என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இசஞ்சீவனி ஒபிடி
    X
    இசஞ்சீவனி ஒபிடி

    வீட்டில் இருந்தபடி இலவச மருத்துவ வசதி - பயன்பெறுவது எப்படி?

    கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடி இலவச மருத்துவ வசதியை பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.



    நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், மத்திய சுகாதார துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆன்லைன் வழி இயங்கும் இசஞ்சீவனி ஒபிடி (eSanjeevani OPD) சேவையை துவங்கி உள்ளது. இந்த சேவையை வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்போர், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் இதர நோய்களால் அவதிப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சேவையை மத்திய சுகாதார துறை மற்றும் மாநில அரசாங்கம் சார்பில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவர்கள் அல்லது மருத்துவ அதிகாரிகளை கணினி, லேப்டாப் அல்லது மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

    மருத்துவர்கள் உடனான உரையாடல்களை நேரலை வீடியோ கான்பரன்சிங் அல்லது குறுந்தகவல் வழியாக பேச முடியும். முதற்கட்டமாக தமிழ் நாடு, கர்நாடகா, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், உத்தர்காண்ட், பஞ்சாப், பீகார், அசாம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    இசஞ்சீவனி ஒபிடி

    இசஞ்சீவனி சேவையை கொண்டு மருத்துவரை தொடர்பு கொள்வது எப்படி?

    1 - முதலில் பயனர் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை வழங்கப்படும் கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்  
    2 - பின் நோயாளி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
    3 - இசஞ்சீவனி ஒபிடி சார்பில் நோயாளி ஐடி வழங்கப்படும்
    4 - மருத்துவரை சந்திக்க டோக்கன் கோர வேண்டும்
    5 - முந்தைய மருத்துவ விவரங்கள் இருப்பின் அவற்றை அப்லோட் செய்ய வேண்டும்
    6- நோயாளிக்கு அவருக்கான ஐடி மற்றும் டோக்கன் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்
    7 - பின் இசஞ்சீவனி ஒபிடி சார்பில் பயனர் லாக்-இன் செய்ய கோரி எஸ்எம்எஸ் அனுப்பப்படும்
    8 - பயனர் தனக்கு அனுப்பப்பட்ட நோயாளி ஐடி கொண்டு லாக் இன் செய்ய வேண்டும்
    9 - நோயாளி மருத்துவமனை சென்றதும் வரிசைப்படுத்தப்படுவர், ஒருவேளை வரிசை இல்லையெனில் முதலில் நிறுத்தப்படுவர்
    10 - நோயாளிகள் வரிசைக்கு ஏற்ப இசஞ்சீவனி ஒபிடி மருத்துவரை நியமிக்கும்
    11 - மருத்துவர் நியமிக்கப்பட்டதும், நோயாளிக்கு கால் நௌ “CALL NOW” எனும் பட்டன் ஆக்டிவேட் செய்யப்படும்
    12 - பின் நோயாளி 120 நொடிகளுக்குள் “CALL NOW” பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
    13 - இனி “CALL NOW” பட்டன் க்ளிக் செய்த பத்து நொடிகளில் மருத்துவர் வீடியோவில் தோன்றுவார்
    14 - மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்வார்
    15 - பரிசோதனையின் போது, நோயாளி ஏற்கனவே தனது முந்தைய மருத்துவ விவரங்களை அப்லோடு செய்திருந்தால் அதனை மருத்துவர் பார்ப்பார்
    16 - பரிதோனை நிறைவுற்றதும் மருத்துவர் இ-மருந்து சீட்டை வழங்குவார். இதனை நோயாளி தனது திரையில் பார்க்க முடியும்.
    17 - இறுதியில் நோயாளி இ-மருந்து சீட்டை டவுன்லோடு செய்ததும், லாக் அவுட் செய்யலாம்.
    18 - கால் நிறைவுற்றதும் இசஞ்சீவனி ஒபிடி நோயாளிக்கு இ-மருந்து சீட்டை டவுன்லோட் செய்வதற்கான இணைய முகவரியை எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பும்.
    Next Story
    ×