search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹானர் மேஜிக்புக் 15
    X
    ஹானர் மேஜிக்புக் 15

    பாப் அப் கேமரா கொண்ட ஹானர் மேஜிக்புக் 15 இந்தியாவில் அறிமுகம்

    ஹூவாயின் ஹானர் பிராண்டு பாப் அப் கேமரா கொண்ட மேஜிக்புக் 15 லேப்டாப் மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

    இந்திய சந்தையில் ஹானர் பிராண்டின் முதல் லேப்டாப் மாடல் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் கொண்டுள்ளது. அலுமினியம் பாடி மற்றும் அஸ்யூர் புளு சேம்ஃபெர் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கும் மேஜிக்புக் 15 மாடலில் இரண்டாம் தலைமுறை ஏஎம்டி ரைசன் 5 பிராசஸர், மேஜிக் லின்க் 2 அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.  

    பாப் அப் வெப் கேமரா கொண்டிருக்கும் மேஜிக்புக் 15 மாடலின் கேமராவை இயக்க கீப்ரோடில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை க்ளிக் செய்தால் கேமரா ஆன் ஆகி விடுகிறது. இத்துடன் லேப்டாப் விவரங்களை பாதுகாக்கும் வகையில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹானர் மேஜிக்புக் 15

    ஹானர் மேஜிக்புக் 15 சிறப்பம்சங்கள்

    - 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் 16:9 டிஸ்ப்ளே
    - ஏஎம்டி ரைசன் 5 3500யு பிராசஸர்
    - ரேடியான் வீகா 8 கிராஃபிக்ஸ்
    - 8 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
    - 256 ஜிபி எஸ்எஸ்டி
    - விண்டோஸ் 10
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - கைரேகை சென்சார் பவர் பட்டன்
    - பாப் அப் பட்டன்
    - மேஜிக் லின்க் 2.0
    - வைபை, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி
    - ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி 3.0 x 1, யுஎஸ்பி 2.0 x 1
    - 42Wh பேட்டரி
    - 65 வாட் டைப் சி பவர் அடாப்டர்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் மேஜிக்புக் 15 மாடல் ஸ்பேஸ் கிரே மற்றும் மிஸ்டிக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
    Next Story
    ×