என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நிலவில் உள்ள வளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய நாசா தனியார் நிறுவனங்களை தேடி வருகிறது.


    சந்திரனில் உள்ள பாறைகள் மற்றும் பாறை படிவங்களை எடுத்து வர உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களை நாசா தேடுகிறது. விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் நாசா களமிறங்கி இருக்கிறது.

    இந்த திட்டம் 2024 க்கு முன் சந்திரனில் உள்ள வளங்களை மீட்டெடுப்பது மற்றும் மாற்றுவதை நிறைவு செய்வதே நோக்கம் என நாசா கூறியுள்ளது.

     நாசா வரைபடம்

    2024 ஆம் ஆண்டு வாக்கில் முதல் அமெரிக்கப் பெண்ணையும் அடுத்து ஒரு ஆணையும் சந்திரனில் தரையிறக்க நாசா இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் நாசா சந்திர வளங்களை கைபற்ற வேண்டும் என நினைக்கிறது.

    நாசா கோடிட்டுக் காட்டிய தேவைகளின்படி, ஒரு நிறுவனம் சந்திர மேற்பரப்பில் உள்ள எந்த இடத்திலிருந்தும் ஒரு சிறிய அளவு சந்திரன் கன்மம் அல்லது பாறைகளை சேகரிக்கலாம். பின்னர் அதன் உரிமையை நாசாவுக்கு மாற்ற வேண்டும். உரிமை பரிமாற்றத்திற்குப் பிறகு, சேகரிக்கப்பட்ட பொருள் அதன் பயன்பாட்டிற்கான நாசாவின் ஒரே சொத்தாக மாறும்.

    நாசாவின் கட்டணம் சந்திர பாறைபடிவங்களுக்கு மட்டுமே, முன் தொகை 10 சதவிகிதம், அறிமுகம் செய்யப்பட்டதும் 10 சதவிகிதம் மற்றும்  வெற்றிகரமாக முடிந்தவுடன் மீதமுள்ள 80 சதவிகிதம் கொடுக்கப்படும் அதற்கான மீட்டெடுப்பு முறைகளை நாசா தீர்மானிக்கும்.
    டிக்டாக் செயலியின் தடை விவகாரத்தில் அதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.


    சீன நிறுவனமான பைட்-டேன்ஸ் தனது டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். டிக்டாக் தடை உறுதியாவது, செயலியை விற்பனை செய்வது தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார். 

    அதிபர் டிரம்ப் கருத்து டிக்டாக் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பைட்-டேன்ஸ் நிறுவனம் தனது டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

     டிக்டாக்

    டிரம்ப்பின் முந்தைய உத்தரவின் படி டிக்டாக் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்  விற்பனை செய்ய வேண்டும். இதுவரை டிக்டாக்கை வாங்குவது பற்றி எந்த நிறுவனமும் இறுதியான முடிவை அறிவிக்கவில்லை. 

    இதுவரை வெளியான தகவல்களின் படி டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போன் வெளியீட்டு விவிரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போன் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த ஜியோ முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. விலை குறைந்த போனுடன் ஜியோவின் டேட்டா சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது.

     ரிலையன்ஸ் ஜியோ

    ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன் ஒஎஸ் உருவாக்கி வருகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் முதல் ஸ்மார்ட்போன் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்யேக முகக்கவசத்தை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொறியியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக முகக்கவசம் ஒன்றை வடிவமைத்து இருக்கின்றன. இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் ஊழியர்களுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய முகக்கவசங்களின் புகைப்படங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஆப்பிள் முகக்கவசம்

    மூன்று லேயர்களை கொண்டிருக்கும் ஆப்பிள் முகக்கவசங்களை அதிகபட்சம் ஐந்து முறை துவைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முகம் தெளிவாக தெரியும் படியான முகக்கவசங்களையும் வழங்குகிறது. 

    இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.
    ரிலையன்ஸ் ரீடெயில் குழுமத்தில் மற்றொரு அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் 1.75 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் தெரிவித்து உள்ளது. 

    இதற்காக ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் சில்வர் லேக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தனது ரீடெயில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. 

     ரிலையன்ஸ் ரீடெயில்

    இதன் காரணமாக அடுத்த சில காலாண்டுகளில் மேலும் சில நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் லேக் முதலீடு நடவடிக்கை ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் மதிப்பை ரூ. 4.21 லட்சம் கோடி என கணக்கிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    இந்திய சந்தையில் ரீடெயில் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் சில்லறை வியாபார பிரிவை ரூ. 24 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது.
    ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் நிகழ்வு நடைபெறும் தேதி மற்றும் இதர விவரங்களை அறிவித்து உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் விர்ச்சுவல் நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    டைம் பிளைஸ் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6, புதிய ஐபேட் மாடல்கள் மற்றும் சில அக்சஸரீக்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

     ஆப்பிள்

    தற்போதைய நிகழ்வில் ஐஒஎஸ் 14, மேக்ஒஎஸ் 11, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்டவைகளின் வெளியீடு பற்றிய தகவல்களும் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேம்பட்ட எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

    அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் OLED டிஸ்ப்ளேக்கள், 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் இரு மாடல்கள் 5.4 இன்ச், 6.1 இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இதன் ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் LIDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பிராசஸர் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
    விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது.

    மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை.

    இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்ற போக்குவரத்துகளை விட அபாயகரமானது என்ற எண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது. 

    பொதுவாக விமானங்களில் சிறு இடத்தினுள் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். இத்துடன் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதி இருக்காது. இதனால் விமான பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தாலும், மிக எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த கூற்றில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

    விமானத்தினுள் காற்றோட்ட வசதி

    விமானங்களின் கேபின்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை சுத்தமான காற்றால் நிரப்பப்படுகிறது என அறிவீர்களா? ஆம், விமானம் பறக்கும் போது, வெளிப்புறத்தில் இருக்கும் சுத்தமான காற்று விமானத்தினுள் கலக்கப்படுகிறது. வெளிப்புற காற்று பயணிகள் அமரும் பகுதியான கேபினை வந்தடையும் முன் அதிக வெப்பநிலை கொண்ட கம்ப்ரெசர், ஓசோன் ப்யூரிபையர் உள்ளிட்ட சாதனங்களை கடந்து சுத்தமாக்கப்படுகிறது.

    வெளிப்புற காற்று சுத்தப்படுத்தப்பட்டு அதன்பின்பே அது கேபினுள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த வழிமுறை தான் ஒவ்வொரு 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்வாறு காற்றை சுத்தப்படுத்த ஹெச்.இ.பி.ஏ. அதாவது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதற்கு இணையான தரம் கொண்ட ஏர் பில்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

     விமானத்தினுள் காற்றோட்ட வசதி

    வெளிப்புற காற்று ஹெச்.இ.பி.ஏ. பில்ட்டர் கொண்டு சுத்தப்படுத்தப்படுவதால், காற்றில் இருக்கும் அனைத்து விதமான வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது. இத்தகைய தரமுற்ற காற்று மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அறைகளில் இருப்பதற்கு இணையானவை ஆகும். இத்தனை சுத்தமான காற்று விமான பயணிகளுக்கு ஏன் அச்சுறுத்தலை ஏற்படுத்த போகிறது.

    விமானத்தினுள் காற்றோட்ட வசதி

    கேபின்களில் சுத்தமான காற்று எந்நேரமும் வந்து போக செய்வதுடன், விமான நிறுவனங்கள் விமானத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து செய்கின்றன. அந்த வகையில், மற்ற போக்குவரத்து முறைகளை விட விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது ஆகும். 

    என்ன தான் தொழில்நுட்ப வசதிகள் நம் பாதுகாப்பை உறுதி செய்தாலும், தனிமனித ஒழுக்கம், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதே நம் பாதுகாப்பிற்கு சிறந்த பலனை தரும்.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் பிரத்யேக டூ-டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களும் வெளியாகி உள்ளது.

     ரியல்மி 7ஐ

    ரியல்மி 7ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 ஜிபியு
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    பேஸ்புக் மெசஞ்சரில் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. 

    இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க முடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்து இருக்கிறார்.

     பேஸ்புக் மெசஞ்சர்

    புது நடவடிக்கை விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க மற்றும் நியூசிலந்து தேர்தல் மற்றும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் கொரோனாவைரஸ் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள கொரோனாவைரஸ் கம்யூனிட்டி ஹப் பயன்படுத்தவும் பயனர்களுக்கு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை கொண்டுள்ளது.
    பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக இந்திய கேம் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

    இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து, பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தது.  இதனை தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

    இந்நிலையில், பப்ஜிக்கு பதிலாக அதற்கு இணையான புதிய கேம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் தலைமையில், முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் இணைந்து பப்ஜிக்கு பதிலாக புதிய கேம் ஒன்றை அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    பாஜி

    பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்கோர் கேம்ஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய பாஜி (பியர்லெஸ் அண்டு யுனைட்டெட்  கார்ட்ஸ்) என்ற கேமை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என கூறியுள்ளார். இதன்படி, தேச பாதுகாப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்த நிதி பயன்படும்.

    புது கேம் பற்றி அதிகளவு தகவல்கள் இல்லாத நிலையில், பெரும்பாலும் இது பப்ஜி போன்றே இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. பப்ஜி மொபைலுக்கு மாற்றான புதிய பாஜி கேம் டீசர் படமும் இதையை உணர்த்துவதாக அமைகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் விரைவில் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. வெகேஷன் மோட், மேம்பட்ட புது யுஐ மற்றும் பல்வேறு அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், க்யூஆர் கோட் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டன.

     வாட்ஸ்அப்

    அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வெகேஷன் மோட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஆர்ச்சிவ் செய்த சாட் பாக்ஸ்களில் புது மெசேஜ்கள் வந்தாலும் அவற்றை மியூட் செய்ய முடியும். இத்துடன் கால் ஸ்கிரீன் யுஐ மாற்றம் செய்ய்பட இருக்கிறது.

    இதேபோன்று புதிய வாட்ஸ்அப் வால்பேப்பர்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவற்றை பயனர்கள் சாட் பாக்ஸ் பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ள முடியும். இதை கொண்டு பயனர்கள் வெவ்வேறு சாட் பாக்ஸ்களில் தனித்தனி பேக்கிரவுண்டுகளை செட் செய்து கொள்ளலாம்.

    இவற்றுடன் வாட்ஸ்அப் செயலியின் யுசர் இன்டர்ஃபேஸ் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது டிஸ்ப்ளே கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்டோரேஜை எளிதில் மாற்றியமைத்து, தேவையற்ற ஃபைல்களை அவ்வப்போது அழிக்க முடியும்.
    எல்ஜி நிறுவனத்தின் புதிய விங் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எல்ஜி நிறுவனம் தனது டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. எக்ஸ்புளோரர் பிராஜக்ட் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை அம்பலப்படுத்தும் 30 நொடிகள் ஓடும் வீடியோவை எல்ஜி வெளியிட்டு இருக்கிறது.

    புதிய திட்டத்தின் மூலம் இதுவரை அறியப்படாத பகுதிகளில் பயனர் அனுபவத்தை விரிவுப்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முற்றிலும் புதுவித வடிவமைப்புகளில் வித்தியாச அனுபவத்தை வழங்கும் வகையில் எக்ஸ்புளோரர் பிராஜக்ட் கவனம் செலுத்தும். 

     எல்ஜி விங்

    டூயல் ஸ்கிரீனுக்கென எல்ஜி நிறுவனம் ரேவ், ஃபிட்கோ, டுபி மற்றும் நேவர் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளது.

    முந்தைய தகவல்களின் படி புதிய சாதனத்தில் 6.8 இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே, 4 இன்ச் சிறிய டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 765ஜி அல்லது 768ஜி பிராசஸர் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு எல்ஜி மொபைல் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரலை செய்யப்படுகிறது.
    ×