search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கூகுள் பிக்சல் வாட்ச்
    X
    கூகுள் பிக்சல் வாட்ச்

    புது ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல் வாட்ச் மற்றும் டேப்லட் அறிமுகம் செய்யும் கூகுள் - டீசர் வெளியீடு!

    கூகுள் நிறுவனம் விரைவில் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் டேப்லட் மாடல்களை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் வாட்ச் மாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இதில் வளைந்த ஸ்கிரீன், டோம்டு டிசைன் உள்ளது. இத்துடன் டாக்டைல் கிரவுன் மற்றும் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பேண்ட்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் GPS வசதி, 5ATM அல்லது 50m வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எல்.டி.இ. ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் இதய துடிப்பு சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் மற்றும் ஃபிட்பிட் இண்டகிரேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கூகுள் பிக்சல் டேப்லட்

    பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் மாடல்களுடன் பிக்சல் டேப்லட் மாடலுக்கான டீசரையும் கூகுள் தனது IO நிகழ்வில் வெளியிட்டது. நெக்சஸ் டேப்லெட் விற்பனையை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியதை அடுத்து கூகுள் அறிமுகம் செய்யும் முதல் பிக்சல் சீரிஸ் டேப்லட் மாடல் ஆகும். இந்த ஆண்ட்ராய்டு டேப்லட் கூகுள் டென்சார் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    டீசரின் படி புது பிக்சல் டேப்லட் மாடலில் பெரிய ஸ்கிரீன், மேல்புற பெசலில் கேமரா, பவர் பட்டன், பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, பக்கவாட்டுகளில் குவாட் ஸ்பீக்கர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆண்ட்ராய்டு 13 அல்லது ஆண்ட்ராய்டு 13L ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×