என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
டிக்டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்-குக்கு பிறகு டிக்டாக் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.
சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது.

எனினும், இதை ஏற்க மறுத்த அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் 15 ஆம் தேதிக்குள் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
தடையை தவிர்க்கும் வகையில் டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் டிக்டாக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக்டாக் செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பைட்-டேன்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிக்டாக்கில் முதலீடு செய்வது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே கடந்த மாதம் பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக மத்திய அரசு டிக்டாக் வீசாட் உள்பட சீனாவை சேர்ந்த சுமார் 59 செயலிகளை பயன்படுத்த தடை விதித்தது. சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த செயலிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதால் இவை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளை தடை செய்யப்போவதாக அறிவித்து, சமீபத்தில் அதற்கான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் (அதாவது ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்டியது. இதன் காரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் சொத்து மதிப்பு முதல் முறையாக 100 கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் 8,47,969 பங்குகளை டிம் குக் வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு தனது சம்பளத்தின் பகுதியாக டிம் குக் 12.5 கோடி டாலர்களை டிம் குக் பெற்றார். கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலர்களாக அதிகரித்தது.

ஆப்பிள் மட்டுமின்றி பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பும் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பலமடங்கு அதிகரித்தது. மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் நேரத்தை கழித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2 ட்ரில்லியன் (அதாவது இரண்டு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்ட இருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் 1 ட்ரில்லியன் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்தது.
கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் அடங்கிய சுமார் 70 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
இதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியில் இருந்து மற்றவர்களை இழிவுப்படுத்தும் தகவல் அடங்கிய சுமார் 2.25 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 96 லட்சம் அதிகம் ஆகும்.

இத்துடன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த சுமார் 87 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 63 லட்சம் வரை அதிகம் ஆகும்.
தரவுகளை ஆய்வு செய்ய ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அலுவலகத்தில் தரவுகளை ஆய்வு செய்வோர் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதே ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்த காரணமாக கூறப்பட்டது.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகம் செய்து உள்ளது.
கூகுள் சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்று தான். எனினும், இது பொது மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று ஆகும். இதனை முற்றிலும் மாற்ற கூகுள் பீப்பிள் கார்ட்ஸ் எனும் அம்சத்தை துவங்கி இருக்கிறது.
கூகுளின் புதிய பீப்பிள் கார்ட்ஸ் சேவையை கொண்டு பயனர்கள் அவர்களுக்கான விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை உருவாக்கி கொள்ள முடியும். இதனை உருவாக்க பயனற்கள் சைன் இன் செய்து உங்களின் பெயர் அல்லது add me to search என சர்ச் பாக்சில் டைப் செய்ய வேண்டும்.

இனி உங்களின் விவரங்களை கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து உருவாக்கிக் கொள்ள கோரும் தகவல் திரையில் தோன்றும். இதில் உங்களின் விவரங்கள் மட்டுமின்றி, வலைதளங்கள் மற்றும் சமூக வலைதள ப்ரோபைல்களை லின்க் செய்து கொள்ள முடியும். பயனர் விரும்பும் பட்சத்தில் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து கொள்ளலாம்.
ஒரு அக்கவுண்ட்டிற்கு ஒரு கார்டு மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவேளை கார்டு உருவாக்கியவர்கள் அதனை அழித்துவிடும் வசதியும் வழங்கப்படுகிறது. கூகுளின் பீப்பிள் கார்ட்ஸ் அம்சம் மொபைல் சர்ச் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்திலேயே லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் ரஷ்ய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்தில் லீக் ஆனதுடன் பென்ச்மார்க் செயலிகளிலும் லீக் ஆகி இருந்தது.
தற்சமயம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே லீக் ஆகி இருப்பதால், விரைவில் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். புதிய கேலக்ஸி எம்51 சாம்சங் எம் சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மற்றும் கேலக்ஸி எம்01 கோர் மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்திருந்தது.

சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 12 எம்பி அல்ட்ரா வைரடு ஆங்கில் கேமரா
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் சீன சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. சீன சந்தைக்கென ஆப்பிள் விசேஷ கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 மாடலில் லோக்கல் நேவிகேஷன் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய மாடலில் பெய்டௌ நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெய்டௌ வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள ஐபோன் பயனர்கள் நீண்ட காலமாக பெய்டௌ வசதி இல்லாததற்கு கவலை தெரிவித்து வந்தனர். இதனால் புதிய மாடலில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் மாடல்களில் ஜிபிஎஸ் வசதி, குளோனேஸ், கலிலியோ மற்றும் கியூஇசட்எஸ்எஸ் போன்ற நேவிகேஷன் சிஸ்டம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 200 நாடுகள் மற்றும் 10 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக டிக்டாக் தெரிவித்து உள்ளது.
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.
டிக்டாக் மட்டுமின்றி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீசாட் என்ற செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக டிக்டாக் தெரிவித்து உள்ளது. மேலும் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

வீசாட்டின் தாய் நிறுவனமான டென்சென்ட், டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கும் நிர்வாக உத்தரவை தெளிவாக புரிந்து கொள்ள முழுமையான ஆய்வை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளது.
டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கையால் டிக்-டாக்கின் அமெரிக்க வியாபார உரிமத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவில் ஏதாவது மாற்றமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்கள் ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலக நாடுகளை கடுமையாக பாதித்து இருக்கும் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது. இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி இருக்கிறது.
இதன் காரமாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளன. கடந்த ஜூலையில் கூகுள் நிறுவனம், அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லாத பணியாளர்கள் வருகிற 2021ம் ஆண்டு ஜூன் வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்றி கொள்ளலாம் அறிவித்து இருந்தது.

இதேபோன்று ட்விட்டர் நிறுவனமும், காலவரையின்றி தங்களது நிறுவனத்தின் சில பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கு அனுமதி அளித்து இருக்கிறது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.
இத்துடன், வீட்டில் அலுவலகம் அமைக்க தேவையான செலவுகளுக்காக கூடுதலாக ரூ.74,950 ஆயிரம் ஊழியர்களுக்கு நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவையில் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேருடன் பேசும் வசதி வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டீம்ஸ் சேவையில் அடிக்கடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது. இந்த வசதி ஒருபுறம் நடைபெறும் மீட்டிங்களில் வேளை செய்யும்.
இதனால் ஒரே சமயத்தில் ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்கவும், கேட்கவும் முடியும். ஆனால் மீட்டிங்கில் கலந்து கொள்வோர் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. முதற்கட்டமாக இந்த சேவை ஜூலை மாத மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 அப்டேட்களில் அறிவிக்கப்பட்டது.

இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவை ஸ்லாக் சேவைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இருவழி மீட்டிங்கில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிது.
உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் தனுத டீம்ஸ் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படு வருகிறது. இவை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு உதவும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவுகளை பிரபல சமூக வலைதள சேவைகளான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வேக வேகமாக நீக்கி உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாக்ஸ் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் பதிவு ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார்.
தொலைபேசி மூலம் டிரம்ப் அளித்த அந்த பேட்டியில், பள்ளிகளை திறக்கலாம். குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளது. அவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் பெற்றோர்களுக்கும் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் நோயை கொண்டு செல்ல மாட்டார்கள் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.

டிரம்பின் இந்த தகவல் முற்றிலும் தவறான கூற்று என்று மருத்துவ நிபுணர்கள் பலர் கூறினர். இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட அந்த பதிவை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வேக வேகமாக நீக்கிவிட்டன.
கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான தகவலை பதிவிடுவது தங்களது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் கூறியுள்ளன.
ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் தனது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது.
ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ப்ரோ லைட்னிங் புளூ மற்றும் லைட்னிங் ஆரஞ்சு நிற வேரியண்ட்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1, சோனி IMX1471
- 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் லைட்னிங் ரெட் நிற வேரியண்ட் 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






