என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகையின் வருடாந்திர சந்தா பயன்படுத்துவோருக்கு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோ ஃபைபர் வலைதளத்தில் பிராண்ஸ் முதல் டைட்டானியம் வரையிலான சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜியோ ஃபைபர் பிரான்ஸ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. ரூ. 699 விலையில் கிடைக்கும் பிரான்ஸ் சலுகையில் தற்சமயம் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 250 ஜிபி  டேட்டாவும், கூடுதலாக 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்

    ஜியோ ஃபைபர் சில்வர் சலுகையில் ரூ. 849 கட்டணத்திற்கு வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தேர்வு செய்யும் போது 800 ஜிபி மாதாந்திர டேட்டாவும், கூடுதலாக 200 ஜிபி டேட்டாவும் பெற முடியும். ரூ. 1200 விலையில் கோல்டு சலுகையை தேர்வு செய்வோருக்கு முந்தைய 1000 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 250 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது.

    ஜியோஃபைபர் டைமண்ட் வருடாந்திர  சலுகையில் 4000 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது. பிளாட்டினம் வருடாந்திர சலுகையில் 7500 ஜிபி மாதாந்திர டேட்டா, மாதாந்திர சலுகையில் 2500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டைட்டானியம் சலுகையில் வருடாந்திர சந்தாதாரர்களுக்கு மாதம் 15000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ஆலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.



    தமிழ்நாட்டில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை ஊழியர்களில் சிலருக்கு கொரோனா வைரல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்பட்டது.

    நோக்கியா சார்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்ற விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் மொத்தம் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நோக்கியா

    ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட ஆலையில் பணிகளின் போது சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும், ஆலையில் உள்ள உணவகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    கடந்த சில வாரங்களாக நோக்கியா ஆலை பணிகள் படிப்படியாக துவங்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் விதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி ஆலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்ததாக நோக்கியா தெரிவித்துள்ளது.

    முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவும், தனது ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆலையை மூடப்பட்டது.
    ரெட்மி பிராண்டின் புதிய இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. புதிய இயர்போன்கள் அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக மொத்தம் மூன்று இயர்டிப்கள் வழங்கப்படுகின்றன.

    7.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒரு இயர்பட் எடை 4.1 கிராம் ஆகும். இது தற்சமயம் கிடைக்கும் இயர்போன்களில் மிகவும் எடை குறைந்த மாடல் எனலாம்.

    ரெட்மி இயர்பட்ஸ் எஸ்

    ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் பேட்டரி திறனை சேர்க்கும் போது 12 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ரியல்டெக் RL8763BFR ப்ளூடூத் சிப் கொண்டு என்விரான்மென்ட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. 

    புதிய இயர்பட்ஸ் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை மே 27 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ ஸ்டூடியோ விற்பனையகங்களில் நடைபெற இருக்கிறது.

    முன்னதாக இதே இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தியை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹெட்போன் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின்படி புதிய ஆப்பிள் இயர்போன் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்பட்டாலும், இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ மாடல் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின்படி புதிய ஹெட்போனில் உள்ள சென்சார் காதுகளில் வைக்கப்பட்டுள்ளதா இல்லை, கழுத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து இசையை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு சென்சார் இயர்கப்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. 

    ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ

    இது இயர்கப்கள் எந்த காதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே இந்த ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன் மேக் அல்லது ஐஒஎஸ் சாதனத்துடன் இணைக்கும் போது ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போனிற்கான கஸ்டம் ஈக்வலைசர் செட்டிங்களை இயக்க முடியும். புதிய இயர்போன் லெதர் ஃபேப்ரிக் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26,355 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    கொரோனா பாதிப்பு துவங்கிய முதல் இரு மாதங்களிலேயே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளார்.



    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும், அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மற்றும் ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க் அதிக பலன் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு காலகட்டத்தில் டெக் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால், அமெரிக்காவை சேர்ந்த சுமார் 600-க்கும் அதிக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

    ஜெப் பெசோஸ்

    கொரோனா பாதிப்பு காரணமாக பலர் வேலையை இழந்து, பொருளாதார மதிப்பு கடும் சரிவை கண்ட போதும், இவர்களின் சொத்து மதிப்பு மார்ச் 18 இல் துவங்கி மே 19 ஆம் தேதி-க்குள் ரூ. 32.97 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

    ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து தற்சமயம் அது ரூ. 11.21 லட்சம் கோடியாக இருக்கிறது. இதேபோன்று மார்க் ஜூக்கர்பர்க் சொத்து மதிப்பு 45 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து தற்சமயம் அது 6.07 லட்சம் கோடியாக இருக்கிறது. 

    பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரது சொத்து மதிப்பு முறையே 8.2 சதவீதம் மற்றும் 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் பணக்காரர்கள் பட்டியல் அடங்கிய அறிக்கையை சார்ந்து மேற்கொள்ளப்பட்டது. 
    இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக பணி வழங்க அமேசான் நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
     


    இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு அதிகரித்து வருவதை தொடர்ந்து தட்டுப்பாடு சூழலை தவிர்க்கும் நோக்கில் அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன. தற்சமயம் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் விற்பனை தளங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கின்றன.

    அமேசான்

    சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களையும் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என அமேசான் நிறுவன மூத்த அதிகாரி அகில் சக்சேனா தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கை மூலம் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை மக்கள் எதிர்கொள்ள வழி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    தற்காலிக பணியாளர்கள் அமேசான் மையங்கள் மற்றும் டெலிவரி குழுவில் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமேசான் நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்தும் முடிவினை அறிவித்துள்ளது.
    ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் டீசர் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
     


    ரெட்மியின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இயர்போன்கள் இந்தியாவில் மே 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ப்ளூடூத் இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் ஸ்டான்டர்டு எடிஷன் பிளாக் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக சீன சந்தையில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் இந்த மாடல் அமேசான் இந்தியா தளத்தில் வெளியாக இருப்பதை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் மாடல் அமேசானில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போன் சீனாவில் மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ்

    இதே நிகழ்வில் சியோமி நிறுவனம் பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இவ்விழா மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    சியோமி இந்தியா தலைமை செயல் அதிகாரி மனு குமார் ஜெயின் ரெட்மியின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்படுவதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார். டீசரில் புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தி இருக்கிறது. 

    முந்தைய இயர்போன் போன்று இல்லாமல் புதிய ரெட்மி இயர்டாட்ஸ் எஸ் மாடலில் டூயல் ஹோஸ்ட் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதனால் இரு இயர்பட்களும் மொபைலுடன் ஒரே நேரத்தில் இணைந்து கொள்ளும். இதனால் கூடுதல் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை மக்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க எந்திர பிராணி பயன்படுத்தப்படுகிறது.



    ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இணையத்தில் பிரபலமான ஸ்பாட் எனும் மஞ்சள் நிற ரோபோட் நாய் மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை ஸ்பாட் கண்காணிக்கிறது. ரிமோட் மூலம் இயக்கக்கூடிய இந்த ரோபோட் எந்த விதமான பரப்புகளிலும் மிக சுலபமாக பயணிக்க முடியும். இதை உருவாக்கியவர்கள் இந்த ரோபோட் சக்கரங்களை கொண்ட ரோபோட்களை போன்று இல்லாமல், எல்லா இடங்களிலும் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

    ஸ்பாட்

    ஸ்பாட் ரோபோட்டில் உள்ள கேமராக்கள், அதன் எதிரே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கொள்ளும். இதுதவிர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, "உங்களுக்காகவும், உங்கள் அருகில் இருப்பவர்கள் நலனுக்காகவும் தயவு செய்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும். நன்றி." என தெரிவிக்கிறது. 

    இதுதவிர சென்சார்கள் கொண்டிருக்கும் ஸ்பாட் மக்கள் மீது மோதாமல் இருக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் எனும் நிறுவனம் இந்த ரோபோட்டை உருவாக்கியது. 
    ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ போன்ற தளங்களில் ஆர்டர் கொடுத்தால் மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன.



    ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்ய துவங்கி இருக்கின்றன. மாநில அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின் முதற்கட்டமாக மதுமான டெலிவரி ராஞ்சியில் துவங்கியுள்ளது.

    வரும் நாட்களில் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் இது நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஸ்விக்கியில் மதுபானங்களை விற்க அந்நிறுவனம் செயலியில் வைன் ஷாப்ஸ் எனும் பிரத்யேக பிரிவை துவங்கியுள்ளது. ஜொமாட்டோ செயலியிலும் இதேபோன்ற பிரிவு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்விக்கி ஸ்கிரீன்ஷாட்

    தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க மதுபானங்களை வாங்குவோர் தங்களது வயது சான்று மற்றும் பயனர் சான்றை சமர்பிக்க வேண்டும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. வயது சான்றிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மற்றும் செல்ஃபி ஒன்றும் அனுப்ப வேண்டும். டெலிவரி செய்யப்படும் போது ஒடிபி மூலம் பயனர் சரிபார்க்கப்படுவர்.

    இத்துடன் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவு மதுபானங்களை ஆர்டர் செய்வதை தடுக்கும் நோக்கில் மாநில அரசு விதிகளுக்கு ஏற்ற வகையில் மதுபானத்திற்கு ஆர்டர் ஏற்கப்படும் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

    ஸ்விக்கி போன்று ஜொமாட்டோ நிறுவனமும் மதுபானங்களை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. எனினும், பயனர்களுக்கு வயது அடிப்படையில் மதுபானங்களை எவ்வாறு கண்டறியும் என்ற விவரங்களை ஜொமாட்டோ இதுவரை தெரிவிக்கவில்லை.
    சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகள் நீடித்த பழைய வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



    உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுக்க கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் நிலையில், சிங்கப்பூர் நீதித்துறை வீடியோ கால் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வருகிறது.

    சிங்கப்பூரில் போதை பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட புனிதன் கெனேசன் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக சிங்கப்பூர் நீதிபதி ஜூம் வீடியோ கால் மூலம் தீர்ப்பு வழங்கினார். 

    சிங்கப்பூர் உச்சநீதிமன்றம்

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு நீதித்துறை வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. அதன்படி பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

    அந்த வரிசையில், முதல் குற்ற வழக்கு ஒன்றில் வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
    பிரபல சமூக வலைதள செயலியான டிக்டாக், சர்ச்சை வீடியோவால் கூகுள் பிளே ஸ்டோரில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட நான்கு நட்சத்திர குறியீடுகள் கடந்த சில நாட்களில் படிப்படியாக சரிந்து வருகிறது. டிக்டாக் இந்தியா செயலிக்கு அதன் பயனர்கள் முன்னதாக நான்கு நட்சத்திர குறியீடுகளை வழங்கி இருந்தனர். எனினும். சமீப நாட்களில் நான்கு நட்சத்திர குறியீடுகள் தற்சமயம்  ஒரு நட்சத்திர குறியீட்டுக்கு மாறியுள்ளது. 

    இதுதவிர, டிக்டாக் செயலி அன் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தை நியாயபடுத்துவது போன்ற வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து செயலி மீது எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. 

    டிக்டாக்

    டிரெண்ட் ஆன சர்ச்சை வீடியோவை, டிக்டாக்கில் சுமார் 1.3 கோடி ஃபாளோவர்களை கொண்டிருக்கும் ஃபைசல் சித்திக் என்ற நபர் பதிவேற்றம் செய்திருந்தார். வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து, டிக்டாக் செயலிக்கு தடை கோரியும், அதனை பதிவேற்றம் செய்தவரை நெட்டிசன்கள் ட்விட்டரில் கண்டித்தனர்.

    இவ்வாறு வைரல் வீடியோ ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் பயனர்களின் தரவுகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வரிசையில், கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு தரவுகள் டிக்டாக் விதிகளை மீறியதாக கூறி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

    இதுதவிர விதிகளை மீறும் தரவுகளை பதிவேற்றம் செய்த அக்கவுண்ட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை வேலிடிட்டி இன்றி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகை வேலிடிட்டி பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகையுடன் ஏர்டெல் ரூ. 98 விலை சலுகையையும் மாற்றியமைத்து இருக்கிறது.

    ஏர்டெல் ரூ. 251 விலை சலுகையில் 50 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டா எந்த வேலிடிட்டியும் இன்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோன்று ஏர்டெல் ரூ. 98 சலுகையின் வேலிடிட்டி 98 நாட்களில் இருந்து பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் 251 ஸ்கிரீன்ஷாட்

    ஏர்டெல் ரூ. 98 சலுகையில் 12 ஜிபி டேட்டா  வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்படுகிறது. 

    முன்னதாக ஏர்டெல் ரூ. 2498 விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜீ5 பிரீமியம் சந்தா, ஏர்டெல் செக்யூர் மொபைல் ஆன்டி-வைரஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
    ×