என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 12 சீரிஸ் குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனாக்களை கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய ஐபோன் 12 விலை விவரங்கள் இணையத்தில் வெளஇயாகி இருக்கின்றன. தற்சமயம் சீனாவில் இருந்து வெளியான தகவல்களின் படி புதிய ஐபோன்கள் விலை முந்தைய ஐபோன் 11 சீரிஸ் அறிமுக விலையை விட 50 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முந்தைய தகவல்களின் படிஆப்பிள் புதிய ஐபோன்களுடன் சார்டர்கள் மற்றும் இயர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்காது என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.
எனினும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்-டேன்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன. இறுதியில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் செயலியுடன் கைகோர்த்தது.

எனினும், இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய அமெரிக்காவில் தடை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்-டேன்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஆன்லைன் ஸ்டோர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் பிரீமியம் அனுபவம் புதிய ஆன்லைன் தளத்திலும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆன்லைன் ஆப்பிள் வல்லுநர்கள் பயனர்கள் எதிர்பார்க்கும் வகையில் மேக் சாதனங்களை கான்ஃபிகர் செய்ய உதவுவர். பயனர்கள் புதிய சாதனங்கள் பற்றிய சந்தேகங்கள், உதவி உள்ளிட்டவைகளை கேட்டறிந்து கொள்ள முடியும். துவக்கத்தில் இந்த சேவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்லைன் ஸ்டோரில் பிரத்யேக நிதி சலுகை, மாணவர்களுக்கு சிறப்பு விலை, அக்சஸரீக்கள் மற்றும் ஆப்பிள் கேர் பிளஸ் உள்ளிட்டவைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் செஷன்களை நடத்த ஆப்பிள் திட்டமிட்டு இருக்கிறது. இதில் புகைப்பட கலை மற்றும் மியூசிக் பிரிவுகளில் பிரத்யேக வகுப்புகளை வல்லுநர்கள் நடத்த இருக்கின்றனர்.
ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி செய்யப்படுகிறது. இதற்கான கட்டண முறைகள் - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ, ரூபே, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் டெலிவரியின் போது கிரெடிட் கார்டு உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், பன்ச்-ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் 1.0பிளஸ் மற்றும் காப்பர் ஹீட் பைப், டூயல் கிராஃபைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 10 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 இந்திய வேரியண்ட் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிக்டாக் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புது தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதில் ஆரக்கிள் நிறுவனம் முன்னேற்றம் கண்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூறி பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்து இருந்தார்.

இரு நிறுவனங்கள் இடைய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் கிடைத்து இருக்கிறது. விரைவில் இதுபற்றிய முடிவு எட்டப்படும் என டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் டிக்டாக்கின் நம்பத்தகுந்த கூட்டு நிறுவனமாக ஆரக்கிள் மாறும்.
இதுபற்றிய ஒப்ந்த விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், டிக்டாக்கின் சர்வதேச வியாபார பிரிவு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆரக்கிள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வு பெயருக்கு ஏற்றார்போல் வேகமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், ஆப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் என பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகள் பற்றி அறிவித்தது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 முக்கிய அம்சங்கள்
- எஸ்6 பிராசஸர்
- இரத்த காற்றோட்ட அளவை டிராக் செய்யும் வசதி
- சீரிஸ் 3 மாடலை இருமடங்கு வேகம்
- ஸ்விம் ப்ரூஃப் வசதி
- சோலோ லூப், பிரெயிடட் சோலோ லூப் மற்றும் லெதர் லின்க் ஸ்டிராப்
- புதிய வாட்ச் ஃபேஸ்கள்
- ஃபேமிலி செட்டப்
- கோல்டு, கிராஃபைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது
- இந்திய விலை ரூ. 40,990 முதல் துவங்குகிறது

ஆப்பிள் வாட்ச் எஸ்இ முக்கிய அம்சங்கள்
- எஸ்5 பிராசஸர்
- ஃபால் டிடெக்ஷன்
- ஃபேமிலி செட்டப்
- புதிய வாட்ச் ஃபேஸ்கள்
- ஸ்விம் ப்ரூஃப்
- வாட்ச் சீரிஸ் 3 மாடலை விட இருமடங்கு வேகம்
- புதிய பேண்ட்கள்
- இந்திய விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

ஐபேட் 8th ஜென் முக்கிய அம்சங்கள்
- 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர்
- 40 சதவீதம் வேகமான சிபியு
- இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ்
- ஐஒஎஸ்14
- ஆப்பிள் பென்சில் வசதி
- இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

ஐபேட் ஏர் முக்கிய அம்சங்கள்:
- 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ14 பிராசஸர்
- 40 சதவீதம் வேகமான சிபியு
- யுஎஸ்பி டைப் சி (20 வாட் சார்ஜர்)
- வைபை 6
- 12 எம்பி பிரைமரி கேமரா
- 7 எம்பி ஃபேஸ்டைம் கேமரா
- லேண்ட்ஸ்கேப் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டச் ஐடி
- 10 மணி நேர பேட்டரி
- இந்தியாவில் இதன் விலை ரூ. 54,990 முதல் துவங்குகிறது
புதிய சாதனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஒன் சந்தா முறை மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை தவிர மிகமுக்கிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் பல்வேறு புது அம்சங்கள் கொண்ட ஆப்பிள் ஒஎஸ் வெளியாக இருக்கிறது.
ஆப்பிள் நிகழ்வு பற்றிய தமிழ் வீடியோவை கீழே காணலாம்..,
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மற்றும் புதிய ஐபேட் மாடல்களுடன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆப்பிள் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே சந்தா விலையில் வழங்குகிறது.
அதன்படி ஆப்பிள் ஒன் சேவை ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 50ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை ஒரே கட்டணத்தில் வழங்குகிறது. இதற்கான மாத சந்தா இந்திய மதிப்பில் ரூ. 195 ஆகும்.

இதே போன்று குடும்பத்தினருக்கான சேவையில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 200ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை மாதம் ரூ. 365 கட்டணத்தில் வழங்குகிறது. இந்த சந்தாவை அதிகபட்சம் குடும்பத்தினரில் ஆறு பேர் பயன்படுத்தலாம்.
இத்துடன் பிரீமியர் சந்தாவில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 2டிபி ஐகிளவுட் ஸ்டோரேஜ், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ் போன்ற சேவைகளை பெற முடியும்.
டிக்டாக் நிறுவனத்துக்கான அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் நிறுவனம் அரசுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் போட்டி போட்டன.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிறுவனத்தை பைட்டேன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. இதையடுத்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான முயற்சியில் ஆரக்கிள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும் டிக்டாக் செயலியை அந்த நிறுவனம் வாங்கி விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் டிக்டாக் செயலியை வாங்க ஆரக்கிள் நிறுவனம், அமெரிக்க அரசுக்கு விண்ணப்பத்தை அனுப்பி உள்ளது. இதை அமெரிக்க அரசும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை எந்த நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமத்தை வழங்க பைட்-டேன்ஸ் நிறுவனம் நிராகரித்து இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டிக்டாக்கை வாங்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வந்தன. இந்நிலையில், டிக்டாக் அமெரிக்க உரிமம் ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இந்த தகவல் குறித்து டிக்டாக், வெள்ளை மாளிகை மற்றும் ஆரக்கிள் என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வழங்கப்படவில்லை.
முன்னதாக சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.
இதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது டிக்டாக் செயலியை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிகிறது.
உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை சிங்கப்பூரில் திறந்துள்ளது. இது மெரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இந்த ஆப்பிள் ஸ்டோர் அழகிய உருளை வடிவம் கொண்டு கண்ணாடி குவிமாடத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் இது ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது விற்பனையகம் ஆகும். முற்றிலும் தண்ணீரின் மேல் மிதக்கும் இந்த விற்பனையகம் நகரின் அழகை முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்த்து ரசிக்க வழி செய்கிறது.

உருளை வடிவம் கொண்ட மிதக்கும் விற்பனையகத்தில் மொத்தம் 114 கண்ணாடி துண்டுகளும், செங்குத்தாக நிற்கும் பத்து தூண்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் உள்புறம் ரம்மியமான லைட்னிங் பெறும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் விற்பனையகத்தில் 23 மொழிகளில் பேசும் திறன் கொண்ட சுமார் 150 ஊழியர்கள் வாடிக்கையாளற்களை வரவேற்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வழியில் புதிய வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் மாத நிகழ்வில் முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் ஐபோன் மாடல்கள் அறிமுமகம் ஆகாது. ஐபோன்களுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிசுடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகமாக இருக்கிறது. இதில் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்படலம். இதேபோன்று வாட்ச் மாடல்களுக்கும் அதிக மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இம்முறை ஆப்பிள் நிறுவனம் இரண்டு வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

ஐபோன் மாடல்களை போன்றே, ஆப்பிள் வாட்ச் இம்முறை ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. ப்ரோ வேரியண்ட் என்பதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை கூடுதலாக இருக்கும். ப்ரோ மாடலில் 44எம்எம் டையல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது வழக்கமான ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் என இரு மாடல்களில் கிடைக்கும் என்றும் இரண்டிலும் அதிநவீன வாட்ச்ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது. புதிய வாட்ச் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, இசிஜி அம்சங்கள் வழங்கப்படாது. இந்த அம்சங்கள் ப்ரோ வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் ஸ்டான்டர்டு மாடலில் எம்9 சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் சாம்சங் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 மாதங்களுக்கு யூடியூப் பிரிமியம், மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 வாங்குவோருக்கு 22 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மாடலில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கவர் டிஸ்ப்ளேவில் பன்ச் ஹோல் கேமராவும், வெளிப்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி சிறப்பம்சங்கள்:
- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
- 6.2 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
- அட்ரினோ 650 ஜிபியு
- 12 ஜிபி LPDDR5 ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
- டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி டெல்போட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்






