என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதற்குள் இத்தனை சதவீத பங்குகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியாவில் இன்னும் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட துவங்கிவிட்டன. 

    மேலும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முதல் காலாண்டில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் 2 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2 சதவீத 5ஜி ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் அதீத வளர்ச்சி பெற்றதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 30 சதவீதம் பங்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து விவோ மற்றும் சாம்சங் உள்ளிட்டவை முறையே 17 மற்றும் 16 சதவீத பங்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    5ஜி

    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகத்தில் 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. திடீர் வளர்ச்சிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

    இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 119 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 
    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகை 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது.



    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருமடங்கு டேட்டா வவுச்சர்கள் மற்றும் இலவச டேட்டா உள்ளிட்டவற்றை அறிவித்தது. அந்த வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய வொர்க் ஃபிரம் ஹோம் வருடாந்திர சலுகை மற்றும் புதிய ஆட் ஆன் டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. 

    புதிய வருடாந்திர சலுகையில் முன்பை விட 33 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோவின் புதிய வருடாந்திர சலுகை விலை ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 2399 சலுகை
    ஜியோ ரூ. 151 சலுகை

    இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் சலுகையை வழங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ மூன்று ஆட் ஆன் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகைகளை ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் அறிவித்துள்ளது. இவற்றில் முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101  விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது. இவற்றின் வேலிடிட்டி பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் இயர்போன் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுக நிகழ்வில் புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ப்ளூடூத் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்தது. பின் இதன் விலையையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்சமயம் இந்த ஹெட்போன்களின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் மே 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மே 11 ஆம் தேதி முதல் இதன் விற்பனை ஆஃப்லைன் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது.

    புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்

    ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் முதல் சாதனமாக ஒன்பிளஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் இருக்கிறது. புதிய வயர்லெஸ் இசட் ஹெட்போனில் மிக எளிதாக பேர் ஆகும் வசதி, குவிக் ஸ்விட்ச், இரு சாதனங்களிடையே மாறிக் கொள்ளும் வசதி, மேக்னெடிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், 110 எம்எஸ் லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டுள்ளது. நெக் பேண்ட் டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போனில் பவர் பட்டன் ஒரு பக்கத்திலும், மற்றொரு புறம் வால்யூம், மியூசிக் / கால் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    குவிக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளதால், இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக் வழங்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்யும் போது 20 மணி நேர பேட்டரி லைஃப் வழங்கும். புதிய இயர்போன் பிளாக், புளு, மின்ட் மற்றும் ஓட் நிறங்களில் கிடைக்கிறது. 
    ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த ஏதுவாக புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.


    கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஆரோக்யசேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியின் சேவையை ஃபீச்சர் போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளிலும் வழங்க ஏதுவாக ஆரோக்யசேது ஐவிஆர்எஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த சேவை துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்த நாடு முழுக்க பொது மக்கள் தங்களது மொபைல் நம்பரில் இருந்து 1921 எனும் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ததும், அரசு சார்பில் மிஸ்டு கால் கொடுத்தவரின் எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவரது ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் கேட்கப்படும்.

    இவற்றுக்கு குடிமக்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு எட்டப்படுகிறது. இதுதவிர பொதுமக்கள் ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதுவரை ஆரோக்யசேது செயலியை நாடு முழுக்க சுமார் ஒன்பது கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.

    ஆரோக்யசேது

    முன்னதாக இந்த செயலியில் தனிநபர் தகவல்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிபுணர் ஆல்டர்சன் என்பவர் கூறியிருந்தார். இவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதன்படி, எந்த தனிநபரின் தகவலாவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஆல்டர்சன் நிரூபிக்கவில்லை. ஆரோக்யசேது செயலி அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்படுகிறது. செயலியில், எந்த தகவல் திருட்டோ, பாதுகாப்பு குளறுபடியோ நடந்ததாக நிரூபிக்கப்படவில்லை.

    பயனாளரின் இருப்பிடம் குறித்த தகவல் பற்றி அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இருப்பிட தகவல், பாதுகாப்பாக சர்வரில் சேமித்து வைக்கப்படுகிறது. எந்த பயனாளராவது, தகவல் திருட்டை உணர்ந்தால், தகவல் தெரிவிக்கலாம். என மத்திய அரசு கூறியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 டெவலப்பர்கள் விர்ச்சுவல் நிகழ்வுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நேரலை ஸ்டிரீம் செய்யப்படுகிறது. இது ஆப்பிள் டெவலப்பர் ஆப் மற்றும் ஆப்பிள் டெவலப்பர் வலைதளத்தில் ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் மற்றும் ஒஎஸ் எக்ஸ் எதிர்கால வெர்ஷனை அறிமுகம் செய்யும். இந்த ஆண்டு ஐஒஎஸ் 14, மேக் ஒஎஸ் 10.16, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்ட அப்டேட்கள் வழங்கப்படுகிறது. 

    புதிய வாட்ச்ஒஎஸ் 7 ஸ்லீப் டிராக்கிங், டக்கிமீட்டர் மற்றும் வாட்ச் ஃபேஸ்களை ஷேர் செய்வது போன்று பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச்

    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இதில் மாணவர்கள் தங்களது சொந்த ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்க வேண்டும். 

    இந்த போட்டியில் உலகம் முழுக்க இருக்கும் மாணவ டெவலப்பர்கள் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டில் மூன்று நிமிடங்களுக்குள் ஓடும் சீன் ஒன்றை உருவாக்கி அனுப்ப வேண்டும். இதில் வெற்றி பெறுவோருக்கு 2020 டெவலப்பர்கள் நிகழ்வுக்கான ஜாக்கெட் மற்றும் பின் செட் வழங்கப்பம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    இந்தியா முழுக்க முடக்கப்பட்டு இருந்த ஆன்லைன் சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஆன்லைன் சந்தை முடங்கியிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது.

    எனினும், இது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் ஆன்லைன் தள நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

    ஆன்லைன் விற்பனை

    அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் மால் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைதளங்களில் படிப்படியாக பணிகள் துவங்கியுள்ளன. இதனால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிப்போர் ஆன்லைன் தளங்களில் முன்பு இருந்ததை போன்று அனைத்துவிதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.

    ஆன்லைன் தளங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற முடியும். மேலும் சிறு வியாபாரம் செய்வோரும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்ய முன்வரும் பட்சத்தில், ஊரடங்கின் போதும் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டாயமாகிறது. செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.



    நாட்டில் பணியாற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளை குறிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போரும் ஆரோக்யசேது செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். 

    இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.

    இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது. பணியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்துகிறார்களா என்பதை அந்தந்த நிறுவன தலைமை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. 

    இதுதவிர ஆரோக்யசேது செயலியை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்போர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 

    ஆரோக்யசேது

    செயலியை பயன்படுத்த இவற்றை உறுதிப்படுத்த வேண்டும்:  

    - செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டதும் சாதனத்தின் லொகேஷன் ஆன் செய்யப்படும்.

    - பின் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும், இதை பதிவிட்டதும் பயன்படுத்த துவங்கலாம்.

    - செயலியில் கேட்கப்படும் ஆப்ஷன்களின் படி பாலினத்தை குறிப்பிட வேண்டும்.

    - இனி உங்களின் முழு பெயர், வயது, செய்யும் தொழில் உள்ளிட்டவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    - அடுத்து கடந்த 30 நாட்களில் உங்களின் வெளிநாட்டு பயண விவரங்கள் கேட்கப்படும். இவற்றுக்கு சரியான பதில்கள் அளிக்க வேண்டும்.

    ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது எப்படி?

    - முதலில் ஆரோக்யசேது செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

    - பின் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தில் ப்ளூடூத் மற்றும் லொகோஷனை ஆன் செய்ய வேண்டும். இனி லொகோஷன் ஷேரிங் ஆப்ஷனை 'ஆல்வேஸ்' என மாற்ற வேண்டும்.

    - ஆரோக்யசேது செயலியில் சுய-சோதனை செய்வதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பயனரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு பயனர் வழங்கும் பதில்களில் கொரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் இந்த விவரம் அரசு சர்வெர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். பின் அரசு சார்பில் இந்த விவரங்களை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    - இதுதவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாரேனும் உங்கள் அருகில் வந்தால், இந்த செயலி எச்சரிக்கை விடுக்கும். இத்துடன் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் ஒருவர் எவ்வாறு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விவரங்களை வழங்குகிறது.
    மொபைல் போன் நம்பர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்றி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை விவரங்களை பார்ப்போம்.



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் 'ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்' (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலியில் மொபைல் போன் நம்பர் இன்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதே சேவை கூகுள் டுயோ வலைதள பதிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. சமீப காலங்களில் இந்த சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

    ஜேன் ட்வீட் ஸ்கிரீன்ஷாட்

    கூகுள் டுயோ செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மற்ற பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. தற்சமயம் இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

    முன்னதாக கூகுள் டுயோ வலைதள பதிப்பில் இந்த சேவை ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. புதிய சேவையில் மின்னஞ்சல் முகவரி கொண்டே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். எனினும், மொபைல் நம்பர் லிண்க் செய்யப்படாத அக்கவுண்ட்கள் காண்டாக்ட் பட்டியலில் காண்பிக்கப்படாமல் இருந்தது.

    கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் வசதி எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங்கை விவோ நிறுவனம் பின்னுக்கு தள்ளியிருக்கிறது.



    2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் செயல்பாடு பற்றிய அறிக்கையை கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. 

    அதன்படி இந்திய சந்தையில் இந்த ஆண்டு முதல் காலாண்டு வாக்கில் சியோமி நிறுவனம் 30 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டாவது இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி விவோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. 

    சாம்சங்

    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகத்தில் 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. திடீர் வளர்ச்சிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

    இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 119 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
    வாடிக்கையாளர்களுக்கு பணம் ஈட்டி தரும் நோக்கில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.



    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற பிஎஸ்என்எல் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது நான்கு சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்து கொடுக்கும் வசதியை பிஎஸ்என்எல் வழங்கி இருந்தது. எனினும், இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

    பின் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்ற எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தன. இந்த வரிசையில், தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.

    மை பிஎஸ்என்எல் செயலிக்கான 2.0.46 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பயனர்கள் மற்ற பிஎஸ்என்எல் அக்கவுண்ட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 4 சதவீதம் கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த சலுகை மே 31 ஆம் தேதி நிறைவு பெறும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. 

    மை பிஎஸ்என்எல் செயலி ஸ்கிரீன்ஷாட்

    ஊரடங்கு காலக்கட்டத்தில் இணைய வசதியற்ற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வெளியில் சென்று ரீடெயில் கடைகளில் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதால், ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் வசதியை பயன்படுத்துவதே ஒற்றை வழியாக இருக்கிறது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் தொகையில் 4 சதவீதம் வழங்குகிறது. இதேபோன்று வோடபோன் ஐடியா நிறுவனம் 6 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை வழங்கும் மத்திய அரசின் ஆரோக்யசேது செயலி டவுன்லோட்களில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.



    கொரோனா தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவல் இடங்களை கண்டறிய ஏதுவாக மத்திய அரசு சார்பில் ஆரோக்கியசேது எனும் செயலி உருவாக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

    இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். ஆரோக்கிய சேது செயலி வெளியானது முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செயலி வெளியான 13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்திருந்த நிலையில், தற்சமயம் டவுன்லோடுகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.

    ஆரோக்யசேது

    ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலி அன்று முதல் அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஆரோக்யசேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் டவுன்லோட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 

    மேலும் இந்த செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்துடன் செயலியை மக்களிடம் கொண்டு சேர்க்க தேவையான அளவு விளம்பரம் செய்யவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியானது பயனர்களுக்கு அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிக்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும். 
    பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வழங்கி வரும் இலவச டேட்டா சலுகை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வொர்க்@ஹோம் பிராட்பேண்ட் சலுகை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி வழங்குகிறது. இதில் தினமும் 5 ஜிபி டேட்டா நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இந்த சலுகை ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பிஎஸ்என்எல் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வொர்க்@ஹோம் சலுகையை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிஎஸ்என்எல் சலுகை

    பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் வொர்க்@ஹோம் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டாவினை நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்குகிறது. 5ஜிபி டேட்டாவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது. 

    மேலும் இதனுடன் மின்னஞ்சல் முகவரி இலவசமாகவும், 1 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித மாதாந்திர கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இத்துடன் இந்த சலுகையை பயன்படுத்த எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை. லேண்ட்லைன் சலுகையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய சலுகைகள் வழங்கப்படுகிறது.
    ×