என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
நீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
ஊரடங்கு உத்தரவால் மாணவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடக்கூட அனுமதிக்க முடியவில்லை. எனவே அவர்கள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது கண்களை கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில் குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும். முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் டி.வி. அதிகநேரம் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக அமர்ந்து கொண்டு செல்போனை கையில் வைத்து கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதை தவிப்பது நல்லது.
வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் வெப் சேவையிலும் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் வெப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியை பயன்படுத்த முடியும்.

இதற்கு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும். கணினியில் வாட்ஸ்அப் திறந்ததும், ரைட் க்ளிக் செய்து இன்ஸ்பெக்ட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ததும், திரையின் மேல்புறம் ‘body class=web’ எனும் குறியீடுகளை காண முடியும். அதில் ‘web’எனும் வார்த்தைக்கு பதில் ‘web dark’ என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருக்கும்.
எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் அம்சத்தை செயல்படுத்த தனி ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் உயர் ரக பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் உயர் ரக மாடல்களை வாங்குகின்றனர்.
அந்த வகையில் ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2020 முதல் காலாண்டு வாக்கில் உலகின் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ51 என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 8 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

சாம்சங்கின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஃபிளாக்ஷிப் மாடல் மட்டுமே மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. உலகையே பாதித்து இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றும் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எனினும், கொரோனா பாதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் விலை தற்போதைய கேலக்ஸி ஏ மற்றும் சியோமி ரெட்மி மாடல்களை விட குறைவு தான். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி கவலை கொள்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை ஐபோன் 11 மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதன் உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே ஆறு மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து இருக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்து வழங்கி வரும் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வொர்க் ஃபிரம் ஹோம் ஆட் ஆன் சலுகையின் வேலிடிட்டியை 30 நாட்களாக மாற்றியுள்ளது. கடந்த வார அறிவிப்பின் படி இவற்றுக்கான வேலிடிட்டி குறிப்பிட்ட ஜியோ எண் பேஸ் பிளான் நிறைவுறும் வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.
எனினும், பேஸ் பிளான் சார்ந்த வேலிடிட்டியை மாற்றி ஆட் ஆன் சலுகைக்கான வேலிடிட்டியை 30 நாட்களாக ரிலையன்ஸ் ஜியோ மாற்றியுள்ளது. முன்னதாக ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் ஆட் ஆன் பேக்குகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2399 விலையில் வருடாந்திர பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுக்கு பின் ஒடிடி சேவைகளின் பயன்பாடு சுமார் 200 மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் சூழலில் பொது மக்கள் டிவியை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்நேரமும் வீட்டில் இருப்பவர்கள் டிவி பார்த்து பொழுதை போக்கி வரும் நிலையில், டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஜஸ்ட்வாட்ச் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற சேவைகளின் பயன்பாடு உலகம் முழுக்க கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜீ5 சேவை பயனர்கள் எண்ணிக்கை மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 259 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 204 சதவீதமும், அமேசான் பிரைம் வீடியோ பயனர்கள் எண்ணிக்கை 189 சதவீதம் உயர்ந்துள்ளது.

மற்ற ஸ்டிரீமிங் சேவைகளான ஆல்ட்பாலாஜி 174 சதவீதம், ஜியோசினிமா 161 சதவீதம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 149 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் உள்ளிட்டவை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
ஜஸ்ட்வாட்ச் அறிக்கையின்படி ஸ்டிரீமிங் சேவைகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் பிரபலத்தன்மை உலகளவில் பலமடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது வீடுகளுக்குள் இருக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்டிரீமிங் சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 999 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஜியோ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 599 மற்றும் ரூ. 555 விலையில் தலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே தினமும் 2 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ. 349 விலையில் வழங்குகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் மைஜியோ ஆப், கூகுள் பே அல்லது பேடிஎம் சேவையை கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
ரூ. 999 சலுகையை தவிர ரூ. 599 மற்றும் ரூ. 399 விலையில் மொத்தம் மூன்று சலுகைகளை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 599 மற்றும் ரூ. 399 சலுகைகளில் முறையே 2 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது.
இரு சலுகைகளிலும் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடி இலவச மருத்துவ வசதியை பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், மத்திய சுகாதார துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆன்லைன் வழி இயங்கும் இசஞ்சீவனி ஒபிடி (eSanjeevani OPD) சேவையை துவங்கி உள்ளது. இந்த சேவையை வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்போர், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் இதர நோய்களால் அவதிப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையை மத்திய சுகாதார துறை மற்றும் மாநில அரசாங்கம் சார்பில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவர்கள் அல்லது மருத்துவ அதிகாரிகளை கணினி, லேப்டாப் அல்லது மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
மருத்துவர்கள் உடனான உரையாடல்களை நேரலை வீடியோ கான்பரன்சிங் அல்லது குறுந்தகவல் வழியாக பேச முடியும். முதற்கட்டமாக தமிழ் நாடு, கர்நாடகா, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், உத்தர்காண்ட், பஞ்சாப், பீகார், அசாம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இசஞ்சீவனி சேவையை கொண்டு மருத்துவரை தொடர்பு கொள்வது எப்படி?
1 - முதலில் பயனர் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை வழங்கப்படும் கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
2 - பின் நோயாளி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
3 - இசஞ்சீவனி ஒபிடி சார்பில் நோயாளி ஐடி வழங்கப்படும்
4 - மருத்துவரை சந்திக்க டோக்கன் கோர வேண்டும்
5 - முந்தைய மருத்துவ விவரங்கள் இருப்பின் அவற்றை அப்லோட் செய்ய வேண்டும்
6- நோயாளிக்கு அவருக்கான ஐடி மற்றும் டோக்கன் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்
7 - பின் இசஞ்சீவனி ஒபிடி சார்பில் பயனர் லாக்-இன் செய்ய கோரி எஸ்எம்எஸ் அனுப்பப்படும்
8 - பயனர் தனக்கு அனுப்பப்பட்ட நோயாளி ஐடி கொண்டு லாக் இன் செய்ய வேண்டும்
9 - நோயாளி மருத்துவமனை சென்றதும் வரிசைப்படுத்தப்படுவர், ஒருவேளை வரிசை இல்லையெனில் முதலில் நிறுத்தப்படுவர்
10 - நோயாளிகள் வரிசைக்கு ஏற்ப இசஞ்சீவனி ஒபிடி மருத்துவரை நியமிக்கும்
11 - மருத்துவர் நியமிக்கப்பட்டதும், நோயாளிக்கு கால் நௌ “CALL NOW” எனும் பட்டன் ஆக்டிவேட் செய்யப்படும்
12 - பின் நோயாளி 120 நொடிகளுக்குள் “CALL NOW” பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
13 - இனி “CALL NOW” பட்டன் க்ளிக் செய்த பத்து நொடிகளில் மருத்துவர் வீடியோவில் தோன்றுவார்
14 - மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்வார்
15 - பரிசோதனையின் போது, நோயாளி ஏற்கனவே தனது முந்தைய மருத்துவ விவரங்களை அப்லோடு செய்திருந்தால் அதனை மருத்துவர் பார்ப்பார்
16 - பரிதோனை நிறைவுற்றதும் மருத்துவர் இ-மருந்து சீட்டை வழங்குவார். இதனை நோயாளி தனது திரையில் பார்க்க முடியும்.
17 - இறுதியில் நோயாளி இ-மருந்து சீட்டை டவுன்லோடு செய்ததும், லாக் அவுட் செய்யலாம்.
18 - கால் நிறைவுற்றதும் இசஞ்சீவனி ஒபிடி நோயாளிக்கு இ-மருந்து சீட்டை டவுன்லோட் செய்வதற்கான இணைய முகவரியை எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு தான் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிய வெளிப்புற டிஸ்ப்ளே, அதிக உறுதியான மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா சென்சார்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் மற்றொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஃபோல்டு லைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இது விலை குறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை 1099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் வின்னர் 2 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 256 ஜிபி மெமரி, மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 5ஜி வசதி வழங்கப்படாது என தெரிகிறது.
கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் அலுமினியம் மற்றும் கிளாஸ் கொண்டு உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மெயின் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மிக மெல்லிய கிளாஸ் மூலம் உருவாக்கப்படும் என தெரிகிறது. மேலும் வெளிப்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளே சற்று சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆரோக்யசேது செயலியை 41 நாட்களில் கோடிக்கணக்கான பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.
ஆரோக்யசேது செயலி வெளியிடப்பட்ட 41 நாட்களில் 10 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சியாக வெளியிடப்பட்ட ஆரோக்யசேது செயலி கொரோனா பற்றிய விவரங்களை வழங்குகிறது.
இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.
#AarogyaSetu crossed 100mn registered users. Thank you India! We fight together, we stay safe together! pic.twitter.com/b9zEOSJCOV
— Amitabh Kant (@amitabhk87) May 12, 2020
ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலி அன்று முதல் அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஆரோக்யசேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் டவுன்லோட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியானது பயனர்களுக்கு அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிக்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும்.
முன்னதாக நாட்டில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதுதவிர ஊரடங்கு நிறைவுற்றதும், விமான பயணம் செய்வோரும் ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே சாம்சங் ஸ்மார்ட்போன்களை எளிய நிதி சலுகையில் வாங்க புதிய திட்டத்தை சாம்சங் அறிவித்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்க எளிய நிதி உதவியை பெற முடியும்.
தற்போதைய கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் சலுகையை வீட்டில் இருந்தே பயன்படுத்திக் கொள்ள முடியும். முன்னதாக இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் மட்டும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள விற்பனையாளரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, சாம்சங் அதிகாரி வாடிக்கையாளர் வீட்டிற்கே சென்று மொத்த கடன் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிப்பார்.
பின் கேவைசி வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்க பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். முழுமையாக டிஜிட்டல் முறையில் இயங்கும் இந்த சேவை சாம்சங்கின் மேக் ஃபார் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இதற்கென சாம்சங் நிறுவனம் டிஎம்ஐ ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
தற்சமயம் இந்த சேவை நாடு முழுக்க 300 நகரங்களில் இயங்கி வரும் 12 ஆயிரம் விற்பனையகங்களில் சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் திட்டம் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன் இயர் கப் டிடெக்ஷன் வசதியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஒவர் இயர் பிரீமியம் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஹெட்போன் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய ஹெட்போனில் உள்ள சென்சார் காதுகளில் வைக்கப்பட்டுள்ளதா இல்லை, கழுத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து இசையை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு சென்சார் இயர்கப்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இயர்கப்கள் எந்த காதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும்.

இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே இந்த ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் மேக் அல்லது ஐஒஎஸ் சாதனத்துடன் இணைக்கும் போது ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போனிற்கான கஸ்டம் ஈக்வலைசர் செட்டிங்களை இயக்க முடியும்.
புதிய இயர்போன் லெதர் ஃபேப்ரிக் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் வெளியீடு பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26,355 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் தனது ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகை விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.
வோடபோன் நிறுவனம் தனது ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி ரெட் எக்ஸ் சலுகை விலை மாதத்திற்கு ரூ. 1099 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதே சலுகை ரூ. 999 விலையில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ரெட் எக்ஸ் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்சமயம் வோடபோன் நிறுவனம் தனது ரெட் எக்ஸ் சலுகை விலையை மட்டும் உயர்த்தி இருக்கிறது. மற்ற சலுகைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வோடபோன் ரெட் சலுகைகள் மாதத்திற்கு ரூ. 399 எனும் துவக்க விலையில் இருந்து வழங்கப்படுகிறது.

வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளில் விலை உயர்ந்த ஒன்றாக வோடபோனின் ரெட் எக்ஸ் சலுகை இருக்கிறது. இதில் அன்லிமிட்டெட் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, தேர்வு செய்யப்பட்ட விமான நிலைய லாஞ்ச்கள், தேர்வு செய்யப்பட்ட நாடுகளுக்கு விசேஷ விலையில் ஐஎஸ்டி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 2999 மதிப்புள்ள ஐரோம் எனும் 7 நாட்கள் சலுகையை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.






