search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எம்51
    X
    கேலக்ஸி எம்51

    சாம்சங் கேலக்ஸி எம்51 விலை மற்றும் வெளியீட்டு விவரம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார், AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யுஐ வழங்கப்படும் என தெரிகிறது. இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எம்51

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 7000 எம்ஏஹெச் பேட்டரியுடன், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×