என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஒன்பிளஸ்
  X
  ஒன்பிளஸ்

  இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் - விரைவில் வெளியீடு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  ஒன்பிளஸ் பேட் மாடல் இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்டு இருக்கிறது என பிரபல டிப்ஸ்டர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்த டேப்லெட் தற்போது நிறுவனத்தினுள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார். இந்த டிரேட்மார்க் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பம் தவிர இந்த லிஸ்டிங்கில் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

   ஒன்பிளஸ் பேட்
  Photo Courtesy: TechDroider

  மார்ச் மாத வாக்கில் இந்த டேப்லெட்-ஐ உற்பத்தி செய்யும் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட் 2022 முதல் அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஆண்ட்ராய்டு  12L ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஓ.எஸ். டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஓ.எஸ். ஆகும்.

  தற்போது டிரேட்மார்க் பெற்று இருக்கும் நிலையில், ஒன்பிளஸ்  பேட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் சாதனமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த டேப்லெட் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடலுடன் ஒன்பிளஸ் பேட் அறிமுகம் செய்யப்படவில்லை.

  Next Story
  ×