search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    நத்திங் லான்ச்சர்
    X
    நத்திங் லான்ச்சர்

    நத்திங் போன் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு - எப்போ தெரியுமா?

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை அதன் நிறுவனர் தனது டுவிட்டர் பதில் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.


    நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 இந்த ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என மார்ச் மாதம் வாக்கில் அறிவித்து இருந்தது. அப்போதே, புதிய நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸரை மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. 

    “144 மில்லியன் டாலர்களை முதலீடாக ஈட்டி இருக்கிறோம். 300-க்கும் அதிகமானோர் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறோம். குவால்காம் டெக்னாலஜீஸ் போன்ற நம்பத்தகுந்த நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். உறங்கி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் போன் 1 மாடலை அறிமுகம் செய்ய தயாராகி விட்டோம்,” என கார்ல் பெய் தெரிவித்து இருந்தார்.



    இந்த நிலையில், புதிய நத்திங் போன் 1 மாடலுக்கான வெளியீட்டு தேதியை கார்ல் பெய் அறிவித்து இருக்கிறார். நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜூன் 9 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். 

    முன்னதாக நத்திங் நிறுவனம் நத்திங் லான்ச்சர் பீட்டா வெர்ஷனை உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டு இருந்தது. நத்திங் லான்ச்சர் பீட்டா நத்திங் ஓ.எஸ். இண்டர்பேஸ் போன் 1 மாடலில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் லான்ச்சர் பீட்டாவில் பெரிய ஐகான்கள், போல்டர்கள், பிஸ்போக் கடிகாரம், வானிலை விட்ஜெட், நத்திங் தீம் கொண்ட வால்பேப்ர்கள், மூன்று ஒரிஜினல் ரிங்டோன்கள் இடம்பெற்றுள்ளன.

    நத்திங் ஓ.எஸ். பீட்டா வெர்ஷன் சாம்சங் கேலக்ஸி S21, சாம்சங் கேலக்ஸி S22, கூகுள் பிக்சல் 5 மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.  விரைவில் இந்த லான்ச்சர் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. 
    Next Story
    ×