search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டாக்
    X
    டிக்டாக்

    பிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்

    பிரபல சமூக வலைதள செயலியான டிக்டாக், சர்ச்சை வீடியோவால் கூகுள் பிளே ஸ்டோரில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட நான்கு நட்சத்திர குறியீடுகள் கடந்த சில நாட்களில் படிப்படியாக சரிந்து வருகிறது. டிக்டாக் இந்தியா செயலிக்கு அதன் பயனர்கள் முன்னதாக நான்கு நட்சத்திர குறியீடுகளை வழங்கி இருந்தனர். எனினும். சமீப நாட்களில் நான்கு நட்சத்திர குறியீடுகள் தற்சமயம்  ஒரு நட்சத்திர குறியீட்டுக்கு மாறியுள்ளது. 

    இதுதவிர, டிக்டாக் செயலி அன் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தை நியாயபடுத்துவது போன்ற வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து செயலி மீது எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. 

    டிக்டாக்

    டிரெண்ட் ஆன சர்ச்சை வீடியோவை, டிக்டாக்கில் சுமார் 1.3 கோடி ஃபாளோவர்களை கொண்டிருக்கும் ஃபைசல் சித்திக் என்ற நபர் பதிவேற்றம் செய்திருந்தார். வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து, டிக்டாக் செயலிக்கு தடை கோரியும், அதனை பதிவேற்றம் செய்தவரை நெட்டிசன்கள் ட்விட்டரில் கண்டித்தனர்.

    இவ்வாறு வைரல் வீடியோ ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் பயனர்களின் தரவுகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வரிசையில், கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு தரவுகள் டிக்டாக் விதிகளை மீறியதாக கூறி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

    இதுதவிர விதிகளை மீறும் தரவுகளை பதிவேற்றம் செய்த அக்கவுண்ட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×