என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அதிரடி அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் தற்சமயம் லீக் ஆகி இருக்கின்றன.
அதன்படி புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஹெச்டி பிளஸ் AMOLED பன்ச் ஹோல் ஸ்கிரீன், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமராக்கள் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-எம்515எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என்றும் விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12 உற்பத்தி செலவை குறைக்க ஆப்பிள் போட்ட மாஸ்டர் பிளான் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் 5ஜி வசதி வழங்கப்படும் பட்சத்தில் ஐபோன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனில் பயன்படுத்தும் இதர உபகரணங்களில் மாறுதலை செய்து உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ, சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான செலவு 75 முதல் 85 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5613 முதல் ரூ. 6436) வரை இருக்கும் என கணித்துள்ளார். இத்துடன் 5ஜி மில்லிமீட்டர் வேவ் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 125 முதல் 135 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 9355 முதல் ரூ. 10103) வரை செலவாகும் என கணித்துள்ளார்.

இந்த செலவீனத்தை மற்ற பாகங்களில் மாற்றம் செய்து ஈடுகட்ட ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆப்பிள் நிறுவனம் பேட்டரி போர்டில் மாற்றங்களை மேறகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கென ஆப்பிள் எளிமையான மற்றும் சிறிய வடிவமைப்பை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கான போர்டுகளின் செலவீனத்தில் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை சேமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஐபோன் 12 சீரிஸ் விலையை குறைக்க வழிவகுக்கும் என தெரிகிறது.
இத்துடன் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் அடாப்டர் வழங்காது என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் உலகம் முழுக்க திடீரென முடங்கி போன நிலையில், தற்சமயம் இவை சீராக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இணைய உலகில் பிரபல தேடுபெறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ் உள்ளிட்டவை திடீரென முடங்கி போனது. இதனால் உலகம் முழுக்க பலர் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
திடீர் முடக்கம் காரணமாக ஜிமெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரெக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் ஃபைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியாமல் போனது.

இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.
இந்நிலையில், முடங்கிப்போன கூகுள் சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட கூகுள் சேவைகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
சேவைகளுக்கு ஏற்பட்ட திடீர் தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சீரான சேவையை வழங்குவதே கூகுளின் குறிக்கோள் ஆகம். நாங்கள் தொடர்ந்து எங்களின் சேவைகளை மேம்படுத்த பணியாற்றி வருகிறோம் என கூகுள் தனது ஜிசூட் ஸ்டேட்டஸ் டேஷ்போர்டில் தெரிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 150 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல் எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதப்பு 1 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 468.65 டாலர்களாக இருந்தது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் துவங்கி 42 ஆண்டு ஆண்டுகள் கழித்து 1 டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டியது. பின் இரண்டே வருடங்களில் (23 வாரங்கள்) இதன் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது.
சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ எனும் கச்சா எண்ணெய் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் 2 டிரில்லியன் டாலர்கள் அளவு சந்தை மதிப்பை தொட்டது. எனினும், தற்சமயம் இதன் சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் ஆகவே உள்ளது. அந்த வகையில் அமெரிக்க சந்தையில் 2 டிரில்லியன் டாலர்களை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் 1.6 டிரில்லியன் சந்தை மதிப்பை கொண்டுள்ளன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுமார் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் முன்பதிவு செய்வோர் உடைந்த ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகை ஒன்றை சாம்சங் அறிவித்து இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி நோட் 20 அல்லது நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களை வாங்குவோர் தங்களது உடைந்த ஸ்கிரீன் கொண்ட பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் முதலில் மை கேலக்ஸி செயலியில் சைன்-அப் செய்ய வேண்டும். இந்த சலுகை செயலியின் டாப் பேனரில் எக்சேன்ஜ் சலுகை விவரங்கள் வழங்கப்பட்டுள்ள. இதை பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ள விளம்பர பேனரை க்ளிக் செய்ய வேண்டும்.
பின் விவரங்களை பதிவிட்டால், செயலி உடைந்த சாதனத்திற்கான சிறந்த விலையை கணக்கிட்டு தெரிவிக்கும். இனி வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள சாம்சங் ஸ்டோர் சென்று உடைந்த சாதனத்தை ஒப்படைத்து புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம்.
இந்த சலுகை அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்றும் இது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து ஐபிஎல் 2020 கிரிகெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 401 மற்றும் ரூ. 2599 பிரீபெயிட் சலுகைகளில் இலவச ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு வருகிறது.

ஜியோ ஃபைபர் பயனர்களை பொருத்தவரை ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான வருடாந்திர சந்தா இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இதில் இலவச ஐபிஎல் ஸ்டிரீமிங் வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
எனினும், ஜியோ ரூ. 401 மற்றும் ரூ. 2599 என இரண்டு ஜியோ பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுடன் இலவச ஐபிஎல் 2020 ஸ்டிரீமிங் சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களுக்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
முன்னதாக கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுக்கு மூன்று ஒஎஸ் அப்டேட்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில், மூன்று ஒஎஸ் அப்டேட்களை பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சாம்சங் வெளியிட்டு உள்ளது.
- கேலக்ஸி எஸ் சீரிஸ்: கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி, எஸ்20 அல்ட்ரா, எஸ்20 பிளஸ் 5ஜி, எஸ்20 5ஜி, எஸ்20, எஸ்10 5ஜி, எஸ்10 பிளஸ், எஸ்10, எஸ்10இ, எஸ்10 லைட் மற்றும் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் எஸ் சீரிஸ் மாடல்கள்

- கேலக்ஸி நோட் சீரிஸ்: கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி, நோட் 20 அல்ட்ரா, நோட் 20 5ஜி, நோட் 20, நோட் 10 பிளஸ் 5ஜி, நோட் 10 பிளஸ், நோட் 10 5ஜி, நோட் 10, நோட் 10 லைட் மற்றும் வெளியாக இருக்கும் நோட் சீரிஸ் மாடல்கள்
- கேலக்ஸி மடிக்கக்கூடிய சாதனங்கள்: கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி, இசட் ஃபோல்டு 2, இசட் ப்ளிப் 5ஜி, இசட் ப்ளிப், ஃபோல்டு 5ஜி, ஃபோல்டு மற்றும் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் இசட் சீரிஸ் மாடல்கள்
- கேலக்ஸி ஏ சீரிஸ்: கேலக்ஸி ஏ71 5ஜி, ஏ71, ஏ51 5ஜி, ஏ51, ஏ90 5ஜி மற்றும் எதிர்காலத்தில் வெளியாகும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள்
- கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 5ஜி, டேப் எஸ்7 பிளஸ், டேப் எஸ்7 5G3, டேப் எஸ்7, டேப் எஸ்6 5ஜி, டேப் எஸ்6, டேப் எஸ்6 லைட் மற்றும் எதிர்காலத்தில் வெளியாகும் டேப் எஸ் சீரிஸ் சாதனங்கள்
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, "இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.”என்று கூறியிருந்தார்.

ராகுலின் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேஸ்புக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் கூறும் வகையில், “யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக் பாரபட்சமற்ற தனது கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி சார்பற்று உலக அளவில், எங்களது கொள்கைகளை அமல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தனியார் நிறுவன சமூக வலைதள சேவைகளை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். தேர்தலில் அதனை பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர். இறுதியாக அமெரிக்க ஊடகம், பேஸ்புக்கின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியில், வெறுப்பு பேச்சுகளுக்கான பேஸ்புக்கின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஆளும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் பேஸ்புக் பாரபட்சம் காட்டுகிறது.
இந்த விவகாரம் குறித்த விசாரணையை துவங்க கூட்டு பாராளுமன்ற கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என காங்கிஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மேகென் தெரிவித்து இருக்கிறார்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிசில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிவித்தது.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், கேலக்ஸி நோட் மற்றும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்ட சில கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்குவது பற்றிய தகவல் சாம்சங் கஸ்டர் கேர் அதிகாரி மூலம் தெரியவந்துள்ளது. புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாக சாம்சங் கஸ்டமர் கேர் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் அம்சங்களின் திறனை நன்கு ஆய்வு செய்த பின் ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் சேவைகளை மிகக்குறைந்த விலையில் வழங்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை ஒன்றிணைத்து குறைந்த மாதாந்திர விலையில் வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறைந்த விலை சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இவற்றை கொண்டு ஆப்பிள் அதிக வருவாயை ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்பட இருப்பதால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியயும் என தெரிகிறது. பல்வேறு சேவைகளை ஒன்றிணைத்து காம்போ வடிவில் வெளியிட ஆப்பிள் திட்டமிடுகிறது.

இவற்றில் துவக்க காம்போ சலுகையில் ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. அடுத்த சலுகையில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து வழங்கப்படும் காம்போக்களில் முதல் இரு காம்போவில் இருந்த சேவைகளுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவையும், மேலும் கூடுதல் தொகை செலுத்துவோருக்கு இவற்றுடன் கூடுதல் ஐகிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இவற்றின் டாப் எண்ட் காம்போவில் விர்ச்சுவல் ஃபிட்னஸ் வகுப்புகள் சேர்க்கப்பட இருப்பதாக தெரிகிறது. இவை அனைத்தும் ஆப்பிள் ஃபேமிலி ஷேரிங் சிஸ்டத்துடன் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.
சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது. புதிய சலுகை 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இதில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை மற்ற வட்டாரங்களில் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த இரு வட்டாரங்களில் ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய ரூ. 399 பிரீபெயிட் சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் சென்னை ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகை நீக்கப்படுவது குறித்த அறிவிப்பை தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரூ. 399 சலுகை பற்றிய தகவலும் இடம்பெற்று உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 39 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்பட்டு விடும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளூர் மற்றும் வெளியூர் ரோமிங்களில் தினமும் 250 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். அதன்பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.






