என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
    • இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும்.

    கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும்

    Real Time Speech Translation அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது.
    • ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.

    கூகுள் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்காக ஒரு புதிய பிரத்யேக முதல்-தரப்பு டெஸ்க்டாப் மோட் உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் என அழைக்கப்படும் இந்த அம்சம், இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு 17 உடன் வெளியிடப்படலாம். இது சாம்சங் டெக்ஸ் மற்றும் மோட்டோரோலா கனெக்ட் போன்ற திறன்களை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பயனர்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இடைமுகத்திற்கு இடையில் விரைவாக மாறலாம்.

    ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் துவக்கம்

    சமீபத்தில் ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில், புதிய டெஸ்க்டாப் அனுபவம் பயனர்கள் தங்கள் தொலைபேசி வழியாக பெரிய திரைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். ஸ்மார்ட்போன், குறிப்பாக பிக்சல் மாடல், யுஎஸ்பி டைப்-சி மூலம் லேப்டாப் போன்ற வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அது டெஸ்க்டாப்-போன்ற இன்டர்ஃபேஸ்-ஐ வழங்கக்கூடும்.

    ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட், விண்டோஸ்-ஐ ரீ-சைஸ் செய்து, அவற்றை நகர்த்துதல் போன்ற மல்டி டாஸ்கிங் திறன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ்-க்கு இடையில் மாறுவதற்கான திறன், டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ் மற்றும் இதர நேவிகேஷன் வழங்கும் என்று தெரிகிறது.

    முன்னதாக, இந்த புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 பீட்டா அப்டேட்டில் "எனேபில் டெஸ்க்டாப் எக்ஸ்பீரியன்ஸ் ஃபீச்சர்ஸ்" என்று அழைக்கப்படும் புதிய டெவலப்பர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டது. இதனை இயக்கும் போது, இந்த அம்சம் ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.

    இருப்பினும், அதன் வெளியீடு தாமதமாகலாம். கூகுள் இந்த அம்சத்தின் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐ அப்டேட் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே, இது ஆண்ட்ராய்டு 16 உடன் வராமல் போகலாம். அதற்கு பதிலாக, இந்த அம்சம் இப்போது அடுத்த தலைமுறை பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 17 உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
    • இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.

    சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.

    ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார். 

    • கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
    • கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்த

    முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.

    பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன. 

    கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.

    இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

    கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .

    • பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டது.
    • பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பயனர்கள் தரவுகளை கசியவிட்டதற்காக கூகிள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை (ரூ.11,950 கோடி) அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இதுதொடர்பாக கூகிளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடர்ந்தது. கடந்த சில வாரமாக அவற்றின் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கூகுளுக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.

    பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவைத் தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
    • மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.

    கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும்  வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

    இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.

    Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது. ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 

    • தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
    • மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

    விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

    இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகளில் பல முறையாகப் பாதுகாக்கப்படவில்லை, இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.

    இந்நிலையில் மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும்.

    இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.
    • அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது.

    மெட்டா நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் கண்ணாடிகளான ரே-பான் மெட்டாவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

    உலகளாவிய கண்ணாடி பிராண்டான EssilorLuxottica உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், மெட்டா AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன.  

    இந்த கண்ணாடிகள், "ஹே மெட்டா" என்று சொல்வதன் மூலம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ (Hands Free) ஆக பயனர்கள் கேள்விகளைக் கேட்கவும், நேரடியாக மொழிபெயர்க்கவும், இசையைக் கட்டுப்படுத்தவும், செய்திகளை அனுப்பவும் கூட அனுமதிக்கின்றன.

    இதில் 1080பி வீடியோக்களை (1080p Videos) படமாக்கக்கூடிய 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளன.  ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் புகைப்படங்களைப் எடுக்கவும், வீடியோக்களைப் பதிவு செய்யவும், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் அழைப்புகளைச் செய்யவும் முடியும்.

    இதன் அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது. எனவே இதன் இந்திய விலை ரூ.35,000 முதல் 40,000 க்குள் தொடங்கலாம். 

    • சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.

    ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.

    ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது.

    இதனால் சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.

    இந்நிலையில், நாம் சாட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

    மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

     வெளியிடப்பட்ட தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 ஜி இணைய சேவை மூலம் 2 மணி நேர படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

    இந்த சேவையானது அதி நவீன 50 ஜி பேசிஸ் ஆப்டிகலி நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீனாவின் மற்ற மாகாணங்களிலும் இந்த 10ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.  

    • இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை வைக்கும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

    • டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று எலான் மஸ்க் மாற்றினார்.
    • X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×