search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒடிடி சேவை நிறுவன சின்னங்கள்
    X
    ஒடிடி சேவை நிறுவன சின்னங்கள்

    ஊரடங்கில் 200 மடங்கு உயர்வு - வருவாயை வாரி குவிக்கும் ஒடிடி நிறுவனங்கள்

    இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுக்கு பின் ஒடிடி சேவைகளின் பயன்பாடு சுமார் 200 மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் சூழலில் பொது மக்கள் டிவியை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்நேரமும் வீட்டில் இருப்பவர்கள் டிவி பார்த்து பொழுதை போக்கி வரும் நிலையில், டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    ஜஸ்ட்வாட்ச் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற சேவைகளின் பயன்பாடு உலகம் முழுக்க கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஜீ5 சேவை பயனர்கள் எண்ணிக்கை மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 259 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 204 சதவீதமும், அமேசான் பிரைம் வீடியோ பயனர்கள் எண்ணிக்கை 189 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ஜஸ்ட்வாட்ச் வரைபடம்

    மற்ற ஸ்டிரீமிங் சேவைகளான ஆல்ட்பாலாஜி 174 சதவீதம், ஜியோசினிமா 161 சதவீதம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 149 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் உள்ளிட்டவை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 

    ஜஸ்ட்வாட்ச் அறிக்கையின்படி ஸ்டிரீமிங் சேவைகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் பிரபலத்தன்மை உலகளவில் பலமடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது வீடுகளுக்குள் இருக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்டிரீமிங் சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×