என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது.
புதிய ஸ்மார்ட்போன் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 சிறப்பம்சங்கள்
- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
- 6.2 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 ஹெச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் டிஸ்ப்ளே
- அட்ரினோ 650 ஜிபியு
- 12 ஜிபி LPDDR5 ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
- டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, சப்6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,45,930 முதல் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் 7.5 கோடி 5ஜி ஐபோன் யூனிட்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு விற்பனை செய்ய சுமார் 7.5 கோடி 5ஜி ஐபோன் யூனிட்களை உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையை 8 கோடியாக அதிகரிக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
5ஜி ஐபோன்கள் தவிர புதிய ஐபேட் ஏர், ஆப்பிள் வாட்ச் வெர்ஷன்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் ஐபேட் ப்ரோ போன்ற வடிவமைப்பில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவைதவிர ஒவர் இயர் ஹெட்போன்கள், சிறிய அளவிலான ஹோம்பாட் ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளையும் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தியாளர்கள் புது சாதனங்களின் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
டாடா ஸ்கை நிறுவனம் அதிக டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா ஸ்கை நிறுவனம் 500 ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 1900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் பயனர்கள் நொடிக்கு 300 எம்பி வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வழங்கும் சலுகைகளை டாடா ஸ்கை தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் வழங்கி வருகிறது. மேலும் இந்த சலுகைகளுக்கான கட்டணம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகை கட்டணத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய சலுகையில் அதிக டேட்டா வழங்குவது மட்டுமின்றி இவற்றுடன் இலவச ரவுட்டர், டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதனால் பயன்படுத்தப்படாத டேட்டா முந்தைய மாதத்தில் இருந்து அடுத்த மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாடா ஸ்கை சலுகைகள் மாதாந்திர அடிப்படையில் மட்டுமின்றி காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகையில் 500 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 3 எம்பியாக குறைக்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலும் வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மாடலின் லைட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி இசட் ஃபோல்டு லைட் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், புதிய ஸ்மார்ட்போன் ஒன்று எஸ்எம்-எஃப்415எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

பொதுவாக சாம்சங் மாடல்களில் எஃப் எனும் வார்த்தை மடிக்கக்கூடிய சாதனங்களை குறிப்பிடுகின்றன. மேலும் இதில் குறைந்த இலக்க எண் வழங்கப்பட்டு இருப்பதால் இது கேலக்ஸி ஃபோல்டு சாதனங்களின் லோயர் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களிலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், கேலக்ஸி இசட் ஃபோல்டு லைட் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 மற்றும் நோட் 10 மாடல்களின் லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என்றும், இதில் 5ஜி, மிக மெல்லிய கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை சாம்சங்கின் தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமேசான் மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம், சமையல் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையாக பேடிஎம், அமேசான் ஆகிய செயலிகளின் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.
இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பேபில்’ என்ற பகுதிக்குச் சென்று கியாஸ் சிலிண்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
கியாஸ் ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அந்த வலைதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரிலையன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவை சமீபத்தில் துவங்கப்பட்டது. துவங்கியது முதல் ஜியோமார்ட் பெயரை தழுவி பல்வேறு இணைய முகவரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஜியோமார்ட் பெயரில் பல்வேறு போலி தளங்கள் பயனர் விவரங்கள் மற்றும் பணத்தை அபகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் பெயரை தழுவி செயல்படும் போலி வலைதளங்கள் பற்றிய எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. விற்பனையாளர்கள் அல்லது ஃப்ரான்சைஸ் முறையிலான வியாபாரத்தை ஜியோமார்ட் இதுவரை அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இத்துடன் தனிநபரை ஃப்ரான்சைசியாக நியமிக்க எவ்வித கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஜியோமார்ட் பெயரில் செயல்படும் போலி வலைதளங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி சில போலி வலைதளங்களின் பெயர்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.
போலி வலைதளங்களில் டிரேட்மார்க் தவறாக பயன்படுத்துவது அப்பட்டமான உண்மை. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக ரிலையன்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதே தகவலை ரிலையன்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் , பெசல் லெஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே மற்றும் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதன் உள்புறம் பன்ச் ஹோல் கேமராவும், கவர் டிஸ்ப்ளேவில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ப்ளிப்கார்ட் மொபைல் பொனாசா சேல் எனும் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் நடத்தும் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ரெனோ 2 மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஜூம் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி மட்டுமின்றி பிரீபெயிட் மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட மொபைல்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனையின் போது புதிய ஸ்மா்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. சலுகைகளை பொருத்தவரை ஐபோன் எஸ்இ 2020 (64 ஜிபி) மாடல் விலை ரூ. 42,500 இல் இருந்து ரூ. 35999 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் விலையில் ரூ. 6501 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 45999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் கூடுதல் எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐபோன் மட்டுமின்றி ரெட்மி கே20 சீரிஸ், ஒப்போ ரெனோ 2எஃப், ஒப்போ ஏ5எஸ், ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ஏ12 மற்றும் விவோ வி50 போன்ற மாடல்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார், AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யுஐ வழங்கப்படும் என தெரிகிறது. இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படுகிறது.

இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 7000 எம்ஏஹெச் பேட்டரியுடன், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன்எஸ்இ மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடல் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்கி உள்ளது. இதன் உற்பத்தி பணிகள் பெங்களூருவில் அமைந்துள்ள விஸ்ட்ரன் ஆலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடலை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது. தற்சமயம் இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் எஸ்இ2020 மாடல் ஒரு மாத காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 11 விலை குறைக்கப்படாததால், இங்கு உற்பத்தி செய்யப்பட இருக்கும் ஐபோன் எஸ்இ மாடலின் விலை உடனடியாக குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்சத்தில் ஐபோன்களுக்கான இறக்குமதி வரியை ஆப்பிள் சேமிக்க முடியும்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எஸ்இ (2016) மற்றும் ஐபோன் 7 போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 ப்ரோ மாடல்களை சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படு இருந்தது.
ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் புது மாடல்களில் பொதுவாக வழங்கப்படும் அதிநவீன அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
நம் வாழ்க்கை முறையில் அதிகளவில் எல்லா தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உபகரணம் மொபைல் போன். பிறருடன் பேசுவது மட்டுமின்றி பொழுதுபோக்கு, கல்வி, வங்கிச்சேவை, நிதி நிர்வாகம், புகைப்படம், வீடியோ எடுப்பது என்று மொபைல் மூலமே பல வேலைகளை செய்ய நாம் பழகிவிட்டோம்.
எனவே நமக்கு அவ்வப்போது சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட மொபைல்போன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய புதுவரவு போன்களில் வழங்கப்படும் அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.
சமீபத்தில் வெளிவரும் போன்களில் மூன்று சென்சார் கேமரா முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகத்துல்லியமாக இருப்பதால் இந்த கேமரா உள்ள போன் வைத்திருப்பவர்கள் எல்லாருமே புகைப்பட கலைஞர்கள் போல அசத்துகின்றனர்.

தற்போது பெருகி வரும் பல வகையான செயலிகளினால் நம்முடைய பாதுகாப்பிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது உண்மையே. இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எல்லா போன்களிலுமே, போனை பயன்படுத்துபவரின் தகவல்கள் திருடு போகாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய போன்கள் பெரும்பாலானவற்றில் வாட்டர் ப்ரூப் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக விலை போன்களில் இந்த அம்சம் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. போன்களில் உள்ள சார்ஜ் செய்யும் போர்ட், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் க்ரில் போன்றவைகளில் தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போதைய போன்களில் அதிதுல்லிய கேமராக்கள், அதிவேக கிராபிக் சிப்செட் மற்றும் அதிவேக பிராசஸர் இருக்கிறது. இத்துடன் மோஷன் ட்ராக்கிங், 3டி டெப்த் ப்ரொஜக்ஷன் மற்றும் முகத்தை அடையாளம் காணும் ஸ்கேனிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் சேர்க்கப்படுவதால் ‘ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) சாப்ட்வேர்’ வெற்றிகரமாக இயகக முடிகிறது.
அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு செய்துள்ளது.
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத துவக்கத்தில் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக டிக்டாக் தெரிவித்து இருந்தது. மேலும் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்தது. அந்தவரிசையில் தற்சமயம் டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக டிக்டாக் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பான பணிகளை இந்த வாரத்திலேயே துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீனாவின் வீசாட் நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தன.






