search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பிடிரான் நிறுவனத்தின் புதிய டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளரான பிடிரான், இந்தியாவில் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் என அழைக்கப்படும் புது நெக்பேண்ட் இயர்போன் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலை முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும். தலைசிறந்த ஹார்டுவேர் மட்டுமின்றி அசத்தலான தோற்றம் கொண்டிருக்கும் பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் நெக்பேண்ட் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. பிடிரான் நிறுவனத்தின் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பம் மேம்பட்ட சவுண்ட் மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

     பிடிரான் டன்ஜெண்ட் அர்பன்

    இந்த நெக்பேண்ட் இயர்போன் மாடலில் 10mm டிரைவர்கள் உள்ளன. இத்துடன் ட்ரூ சோனிக் பேஸ் பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் அதிவேக கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.3 ஆப்ஷன் உள்ளது. புதிய டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் 400mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கும். இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கிறது. மேலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. 

    பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல்- பேவ் பிளாக், ஓசன் கிரீன் மற்றும் மேஜிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய பிடிரான் நெக்பேண்ட் இயர்பட்ஸ் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம். முதற்கட்டமாக இந்த மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

    ரெட்மி நோட் 11T சீரிசில் நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சீன சந்தையில் மே 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் கேமரா பம்ப் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களை ரெட்மி டீசர் வாயிலாக ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இந்திய சந்தையில் ஏற்கனவே ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளன.

    அதன் படி ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 22041216UC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், மாலி G610 MC6 GPU, ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் சூட், 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். போன்ற அம்சங்களை வழங்கப்படலாம்.

     ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ்

    ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 6GB+128GB மெமரி, 8GB+128GB மெமரி, 8GB+512GB மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8GB+128GB மெமரி, 8GB+256GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 12GB வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம். 

    மற்ற அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் மாடல்களிலும் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இவை புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும். 
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வில் புதிய ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் ஆப்பிளஅ நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வாட்ச் 8, பட்ஜெட் விலையில் வாட்ச் SE மற்றும் புதிய வாட்ச் எக்ஸ்டிரீம் எடிஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபோன் 14 அறிமுக நிகழ்விலேயே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

     ஆப்பிள் வாட்ச் 7

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உயரமான ப்ரோபைல், சிறப்பான கேமரா மாட்யுல்கள் இடம்பெற்று இருக்கலாம். இரு ப்ரோ மாடல்களிலும் மூன்று கேமரா சென்சார்கள், 48MP வைடு, 12MP அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலில் 8K வீடியோ வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 8GB ரேம், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை கணக்கிடும் அம்சம் வழங்கப்படலாம். இத்துடன் அதிவேக பிராசஸர், மேம்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் அம்சங்கள், கார் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. 

    சென்ஹெய்சர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சென்ஹெய்சர் நிறுவனத்தின் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 28 மணி நேர பேட்டரி பேக்கப் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    இதில் உள்ள அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் சுற்றுப்புற சூழலில் உள்ள சத்தத்திற்கு ஏற்றவாரு தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இந்த தொழில்நுட்பம் ஆம்பியண்ட் நாய்ஸ்-ஐ கடந்து கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும். ANC அம்சத்தை டி-ஆக்டிவேட் செய்ய பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் டச் கண்ட்ரோல் மூலம் டிரான்ஸ்பேரன்சி மோடிற்கும் ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். 

    சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3
     
    புதிய இயர்பட்ஸ் மாடலில் மூன்று பில்ட்-இன் மைக்குகள் உள்ளன. இவை க்ரிஸ்டல் க்ளியர் காலிங் அனுபவத்தை வழங்குகின்றன. பேட்டரியை பொருத்தவரை புது இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும். இதனுடன் வரும் கேஸ் பயன்படுத்தும் போது மொத்தத்தில் 28 மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். இந்த இயர்பட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் மாடல் பிளாக், வைட் மற்றும் கிராபைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியை ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். புதிய சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் விலை ரூ. 24 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 21 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 1.69 இன்ச் 240x280 பிக்சல் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் உள்ளது.

    110-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கும் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 24 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், பிளாஷ்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. 

    ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100

    3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மாணிட்டர், ப்ளூடூத் 5.1, ஆட்டோமேடெட் ஹார்ட் ரேட் மெஷர்மெண்ட், SpO2 மாணிட்டர், டெம்பரேச்சர் மாணிட்டரிங், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் 260mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    புதிய ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் லேக் புளூ மற்றும் மேஜிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 22 ஆம் தேதி ரியல்மி வலைதளம், அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்க இருக்கிறது.

    விவோ நிறுவனம் X80 மற்றும் X80 ப்ரோ பெயரில் இரண்டு புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாக்‌ஷிப் X80 மற்றும் X80 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.78 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் வளைந்த E5 AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X80 ஸ்மார்ட்போனில் FHD+ ஸ்கிரீன் மற்றும் ஆப்டிக்கல் கைரேகை சென்சார், விவோ X80 ப்ரோ மாடலில் QHD+ ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 கொண்டுள்ளன. இத்துடன் மூன்று ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக விவோ உறுதி அளித்து இருக்கிறது. 

     விவோ X80

    விவோ X80 அம்சங்கள்:

    - 6.78 இன்ச் 2400x1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்
    - மாலி G710 10-கோர் GPU
    - 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
    - 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
    - ஆணட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED பிளாஷ், OIS
    - 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
    - 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.98
    - 32MP செல்பி கேமரா, f/2.45
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
    - யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
    - 4500mAh பேட்டரி
    - 80W பாஸ்ட் சார்ஜிங் 

     விவோ X80 ப்ரோ

    விவோ X80 ப்ரோ அம்சங்கள்:

    - 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E5 AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
    - அட்ரினோ 730 GPU
    - 12GB LPDDR5 ரேம்
    - 256GB (UFS 3.1) மெமரி
    - ஆணட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.57, LED பிளாஷ், OIS
    - 48MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.85
    - 8MP பெரிஸ்கோப் கேமரா, OIS, f/3.4
    - 32MP செல்பி கேமரா, f/2.45
    - இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
    - 4700mAh பேட்டரி
    - 80W பாஸ்ட் சார்ஜிங்
    - 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

    புதிய விவோ X80 மற்றும் விவோ X80 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விவோ X80 மாடல் அர்பன் புளூ நிறத்திலும் கிடைக்கிறது.

    இந்தியாவில் விவோ X80 ஸ்மார்ட்போனின் 8GB+128GB மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 12+256GB மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் விவோ X80 ப்ரோ 12GB+256GB மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை மே 25 ஆம் தேதி தொடங்குகிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது நார்சோ 50 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் ரியல்மி நார்சோ 50 5ஜி மற்றும் நார்சோ 50 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் அடங்கும். 

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர், 4GB+ 64GB, 4GB+ 128GB மெமரி மற்றும் 6GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, பிளாக் அண்ட் வைட் போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

     ரியல்மி  நார்சோ 50 ப்ரோ 5ஜி

    ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி பிராசஸர், 6GB+ 128GB மெமரி மற்றும் 8GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 4CM மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி 6GB+128GB மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB+128GB மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நார்சோ 50 5ஜி 4GB+64GB மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 4GB+128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றி தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. புது மாற்றத்தின் படி பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறும் போது ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருக்கிறார் என யாருக்கும் நோட்டிபிகேஷன் செல்லாது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    அனைவருக்குான ஸ்டேபில் அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்படும் போது, தேவையற்ற க்ரூப்களில் இருந்து பயனர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வெளியேறி விட முடியும். புது அப்டேட் பற்றிய தகவலை வாட்ஸ்அப் சார்ந்த விவரங்களை மட்டும் வெளியிடும் தனியார் வலைதளம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அதன்படி ஒருவர் வாட்ஸ்அப் க்ரூப்-இல் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த நபர் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட க்ரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும். இதன் படி ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருப்பது க்ரூப்-இல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது. 

    தற்போதைய வெர்ஷனில் யாரேனும் க்ரூப்-இல் இருந்து வெளியேறினால் அனைவருக்கும் அதுபற்றிய நோட்டிபிகேஷன் தெரியும் வகையில் ஆட்டோ ஜெனரேட் செய்யப்பட்ட நோட்டிபிகேஷன் முறை வழங்கப்பட்டு உள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று சீனா சந்தையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியா வர இருக்கிறது.


    ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் நேற்று (மே 17) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடல் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்பட்டது. 

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரமும் அறிவிக்கப்படவில்லை.

     ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை ஒன்பிளஸ் வலைதளத்தில் கண்டதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் முற்றிலும் புது பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் 120Hz LCD ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி, டூயல் சிம் ஸ்லாட், புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
    மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது நாட்டின் முதல் தனித்துவம் மிக்க 5ஜி ஆய்வுக் களம் துவங்கப்பட்டது.


    மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 75-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக நேற்று இந்தியாவின் முதல் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.டெலிகாம் துறையின் மிக முக்கிய மற்றும் அதிநவீன தொழில்நுட்ப பிரிவில் தற்தார்பு கொள்கையை அடைவதில் இது மிக முக்கிய பங்கு என அவர் தெரிவித்தார். 

    நாட்டின் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களம் ஐஐடி மெட்ராஸ் தலைமையில், ஐஐடி டெல்லி, ஐஐடி ஐதராபாக், ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூரு, அப்லைடு மைக்ரோவேவ் எலெக்டிரானிக்ஸ் என்ஜினியரிங் மற்றும் ஆய்வு கூட்டமைப்பு (SAMEER) மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான திறனாய்வு மையம் (CEWiT)  என எட்டு நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     5ஜி

    5ஜி சோதனை களமானது நாட்டின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. இது ரூ. 220 கோடி மதிப்பீட்டில் செய்ல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தில் முதல் அழைப்பு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. 

    இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து இருக்கும் நெட்வொர்க் உபகரணங்களை மத்திய தொலைத் தொடர்பு துறை ஜூலை மாத வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆய்வு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை வெளியீட்டில் மேலும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 மாடல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கி இருப்பதை போன்ற லென்ஸ் தான் புது கேலக்ஸி Z போல்டு 4 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இது குறித்து டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3

    இத்துடன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் டிஸ்ப்ளே, கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன்  கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. 

    கடந்த மாதம் வெளியான தகவல்களில் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 10MP டெலிபோட்டோ கேமரா, 3X ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இதுதவிர 108MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. 
    இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும்.

    ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 அப்டேட் ஒருவழியாக வழங்கப்பட்டது. நார்டு ஸ்மார்ட்போன்களுக்கு புது ஓஏ.எஸ். அப்டேட் ஓவர் தி ஏர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அப்டேட் இந்திய யூனிட்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் ஐரோப்பாவுக்கான நார்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வெளியிடப்பட இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். அப்டேட் உடன் ஏப்ரல் 2022 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் இருந்து வந்த பிழைகளை சரி செய்து, ஸ்மார்ட்போன் இயக்கத்தை மேம்படுத்தி உள்ளது. இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு போன் ஜூலை 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 10.5 வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புது அப்டேட் மூலம் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும். இத்துடன் புது டெக்ஸ்ச்சர்கள் மூலம் டெஸ்க்டாப் ஐகான்கள் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு உள்ளன. டார்க் மோட் தற்போது பல்வேறு லெவல்களில் அட்ஜஸ்ட் செய்யும் வசதியை பெற்று இருக்கிறது.
    ×