என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  பில் கேட்ஸ்
  X
  பில் கேட்ஸ்

  எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் - பில் கேட்ஸ் கூறிய கருத்தால் புது சர்ச்சை!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் நிலைமை மேலும் மோசம் அடையும் என பில் கேட்ஸ் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.


  டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்க வாங்குகிறார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

  இந்த நிலையில், குறிப்பாக போலி தகவல்களை கையாளும் விதத்தில் டுவிட்டர் நிறுவன பிரச்சினைகள் எலான் மஸ்க் தலைமையின் கீழ் மேலும் மோசமாகும் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார். தி வால் ஸ்டிரீட் ஜர்னல் நடத்திய சி.இ.ஓ. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பில் கேட்ஸ் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.

  கூட்டத்தில் கொடர்ந்து பேசிய பில் கேட்ஸ், ‘‘அவர் அதனை மேலும் மோசமானதாக மாற்றி விடலாம். அது அவரின் போக்கு கிடையாது - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அவரின் சாதனைகள் பெரியது. அந்தந்த துறைகளில் கைத்கேர்ந்த வல்லுனர்களை பணியில் அமர்த்தி இரு நிறுவனங்களில் அவர் வெற்றி பெற்று விட்டார். ஆனால் சமூக வலைதள துறையில் அப்படி வெற்றி பெற்று விட முடியாது. சமூக வலைதள சேவைகளை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்விக்குறி தான்" என்று தெரிவித்து இருக்கிறார். 

   பில் கேட்ஸ்

  ‘‘இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது, ஆனால் எப்போதும் நாம் திறந்த மனதுடன் அனுக வேண்டும், எலான் மஸ்க்-ஐ குறைத்து மதிப்பிடவும் முடியாது," என அவர் மேலும் தெரிவித்தார்.  

  டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை பின்பற்றி வரும் பல கடுமையான திட்டங்களில் மாற்றம் செய்ய எலான் மஸ்க் உறுதி  அளித்து இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் டுவிட்டர் தளத்தில் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கான எலான் மஸ்க்-இன் அணுகுமுறை டுவிட்டர் தளத்தில் தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகளவில் பரவ வழி வகுக்கும் என பில் கேட்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

  இதோடு, “பருவ நிலை மாற்றத்திற்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறேன். இந்த இலக்கை அடைவதில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் எலான் மஸ்க் பற்றி நல்ல விதமாக கூற என்னிடம் எதுவும் இல்லை.  அவர் டுவிட்டர் தளத்தை மோசமான ஒன்றாக மாற்றினால், அப்படியே செய்யட்டும். நான் அதை பற்றி நிச்சயம் பேசுவேன், ஆனால் இப்படித் தான் நடக்கும் என்று மட்டும் கூற மாட்டேன்" என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×