search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி
    X
    ரெட்மி

    அமேசானில் வெளியாகும் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ்

    ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் டீசர் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
     


    ரெட்மியின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இயர்போன்கள் இந்தியாவில் மே 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ப்ளூடூத் இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் ஸ்டான்டர்டு எடிஷன் பிளாக் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக சீன சந்தையில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் இந்த மாடல் அமேசான் இந்தியா தளத்தில் வெளியாக இருப்பதை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் மாடல் அமேசானில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போன் சீனாவில் மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ்

    இதே நிகழ்வில் சியோமி நிறுவனம் பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இவ்விழா மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    சியோமி இந்தியா தலைமை செயல் அதிகாரி மனு குமார் ஜெயின் ரெட்மியின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்படுவதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார். டீசரில் புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தி இருக்கிறது. 

    முந்தைய இயர்போன் போன்று இல்லாமல் புதிய ரெட்மி இயர்டாட்ஸ் எஸ் மாடலில் டூயல் ஹோஸ்ட் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதனால் இரு இயர்பட்களும் மொபைலுடன் ஒரே நேரத்தில் இணைந்து கொள்ளும். இதனால் கூடுதல் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
    Next Story
    ×