என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  மோட்டோரோலா ரேசர்
  X
  மோட்டோரோலா ரேசர்

  பெரிய கவர் டிஸ்ப்ளே, அசத்தலான புது அம்சங்களுடன் உருவாகும் 2022 மோட்டோ ரேசர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
   

  மோட்டோரோலா நிறுவனம் மேவன் “Maven” குறியீட்டு பெயரில் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை போன்றே கிளாம்ஷெல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மோட்டோரோலா ரேசர் புது வேரியண்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

  இந்த நிலையில், டிஸ்ப்ளே துறை வல்லுனரான ராஸ் யங் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும என அவர் தெரிவித்து உள்ளார். முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருந்தது. மெயின் டிஸ்ப்ளே போன்றே கவர் டிஸ்ப்ளேவும் பெரியதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் 2.7 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது. புதிய ரேசர் மாடலில் 3 இன்ச் வரையிலான எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு ஸ்கிரீன்களும் சீனா ஸ்டார் ஒப்டோ-எலெக்டிரானிக்ஸ் உற்பத்தி செய்து வழங்க இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ரேசர் மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

  புகைப்படங்களை எடுக்க 32MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிகபட்சமாக 12GB ரேம், 512GB மெமரி, 2800mAh பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  Next Story
  ×