search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்
    X
    புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்

    ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் இந்திய விற்பனை விவரம்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் இயர்போன் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுக நிகழ்வில் புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ப்ளூடூத் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்தது. பின் இதன் விலையையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்சமயம் இந்த ஹெட்போன்களின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் மே 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மே 11 ஆம் தேதி முதல் இதன் விற்பனை ஆஃப்லைன் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது.

    புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்

    ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் முதல் சாதனமாக ஒன்பிளஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் இருக்கிறது. புதிய வயர்லெஸ் இசட் ஹெட்போனில் மிக எளிதாக பேர் ஆகும் வசதி, குவிக் ஸ்விட்ச், இரு சாதனங்களிடையே மாறிக் கொள்ளும் வசதி, மேக்னெடிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், 110 எம்எஸ் லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டுள்ளது. நெக் பேண்ட் டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போனில் பவர் பட்டன் ஒரு பக்கத்திலும், மற்றொரு புறம் வால்யூம், மியூசிக் / கால் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    குவிக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளதால், இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக் வழங்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்யும் போது 20 மணி நேர பேட்டரி லைஃப் வழங்கும். புதிய இயர்போன் பிளாக், புளு, மின்ட் மற்றும் ஓட் நிறங்களில் கிடைக்கிறது. 
    Next Story
    ×