search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் ஃபைணான்ஸ் பிளஸ்
    X
    சாம்சங் ஃபைணான்ஸ் பிளஸ்

    வீட்டில் இருந்தே சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க புதிய சலுகை அறிவிப்பு

    ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே சாம்சங் ஸ்மார்ட்போன்களை எளிய நிதி சலுகையில் வாங்க புதிய திட்டத்தை சாம்சங் அறிவித்திருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்க எளிய நிதி உதவியை பெற முடியும். 

    தற்போதைய கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் சலுகையை வீட்டில் இருந்தே பயன்படுத்திக் கொள்ள முடியும். முன்னதாக இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் மட்டும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

    சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ்

    புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள விற்பனையாளரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, சாம்சங் அதிகாரி வாடிக்கையாளர் வீட்டிற்கே சென்று மொத்த கடன் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிப்பார். 

    பின் கேவைசி வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்க பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். முழுமையாக டிஜிட்டல் முறையில் இயங்கும் இந்த சேவை சாம்சங்கின் மேக் ஃபார் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இதற்கென சாம்சங் நிறுவனம் டிஎம்ஐ ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

    தற்சமயம் இந்த சேவை நாடு முழுக்க 300 நகரங்களில் இயங்கி வரும் 12 ஆயிரம் விற்பனையகங்களில் சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் திட்டம் வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×