search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    டிரம்ப் பதிவுகளை வேக வேகமாக நீக்கிய பேஸ்புக், ட்விட்டர்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவுகளை பிரபல சமூக வலைதள சேவைகளான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வேக வேகமாக நீக்கி உள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது  சமூக வலைத்தள பக்கத்தில் பாக்ஸ் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் பதிவு ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். 

    தொலைபேசி மூலம் டிரம்ப் அளித்த அந்த பேட்டியில்,  பள்ளிகளை திறக்கலாம். குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளது. அவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் பெற்றோர்களுக்கும் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் நோயை கொண்டு செல்ல மாட்டார்கள் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது. 

    பேஸ்புக்

    டிரம்பின்  இந்த தகவல் முற்றிலும் தவறான கூற்று என்று மருத்துவ நிபுணர்கள் பலர் கூறினர். இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட அந்த பதிவை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வேக வேகமாக நீக்கிவிட்டன.  

    கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான தகவலை பதிவிடுவது தங்களது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் கூறியுள்ளன.
    Next Story
    ×