல் என ரியல்மி தெரிவித்து உள்ளது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5i மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி நார்சோ 50 5ஜி

    ரியல்மி நார்சோ 50 5ஜி / Q5i அம்சங்கள்:

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4GB / 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
    - 13MP பிரைமரி கேமரா, f/2.2, LED ஃபிளாஷ்
    - 2MP 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 8MP செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 33W பாஸ்ட் சார்ஜிங்
    வி நிறுவனம் மேற்கொண்ட 5ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மேற்கொண்ட 5ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்தகைய வேகம் வி நிறுவனம் நடத்திய சிங்கில் டெஸ்ட் டிவைஸ்-இல் கிடைத்து உள்ளது. வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் சொந்தமாக 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.

    எரிக்சன் மேசிவ் MIMO ரேடியோ, எரிக்சன் கிளவுட் நேட்டிவ் டூயல் மோட் 5ஜி கோர்,  மற்றும் NR-DC மென்பொருளில் மிட்-பேண்ட் மற்றும் ஹை-பேண்ட் 5ஜி டிரையல் ஸ்பெக்ட்ரத்தில் சோதனை நடத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் வி நிறுவனம் 5ஜி சோதனையை குஜராத் பகுதியில் மேற்கொண்டது. இதற்காக வி நிறுவனம் நோக்கியாவுடன் இணைந்து இருந்தது.

     5ஜி

    வணிக நெட்வொர்க்கில் 5ஜி சேவையை வெளியிடும் போது, வி நிறுவனம் லேடன்சி-சென்சிடிவ் மற்றும் வழக்கத்தை விட பெருமளவு இணைய சேவையை கோரும் தரவுகளான ஏ.ஆர்./வி.ஆர். மற்றும் 8K வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இது 5ஜி ஸ்டாண்ட்அலோன் NR-DC மென்பொருள் இருப்பதால் சாத்தியமாகும். 

    இத்துடன் பயனர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு தலைசிறந்த பயன்பாடுகளை வழங்கும். முன்னதாக பூனேவில் வி தனது 5ஜி சோதனையை நடத்தி இருந்தது. அப்போது 4Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக வி அறிவித்து இருந்தது. இந்த சோதனையின் போது அரசு அளித்து இருந்த ஸ்பெக்டரத்தையே வி பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×