என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆரோக்யசேது
    X
    ஆரோக்யசேது

    41 நாட்களில் புதிய மைல்கல் கடந்த ஆரோக்யசேது செயலி

    மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆரோக்யசேது செயலியை 41 நாட்களில் கோடிக்கணக்கான பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.



    ஆரோக்யசேது செயலி வெளியிடப்பட்ட 41 நாட்களில் 10 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சியாக வெளியிடப்பட்ட ஆரோக்யசேது செயலி கொரோனா பற்றிய விவரங்களை வழங்குகிறது. 

    இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.



    ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலி அன்று முதல் அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஆரோக்யசேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் டவுன்லோட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 

    மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியானது பயனர்களுக்கு அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிக்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும். 

    முன்னதாக நாட்டில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதுதவிர ஊரடங்கு நிறைவுற்றதும், விமான பயணம் செய்வோரும் ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×