என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டாடா ஸ்கை பிராட்பேண்ட்
    X
    டாடா ஸ்கை பிராட்பேண்ட்

    அதிக டேட்டா வழங்கும் டாடா ஸ்கை சலுகை அறிவிப்பு

    டாடா ஸ்கை நிறுவனம் அதிக டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.

    டாடா ஸ்கை நிறுவனம் 500 ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 1900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் பயனர்கள் நொடிக்கு 300 எம்பி வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்த முடியும்.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வழங்கும் சலுகைகளை டாடா ஸ்கை தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் வழங்கி வருகிறது. மேலும் இந்த சலுகைகளுக்கான கட்டணம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகை கட்டணத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

     இண்டர்நெட்

    புதிய சலுகையில் அதிக டேட்டா வழங்குவது மட்டுமின்றி இவற்றுடன் இலவச ரவுட்டர், டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதனால் பயன்படுத்தப்படாத டேட்டா முந்தைய மாதத்தில் இருந்து அடுத்த மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    டாடா ஸ்கை சலுகைகள் மாதாந்திர அடிப்படையில் மட்டுமின்றி காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகையில் 500 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 3 எம்பியாக குறைக்கப்படுகிறது.
    Next Story
    ×