என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை இந்தியாவில் வெளியாகாது என கூகுள் அறிவித்தவிட்டது.
எனினும், பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
ட்விட்டரில் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கூகுள், இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் சமூக வலைதளம் மற்றும் வலைதள பக்கங்களில் எந்த தகவலையும் வழங்கவில்லை.
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 3140 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வாங்குவோருக்கு அதெல்லாம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு விவரங்களின் படி ஐபோன் 12 வாங்குவோருக்கும் இதே வழிமுறை பின்பற்றி இயர்பாட்களை வழங்காது என கூறப்படுகிறது.

அந்த வகையில், இனி வரும் ஆப்பிள் சாதனங்களுடன் சார்ஜிங் அடாப்டர் மற்றும் இயர்பாட்களை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.
இதேபோன்ற தகவல் முன்கூட்டியே பலமுறை வெளியாகி வந்தது. எனினும், புதிய ஐபோன்களில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் இதர அம்சங்களால் ஏற்படும் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகாது என ஒன்பிளஸ் அதிகாரி தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் 8டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை வெளியிடும் திட்டமில்லை என அவர் அறிவித்து இருக்கிறார்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏற்கனவே பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மற்றொரு ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என பீட் லௌ தெரிவித்து இருக்கிறார். எனினும், ஒன்பிளஸ் 8டி மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

முன்னதாக ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் இல்லாததால், புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 8டி மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடல் துவக்க விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 69 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மொபைல் போன்களில் பண பரிமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
மொபைல் போன்கள் இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் மணிபர்ஸ் போன்று உருமாற்றம் அடைந்துள்ளன. பலருக்கும் மொபைல் வாலெட்கள் இதற்கான வசதிகளை வழங்குகின்றன. ஒருவரது வங்கிக்கணக்கில் பணம் வைத்திருப்பதை போன்று மொபைல் வாலெட்டில் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.
இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்றபோது இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது. இதுபோன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டி இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? மொபைல் போனில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.
பொதுவாக ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் மென்பொருள் அறிந்தவர்கள் அதை இயக்கிவிட முடியும்.
எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போதுமானதல்ல என்பதை உணர வேண்டும். பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது.
வி (வோடபோன் ஐடியா ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.
இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. பின் வி செயலியை கொண்டு கூடுதல் டேட்டா பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இலவச டேட்டா விளம்பர ரீதியில் வழங்கப்படுவதால், ஏழு நாட்களுக்கு பின் இது கிடைக்காது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் சலுகை தீர்ந்ததும், புதிய சலுகையை தேர்வு செய்ய இலவச டேட்டா பயன்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வி நிறுவனம் ஜீ5 சந்தா உள்ளடக்கிய சலுகைகளை அறிவித்து இருந்தது.
ஜீ5 சந்தா உள்ளடக்கிய வி சலுகைகள் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிதாக ரூ. 351 சலுகையையும் வி அறிவித்தது. இதில் வொர்க் பிரம் ஹோம் சலுகை ஆகும். இதில் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வீடியோ கால் செயலியான ஜூம் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது.
ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் புது அப்டேட் வெளியிடப்படுகிறது. இணைய வழி சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜூம், தற்சமயம் மொபைல் செயலியிலும் மாற்றங்களை செய்ய துவங்கி உள்ளது.
அந்த வரிசையில் ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஜூம் ஆண்ட்ராய்டு செயலி வெர்ஷன் 5.3 இல் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் தவிர இந்த அப்டேட் சில பிழை திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.

இத்துடன் அழைப்புகளின் போது, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் இணைய வழி பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர், அழைப்புகளின் போது, தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
இணைய பதிப்பை தொடர்ந்து இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும். வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி இணைய பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனம் அதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி துணை தலைவர் சூ கி சேஸ் அறியப்படாத ஸ்மார்ட்போன் ஒன்றின் புகைப்படத்தை சீன சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச், பன்ச் ஹோல் என முன்புற கேமரா இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. அந்த வகையில், புகைப்படத்தில் இருப்பது அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் தான் என கூறப்படுகிறது.

ரியல்மி தவிர பல்வேறு இதர நிறுவனங்களும் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில், ரியல்மி இணைந்திருக்கும் தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
சூ கி சேஸ், ரியல்மி துணை தலைவர் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டதோடு, இந்த ஸ்மார்ட்போனில் பாப் அப் ரக கேமரா வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி, 5ஜி மாட்யூல் தடிமனாக இருப்பதால் பாப்-அப் கேமரா வழங்க முடியாது என தெரிவித்து இருந்தார்.
ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்ட ரியல்மி அதிகாரி, அதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் முன்பதிவு அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய ஐபோன்களின் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபோன் 12 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் ஐபோன் 12 மினி, 6.1 இன்ச் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் LiDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் இந்தியா தளத்தை தமிழ் உள்பட நான்கு புதிய மொழிகளில் இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அமேசான் தளத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு மேலும் அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன் அமேசான் சேவையை இந்தி மொழியில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் புதிய மொழிகள் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய மொழி சேவை மொபைல் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் தளத்திற்கும் பொருந்தும்.

புதிய மொழிகளை சேர்த்து அமேசான் தளம் தற்சமயம் ஆறு மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் தளங்களில் அமேசான் செயலி அல்லது டெஸ்க்டாப் தளங்களில் பயனர் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் புதிய மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பது அமேசானில் பண்டிகை கால விற்பனை மேலும் அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது.
இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும்.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் 24 முதல் 72 மணி நேரங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும், மேக் போன்ற சாதனங்கள் டெலிவரி ஆக ஒரு மாதம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மாணவர்களுக்கு பிரத்யேக நிதி சலுகைகள் மற்றும் தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்ப்படுகின்றன. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர் சேவை மைய வசதியும் வழங்கப்படுகிறது. இதில் சேவை மைய அதிகாரி சாட் அல்லது அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர் சந்தேகங்களை பூர்த்தி செய்கின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒடிடி பலன்களை வழங்கும் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புது ஜியோ ஃபைபர் சலுகைகளை தொடர்ந்து தற்சமயம் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளில் பல்வேறு ஒடிடி சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் மூலம் தலைசிறந்த கனெக்டிவிட்டி, பொழுதுபோக்கு மற்றும் அனுபவத்தை வழங்க இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து உள்ளது.

ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது. இதில் 75 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வழங்கப்படுகிறது. ரூ. 599 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக ஒரு சிம் கார்டு மற்றும் ஃபேமிலி பிளான் வழங்கப்படுகிறது.
ரூ. 799 சலுகையில் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக இரு சிம் கார்டுகள், ஃபேமிலி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 999 சலுகையில் 200 ஜிபி டேட்டா, மூன்று சிம் கார்டுகள், ரூ. 1499 சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அனைத்து சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.
வி நிறுவனம் ரூ. 405 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய சலுகைகளின் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இவற்றுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
வழக்கமாக ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா ரூ. 699 விலையில் வழங்கப்படுகிறது. இதில் 12 மொழிகளில் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன. வி சலுகைகளில் ஜீ5 சந்தா மட்டுமின்றி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது.

வி ரூ. 355, ரூ. 405, ரூ. 696, ரூ. 795 மற்றும் ரூ. 2595 போன்ற சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றில் ரூ. 355 மற்றும் ரூ. 405 சலுகைகளில் முறையே 50 ஜிபி மற்றும் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வி ரூ. 595, ரூ. 795 மற்றும் ரூ. 2595 விலை சலுகைகளில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி முறையே 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் ஆகும்.






