என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
     


    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

    புதிய ஐகூ 5 மாடல் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை அனைத்தும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களின் படி இதில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும், இதில் 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     ஐகூ 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்

    முன்னதாக ஐகூ நிறுவனம் தனது 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. ஏற்கனவே இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    ஐகூ இசட்1 5ஜி மாடலில் உள்ள 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றே இந்த தொழில்நுட்பமும் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது. 

    இந்த சார்ஜர் இன்டெலிஜண்ட் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது அதிக வெப்பம் ஆவதை தவிர்க்க செய்கிறது. 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.  
    டிக்டாக் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். 

    உலக அளவில் மிகவும் பிரபலமான குறு விடியோ  செயலியான டிக்டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டது.  இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டேன்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

    டிக்டாக்

    அதன்படி, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. 

    எனினும், டிக்டாக்  செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட்-டேன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

    இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ட்விட்டர் தளத்தில் பிரபலங்களின் அக்கவுண்ட்களை ஹேக் செய்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


    உலகில் குறுந்தகவல்களை பதிவிடுவதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரையில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில், வர்த்தகம் என பல துறை பிரபலங்களும் ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபலங்களான பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் இந்த மாத துவக்கத்தில் ஹேக் செய்யப்பட்டன.

    ட்விட்டர் கணக்குகள் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்ட சம்பம் உறுதியானதும் இந்த செயலில் ஈடுபட்ட நபர்களின் செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

     ட்விட்டர்

    இந்த ஹேக்கிங் ரஷியா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.

    புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளாதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஹூவாயின் ஹானர் பிராண்டு பாப் அப் கேமரா கொண்ட மேஜிக்புக் 15 லேப்டாப் மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

    இந்திய சந்தையில் ஹானர் பிராண்டின் முதல் லேப்டாப் மாடல் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் கொண்டுள்ளது. அலுமினியம் பாடி மற்றும் அஸ்யூர் புளு சேம்ஃபெர் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கும் மேஜிக்புக் 15 மாடலில் இரண்டாம் தலைமுறை ஏஎம்டி ரைசன் 5 பிராசஸர், மேஜிக் லின்க் 2 அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.  

    பாப் அப் வெப் கேமரா கொண்டிருக்கும் மேஜிக்புக் 15 மாடலின் கேமராவை இயக்க கீப்ரோடில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை க்ளிக் செய்தால் கேமரா ஆன் ஆகி விடுகிறது. இத்துடன் லேப்டாப் விவரங்களை பாதுகாக்கும் வகையில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹானர் மேஜிக்புக் 15

    ஹானர் மேஜிக்புக் 15 சிறப்பம்சங்கள்

    - 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் 16:9 டிஸ்ப்ளே
    - ஏஎம்டி ரைசன் 5 3500யு பிராசஸர்
    - ரேடியான் வீகா 8 கிராஃபிக்ஸ்
    - 8 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
    - 256 ஜிபி எஸ்எஸ்டி
    - விண்டோஸ் 10
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - கைரேகை சென்சார் பவர் பட்டன்
    - பாப் அப் பட்டன்
    - மேஜிக் லின்க் 2.0
    - வைபை, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி
    - ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி 3.0 x 1, யுஎஸ்பி 2.0 x 1
    - 42Wh பேட்டரி
    - 65 வாட் டைப் சி பவர் அடாப்டர்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் மேஜிக்புக் 15 மாடல் ஸ்பேஸ் கிரே மற்றும் மிஸ்டிக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
    வோடபோன் ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 819 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    புதிய சலுகை ரூ. 699 சலுகையை போன்ற பலன்களையே வழங்குகிறது. எனினும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகையின் அங்கமாக வழங்கப்படுகிறது. இதில் தினமும் 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

     வோடபோன்

    வோடபோன் ஐடியாவின் ரூ. 819 சலுகை தற்சமயம் டெல்லி வட்டாரத்தில் உள்ள வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த சலுகை மற்ற வட்டாரங்கள் மற்றும் ஐடியா செல்லுலார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

    புதிய ரூ. 819 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களுடன் வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைகளும் வழங்கப்படுகிறது.
    மொபைல் செயலி ஒன்று ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை கொண்டு அதை சரியாக கணிப்பதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில், பீடோமீட்டர் 2018 எனும் மொபைல் செயலி ரத்தத்தில் உள்ள காற்றின் அளவினை மொபைல் போன் கேமரா மூலம் சரியாக கணிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு மொபைல் போனின் பின்புற கேமராவின் மேல் சுண்டு விரல் வைத்தாலே போதும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரல் தகவல்களுடன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை எவ்வாறு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய இணைய முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது. பல்ஸ் ஆக்சிமீட்டர் என்பது இரத்தத்தில் உள்ள காற்றின் அளவை கணக்கிடும் சிறு சாதனம் ஆகும். 

    இது பொதுவாக சுவாச பிரச்சை உள்ள நோயாளிகளை பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் இது கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்றை கண்டறிய ஆக்சிமீட்டர் பயன்படுவதால், தற்சமயம் இது அதிக பிரபலமாகி வருகிறது. 

    மேலும் இந்த செயலியின் பெயர் பீடோமீட்டர் ஆகும். இது பயனர் நடக்கும் போது ஒவ்வொரு அடியையும் துல்லியமாக கணக்கிடுகிறது. வைரல் தகவல்களில் பயனர்கள் தங்களது சுண்டு விரல் கொண்டு கேமராவை முழுமையாக மறைத்துக் கொண்டு திரையில் வரும் மெஷர் எனும் ஐகானை க்ளிக் செய்தால், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு விவரங்கள் திரையில் தெரியும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், தற்போதைய தொழில்நுட்பத்தை கொண்டு மொபைல் போன் மட்டும் பயன்படுத்தி ஒருவர் உடலின் இரத்தத்தில் உள்ள காற்றின் அளவை கணக்கிட முடியாது என தெரியவந்துள்ளது. வைரல் தகவலில் உள்ள செயலியும் ரத்தத்தின் காற்றோட்ட அளவை கண்டறியவில்லை. 

    அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று மொபைல் போன் கேமரா மற்றும் செயலியை கொண்டு ரத்தத்தின் காற்றோட்ட அளவுகளை கணக்கிட முடியும் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுப்பதாக எழுந்த புகாரில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.


    போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது. 

    இந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சூக்கர்பர்க் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டனர். அப்போது இவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

    கானொலி ஸ்கிரீன்ஷாட்

    காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிப்பிட்ட பெரு நிறுவனங்கள், தங்களது வளர்ச்சிக்காக சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

    ஆனால், அமேசான், கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன. அதேசமயம், தாங்கள் அமெரிக்காவை சேர்ந்த பெருநிறுவனம் அல்ல எனவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா ஆன்லைனில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    தொழில்நுட்ப துறையில் மிகவும் பிரபல நிகழ்வுகளில் ஒன்றான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2021 ஆம் ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    இதனை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கேரி ஷேபிரோ வீடியோவில் தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரும் தொழில்நுட்ப விழாவாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமைந்தது.

    இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதே வரிசையில் பல்வேறு மிகமுக்கிய தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன.
    குவால்காம் நிறுவனத்தின் புதிய குவிக் சார்ஜ் 5 தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    குவால்காம் நிறுவனம் குவால்காம் குவிக் சார்ஜ் 5 தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது உலகின் முதல் வணிக ரீதியிலான ஃபாஸ்ட் சார்ஜிங் பிளாட்பார்ம் ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் 100 வாட் சார்ஜிங் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட்போன் பேட்டரியை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களே ஆகும். இதுதவிர பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. இதில் குவால்காம் பேட்டரி சேவர் மற்றும் பேட்டரி ஆயுளை நீட்டிக்க புதிய குவால்காம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

     குவால்காம் குவிக் சார்ஜ் 5

    முந்தைய குவிக் சார்ஜ் 4 தொழில்நுட்பத்தை விட குவிக் சார்ஜ் 5 70 சதவீதம் சிறப்பாக இருக்கிறது. இது 2எஸ் பேட்டரி மற்றும் 20 வோல்ட் பவர் டெலிவரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    புதிய குவிக் சார்ஜ் 5 தற்சமயம் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கி உள்ளது. இதனால் இந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் 2020 மூன்றாவது காலாண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவிக் சார்ஜ் 5 தொழில்நுட்பம் ஸ்னாப்டிராகன் 865, 865 பிளஸ் மற்றும் எதிர்காலத்தில் வெளியாகும் அதிநவீன பிராசஸர்களில் இயங்கும்.
    இந்தியாவில் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    இந்தியாவில் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. பெரும்பாலும் இந்த செயலிகள் ஜூன் 29 ஆம் தேதி தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் அல்லது அதற்கான மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டிக்டாக்

    இவற்றில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. தற்சமயம் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை.  

    தடை செய்யப்பட்ட போதும், இந்த வெர்ஷன்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ஆப்பிள் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய வெளியீட்டு தேதியிலேயே ஒவ்வொரு ஆண்டும்  புதிய ஐபோன்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஐபோன் வெளியீட்டு தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 செவ்வாய் கிழமையில் புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய தகவல்களில் கூறப்பட்டுள்ள செப்டம்பர் 8 ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆகும்.

    ஐபோன் 12 சீரிஸ் ரென்டர்

    செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வில் புதிய ஐபோன்12, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்கள் அறிமுகம்  செய்யப்படும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் மற்றொரு விழாவில் ஆப்பிள் ஐபேட் ப்ரோ, ஆப்பிள் ஏஆர் கிளாஸ், ஆப்பிள் சிப்செட்கள் கொண்ட புதிய மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இவைதவிர சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
    பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.


    பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் இருந்தபடி லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக லைவ் பிராட்கேஸ்ட் அம்சத்தில் அதிகபட்சம் 50 பேருடன் வீடியோ கால் பேச முடியும்.

    லைவ் பிராட்கேஸ்ட் செய்ய பயனர் மெசஞ்சரில் ரூம் ஒன்றை உருவாக்கி ப்ரோஃபைல், பேஜ் அல்லது குரூப்களுக்கு பிராட்கேஸ்ட் செய்ய வேண்டும். ரூம் கிரியேட்டர் பிராட்கேஸ்ட்டை பார்க்க யாரை வேண்டுமானாலும் அழைக்க முடியும். இதில் கலந்து கொள்வோர் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

    மெசஞ்சர் ரூம்ஸ் லைவ் பிராட்காஸ்ட்

    மேலும் ரூம் கிரியேட்டர், பேஸ்புக்கில் ரூம் எங்கு பகிரப்படுகிறது, யார் இதை பார்க்க வேண்டும் என்பதையும், யார் யார் அழைக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் தீர்மானிக்க முடியும். 

    இன்வைட் அனுப்பப்பட்டதும், ரூமில் கலந்து கொள்வோருக்கு நோட்டிபிகேஷன் வரும். இதனை க்ளிக் செய்தால் ரூமில் கலந்து கொள்ள முடியும். நேரலை செய்வோர் பிராட்கேஸ்ட் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய லைவ் பிராட்கேஸ்ட் அம்சம் பேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த அம்சம் மேலும் சில நாடுகளுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
    ×