என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்
  X
  ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

  விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று சீனா சந்தையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியா வர இருக்கிறது.


  ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் நேற்று (மே 17) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடல் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்பட்டது. 

  ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரமும் அறிவிக்கப்படவில்லை.

   ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

  டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை ஒன்பிளஸ் வலைதளத்தில் கண்டதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் முற்றிலும் புது பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

  அம்சங்களை பொருத்தவரை புது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் 120Hz LCD ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி, டூயல் சிம் ஸ்லாட், புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

  இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
  Next Story
  ×