என் மலர்tooltip icon

    கணினி

    மைக்ரமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரேஸ் நௌ நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள புதிய டேப்லெட் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:  

    மைக்ரோமேக்ஸ் மற்றும் இரோஸ் நௌ நிறுவனங்கள் இணைந்து புதிய கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் வெளியிட்டுள்ளன. புதிய டேப்லெட் இரோஸ் நௌ சேவையை பயன்படுத்த ஒரு ஆண்டு சந்தாவுடன் வழங்கப்படுகிறது. இரோஸ் நௌ சேவையை கொண்டு பல்வேறு மொழிகளில் கிடைக்கும் திரைப்படங்கள், மியூசிக் வீடியோ, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். 
      
    இரோஸ் நௌ சேவைக்கு ஒரு ஆண்டு சந்தா வழங்கப்படுகிறது. புதிய டேப்லெட்டில் 8.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DTS சவுண்டு, 4ஜி வோல்ட்இ மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய டேப்லெட் சாதனத்தின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படாத நிலையில், இதன் விற்பனை செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆன்லைனில் பலரது உயிரை பறித்த புளூ வேல் கேம், கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இத்துடன் சர்வதேச அளவில் சென்னை உள்பட ஐந்து இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
    புதுடெல்லி: 

    ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த கொடூர கேமான புளூ வேல் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் மிகவேகமாக பிரபலமான புளூ வேல் கேம், சர்வதேச அளவில் 30 நகரங்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் புளூ வேல் முக்கிய பங்கு வகித்து இருப்பது தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் புளூ வேல் சார்ந்து கூகுளில் அதிக முறை தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ஆன்லைன் தேடல்களில் ஐந்து இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. புளூ வேல் சார்ந்த தேடல்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்திருக்கிறது.  



    தேடல்கள் அதிகமான நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இந்த கேம் விளையாடியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களால் மேலும் பிரபலமானது. ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என அனைத்து காலக்கட்டத்திலும் கொல்கத்தா வாசிகள் புளூ வேல் கேம் சார்ந்து அதிகம் தேடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கூகுளில் புளூ வேல் சார்ந்த தேடல்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ள நிலையில், சான் அன்டோனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, ஹவுரா, பாரிஸ் (பிரான்ஸ்) உள்ளிட்ட நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொல்கத்தா, கவுகாத்தி, சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் புளூ வேல் சார்ந்த தேடல்கள் அதிகமாகியுள்ளது. 
    ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர்3 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபால் லேப்டாப் கைரேகை ஸ்கேனர் மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் கொண்டுள்ள புதிய லேப்டாப்பில் தொடுதிரை வசதி மற்றும் எடை குறைவாக இருக்கிறது. 

    குவாட்கோர் இன்டெல் பென்டியம் N4200 பிராசஸர், 4ஜிபி ரேம் கொண்டுள்ள புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டிராக்பேடில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் மட்டுமின்றி விண்டோஸ் ஹெல்லோ மூலம் அன்லாக் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது.



    ஐபால் காம்ப்புக் ஏர்2 சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்சல் 10-பாயின்ட் மல்டி-டச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - குவாட்கோர் இன்டெல் N4200 பிராசஸர்
    - இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 505
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - பில்ட்-இன் கீபோர்டு மற்றும் டிராக்பேட்
    - விண்டோஸ் 10 இயங்குதளம்
    - 2 எம்பி முன்பக்க கேமரா

    ஐபால் காம்ப்புக் ஏர்3 லேப்டாப் மொத்தம் 1.58 கிலோ எடை கொண்டிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், நான்கு ஸ்பீக்கர்கள், டூயல் பேன்ட் வைபை 802.11ac, ப்ளூடூத் 4.0, இரண்டு யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், கைரேகை ஸ்கேனர் 37 Wh லி-பாலிமர் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்தியாவில் ஐபால் காம்ப்புக் ஏர்3 விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில், புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்யும் ரோபோட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    டோக்கியோ:

    டோக்கியோ சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி இம்முறை ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடத்தப்பட்டது.

    இந்த கண்காட்சியில் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள், இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் கண்காட்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு இறுதிச் சடங்கு தொழில்முறை பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டன. 

    அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜப்பான் நாட்டின் சாஃப்ட்பேங்க் எனும் நிறுவனம் தயாரித்த பெப்பர் ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



    தற்சமயம் இறுதிச் சடங்கு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், ஜப்பானை சேர்ந்த நிசெய் இகோ புத்த மத குரு இல்லாத நேரங்களிலும், மனிதர்களால் இறுதிச் சடங்கு செய்வோரை அணுகமுடியாமல் போகும் பட்சத்திலும் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இறுதிச் சடங்கு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

    இயந்திரம் மற்றும் மென்பொருள் மூலம் மனிதன் உருவாக்கிய ரோபோட் கொண்டு மரணித்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் முறை கேட்க விசித்திரமாக இருந்தாலும், ஜப்பான் நாட்டில் குழந்தைகளை விட பெரியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் ரோபோட் மூலம் இறுதிச் சடங்கு செய்யும் முறை சாதாரண நிகழ்வாக மாறிவிடும் என்றே கூறப்படுகிறது.

    இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட் வீடியோவினை கீழே காணலாம்..,

    ஆப்பிள் நிறுவனத்தின் 2017 கீநோட் நிகழ்வில் புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் வாட்ச் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐபோன்களை போன்றே புதிய ஆப்பிள் வாட்ச் 3 சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களுடன் வெளியாக இருக்கும் ஆப்பிள் வாடச் 3 சார்ந்த பல்வேறு தகவல்கள் ஆப்பிள் வல்லுநர்கள் சார்பில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் கீநோட் நிகழ்வில் புதிய ஆப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    அந்தவகையில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தின் சில மாடல்களில் எலெக்ட்ரானிக் எல்டிஇ வசதி கொண்ட சிம் கார்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய எல்டிஇ இ-சிம் வாட்ச்-ஐ போனாக மாற்றாது என கூறப்பட்டுள்ளது. புதிய இ-சிம் எல்டிஇ கொண்டிருக்கும் என்பதால் சில சந்தைகளில் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   



    ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தில் இ-சிம் வழங்கப்பட்டாலும், இதில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படாது என்றும், டேட்டா டிரான்ஸ்மிஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கான பேஸ்பேன்ட் சிப்செட்களை குவால்காம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இவற்றை இன்டெல் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்டது.

    புதிய ஆப்பிள் வாட்ச் 3 சார்ந்து எவ்வித புகைப்படமும் வெளியாகாத நிலையில், இந்த சாதனம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இவை ஏற்கனவே ஆப்பிள் அறிமுகம் செய்து, விற்பனை செய்யப்படும் வாட்ச் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தில் பில்ட்-இன் குளூகோஸ் மானிட்டர் வழங்கப்படும் என்றும் இதில் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய வகை டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் எல்டிஇ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்வதேச அளவில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த தகவல்கள் டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆய்வில் முதலிடம் பிடித்த நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களின் நிலையை பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    சர்வதேச சந்தையில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த முழு தகவல்கள், டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தை ஆண்டை விட 3.6% வளர்ச்சியை கடந்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 39.96 மில்லின் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மாடல்களின் வரவு மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக நோட்புக் சாதனங்கள் விற்பனையானது இரண்டாவது காலாண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டின் முதல் பாதி வரை சந்தை கணிப்புகளை முறியடிக்கும் வகையில் வட அமெரிக்காவில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டது.

    முதல் அரையாண்டு வரை அதிக வரவேற்பை கிடைத்துவிட்ட நிலையில், அடுத்த காலாண்டுகளில் நோட்புக் விற்பனை கணிசமான அளவு குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக டிரென்ட் ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 3% இல் 5% வரை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 



    நோட்புக் நிறுவனங்களை பொருத்த வரை எச்பி நிறுவனம் ஆண்டு இலக்காக 10% விற்பனையை நிர்ணயித்துள்ளது. மேலும் மூன்றாவது காலாண்டிலும் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. லெனோவோ நிறுவனமும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

    சர்வதேச அளவில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்ததில் எச்.பி. நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டெல் நிறுவனம் அதிகபட்சமாக 21.3 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளில் எச்.பி. நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வட அமெரிக்க பள்ளிகளுக்கு நோட்புக்களை விநியோகம் செய்து பேக்-டூ-ஸ்கூல் விற்பனையில் எச்.பி. நிறுவனம் தொடர்ந்து அதிக விற்பனையை பெற்றுள்ளது. எச்.பி. நிறுவனத்தைத் தொடர்ந்து லெனோவோ நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய காலாண்டை விட 8.5 சதவிகித விற்பனையை பெற்றுள்ள லெனோவோ மொத்தமாக 9.35 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்துள்ளது.



    லெனோவோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 8.05 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்துள்ள லெனோவோ வருடாந்திர அளவில் 2.4 சதவிகித சரிவை சந்தித்துள்ளது. ஆசியா-பசிபிக் பகுதிகளில் நோட்புக் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரான்டு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    டெல் நிறுவனம் சர்வதேச அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் 21.3 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றுள்ள டெல் முந்தைய காலாண்டில் 7.4 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வடஅமெரிக்க டென்டர்கள் மற்றும் க்ரோம்புக் வெளியீடு உள்ளிட்டவை டெல் நிறுவனத்தை மூன்றாவது இடத்தில் தக்க வைத்துக் கொள்ள உதவியது. 

    ஆப்பிள் நிறுவனம் 17.1 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் அசுஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் ஆறாவது இடம் பிடித்துள்ளது.
    ஜிமெயி்ல் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பில் ஆன்டி-பிஷிங் செக்யூரிட்டி செக் அம்சம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஐஓஎஸ் இயங்குதளத்திலும் இந்த பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஜிமெயில் செயலியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதை தவிர்க்க வழி செய்யும் ஆன்டி-பிஷிங் செக்யூரிட்டி செக் வசதி ஆண்ட்ராய்டு பதிப்பில் கூகுள் இந்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கியது. இந்நிலையில், இதே வசதியை ஐஓஎஸ் தளத்திலும் கூகுள் வழங்கியுள்ளது.

    முன்னதாக கூகுள் டாக்ஸ் லின்க் ஜிமெயிலில் பரவி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதைத் தொடர்ந்து கூகுள் இந்த பாதுகாப்பு வசதியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இம்முறை கூகுள் வழங்கியுள்ள பாதுகாப்பு வசதி வாடிக்கையாளர்கள் ஐபோன் அல்லது ஐபேட் மூலம் ஜிமெயில் செயலியை பயன்படுத்தினால் மால்வேர் அடங்கியுள்ள தளங்களில் நுழைய முற்படும் போது எச்சரிக்கை செய்யும்.  



    இந்த எச்சரிக்கையில் வாடிக்கையாளர்கள் நுழைய விரும்பும் தளம் பாதுகாப்பற்றது, பாதுகாப்பானது தான் என்ற எண்ணினால் மட்டும் தொடரவும் என்ற தகவல் திரையில் தோன்றும். இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் குறிப்பிட்ட தளத்தை தொடரும் போது, அதிக விளம்பரங்கள் நிறைந்த நிறைய தளங்கள் தொடர்ச்சியாக திறக்கும். இவ்வாறு ஆகும் போதே நீங்கள் மால்வேர் உள்ள தளத்தை கிளிக் செய்திருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    கடந்த ஆண்டு கணினியில் கூகுள் க்ரோம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சேஃப் பிரவுசிங் போன்ற அம்சம் இம்முறை ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது. சேஃப் பிரவுசிங் செய்யும் போது மால்வேர் அதிகம் இடம்பெற்றுள்ள தளங்களில் நுழையும் கூகுள் எச்சரிக்கை செய்யும்.
    விண்டோஸ் கணினிகளை பயன்படுத்துவோருக்கு இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்களில் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கணினி அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக விண்டோஸ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை போன்று கணினிகளுக்கு விண்டோஸ் இயங்குதளம் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு பல்வேறு இலவச செயலிகளையும் வழங்குகிறது. 

    இங்கு விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் டாப் 5 செயலிகளை தொடர்ந்து பார்ப்போம். 



    ஃபயர்ஃபாக்ஸ்:

    விண்டோஸ் இயங்குதளத்தில் வழங்கப்படும் பிரவுசர்களையே இன்றும் பயன்படுத்துபவர் எனில், உங்களுக்கு ஏற்ற பிரவுசராக ஃபயர்ஃபாக்ஸ் இருக்கிறது. எளிமையான அம்சங்கள், வேகமாக இயங்குவதோடு பாப்அப்களையும் பிளாக் செய்யும் திறன் கொண்டுள்ளது. 



    தண்டர்பேர்ட்:

    அதிகப்படியான அம்சங்கள் நிறைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்ட் இருக்கிறது. மேலும் இணையத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மால்வேர் தாக்குதல்களை அனுமதிக்காமல், கோளாறான இணையதளங்கள் சார்ந்த தகவல்களை வழங்கும். மேலும் இது மெமரி குறைவாக இருப்பதோடு வேகமாகவும் இருக்கிறது.



    சிகிளீனர்:

    கணினியின் வேகம் குறைவாக இருக்கிறதா? கணினியின் வேகத்தை அதிகரிக்க சிகிளீனர் கொண்டு கணினிகளை ஸ்கேன் செய்யலாம் இவ்வாறு செய்யும் போது கணினியில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்து மெமரியை அதிகரித்து கணினியின் வேகத்தை சீராக்கும். 



    ரெக்குவா:

    ரெக்குவா மென்பொருள் கொண்டு கணினியில் சேமித்து வைக்கப்பட்டு தவறுதலாக அழிந்து போன தரவுகளை மீட்க முடியும். மற்ற ரிக்கவரி மென்பொருள்களை விட ரெக்குவா எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.



    வி.எல்.சி. மீடியா பிளேயர்:

    கணினி வாங்கியதும் பெரும்பாலானோர் முதலில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருளாக வி.எல்.சி. மீடியா பிளேயர் இருக்கிறது. அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களையும் இயக்குவதோடு எளிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
    புதிய லேப்டாப் வாங்க வேண்டுமா, அதுவும் ரூ.30,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டுமா? நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டிய டாப் 5 லேப்டாப்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    புதிய லேப்டாப் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதிகம் செலவிடாமல் ரூ.30,000 பட்ஜெட்டில் புதிய லேப்டாப் வாங்க வேண்டுமா?

    கவலை வேண்டாம். ரூ.30,000 பட்ஜெட்டில் வாங்க அதிக மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கிறது. எனினும் இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டப்களை கொண்டு எளிய பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். வெப் பிரவுசிங், திரைப்படம், எளிய வொர்டு பிராசஸர்கள், ஸ்பிரெட்ஷீட் மற்றும் பிரசென்டேஷன் மென்பொருள் மற்றும் எளிய போட்டோ எடிட்டிங் செயலிகளை பயன்படுத்த முடியும். 

    இங்கு ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்களில் டாப் 5 லேப்டாப்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹெச்.பி. பெவிலியன் 11-AB005TU

    இந்தியாவில் இதன் விலை ரூ.26,900

    * 11.6 இன்ச் டச் ஸ்கிரீன்
    * 1.6 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் N3710 பிராசஸர்
    * இன்டெல் எச்.டி கிராஃபிக்ஸ் 405
    * 4 ஜிபி ரேம்
    * 500 ஜிபி ஹார்டு டிரைவ்
    * விண்டோஸ் 10 இயங்குதளம்



    ஏசர் இன்ஸ்பையர் R3-131T

    இந்தியாவில் இதன் விலை ரூ.27,500

    * 11.6 இன்ச் டச் ஸ்கிரீன்
    * 1.6 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் N3710 பிராசஸர்
    * இன்டெல் எச்.டி கிராஃபிக்ஸ் 405
    * 4 ஜிபி ரேம்
    * 500 ஜிபி ஹார்டு டிரைவ்
    * விண்டோஸ் 10 இயங்குதளம்



    லெனோவோ ஐடியாபேட் 110-15ACL

    இந்தியாவில் இதன் விலை ரூ.23,990

    * 15.6 இன்ச் 
    * 2.5 ஜிகாஹெர்ட்ஸ் AMD A8-7410 பிராசஸர்
    * ரேடியான் R5 கிராஃபிக்ஸ்
    * 4 ஜிபி ரேம்
    * 1000 ஜிபி ஹார்டு டிரைவ்
    * விண்டோஸ் 10 இயங்குதளம்



    லெனோவோ ஐடியாபேட் 110

    இந்தியாவில் இதன் விலை ரூ.24,990

    * 15.6 இன்ச்
    * 2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3-6006U பிராசஸர்
    * இன்டெல் எச்.டி 520 கிராஃபிக்ஸ்
    * 4 ஜிபி ரேம்
    * 1000 ஜிபி ஹார்டு டிரைவ்
    * விண்டோஸ் 10 இயங்குதளம்



    டி.ஒ.எஸ். எச்.பி. 15-BE016TU

    இந்தியாவில் இதன் விலை ரூ.25,990

    * 15.6 இன்ச்
    * 2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3-6006U பிராசஸர்
    * இன்டெல் எச்.டி 520 கிராஃபிக்ஸ்
    * 4 ஜிபி ரேம்
    * 1000 ஜிபி ஹார்டு டிரைவ்
    * விண்டோஸ் 10 இயங்குதளம்
    பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அறிவியல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள மூன்று கட்டங்களில் சூப்பர்கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு இதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களில் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துவக்க நிலை பணிகளாக இரண்டு அங்கங்களில் தேசிய சூப்பர்பகம்ப்யூட்டர் திட்டத்தில் அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச் மற்றும் கம்ப்யூட்டர் நோட் சப்சிஸ்டம்களை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட இருக்கிறது. 

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.4500 கோடி ஆகும். அதிநவீன கம்ப்யூட்டிங் அமைப்பு சார்பில் இந்த திட்டத்திற்கான துவக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வருகிறது. 

    மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 50 சூப்பர்கம்ப்யூட்டர்கள் கட்டமைக்கப்பட இருக்கிறது. இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் நாடு முழுக்க அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.  



    இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மிலிந்த் குல்கர்னி, திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆறு சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    முதற்கட்டமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதன்பின் கட்டமைக்கப்பட இருக்கிறது. மற்ற மூன்று கம்ப்யூட்டர்களும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அதன்பின் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. 

    இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் தலைவர் அஷூடோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டமாக அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச், கம்ப்யூட் நோட் மற்றும் நெட்வொர்க் சிஸ்டம்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.



    மூன்றாவது கட்டமாக அனைத்து சூப்பர்கம்ப்யூட்டர்களும் கட்டமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்தியாவில் சூப்பர்கம்ப்யூட்டிங் மிஷன் 1988-ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதற்கட்டமாக பரம் சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் பத்து ஆண்டுகள் நீடித்தது. தற்சமயம் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உலகின் தலைசிறந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படு வருகிறது.     
                                                
    இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 25 சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை வானிலை, பருவ நிலை மாற்றம் மற்றும் அணு எதிர்வினைகள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. 
    லெனோவோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் மற்றும் கன்வெர்டிபிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐடியாபேட் மற்றும் யோகா சீரிஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடல்களின் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோ ஐடியாபேட் மற்றும் யோகா சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யோகா 720 மற்றும் யோகா 520 கன்வெர்டிபில்கள் முன்னதாக மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

    லெனோவோ யோகா 720 மாடலில் 7th Gen இன்டெல் கோர் i7 பிராசஸர், மெல்லிய அலுமினி்யம் வடிவமைப்பு கொண்டுள்ளது. 19 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் இந்த லேப்டாப் 1.25 கிலோ எடை கொண்டுள்ளது. இரண்டு கன்வெர்டிபிள் மாடல்களிலும் NVIDIA கிராஃபிக்ஸ், FHD டிஸ்ப்ளே மற்றும் கைரேகை ஸ்கேர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சாதனங்களில் JBL ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளதால், தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம் யோகா 720 மாடலிலும், யோகா 520 மாடலில் ஹார்மன் ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆப்டிக்கல் லெனோவோ ஆக்டிவ் பென் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. 

    லெனோவோ ஐடியாபேட் 720s, 520s மற்றும் 320s லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, 8 மணி நேர வீடியோ பிளேபேக் பேட்டரி லைஃப், டால்பி அட்மோஸ் கொண்ட JBL ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐடியாபேட் 520 மற்றும் 320 லேப்டாப்களில் NVIDIA GeForce 940MX கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஐடியாபேட் 320 டால்பி ஆடியோ ஆப்டிமைஸ்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐடியாபேட் 520 ஹார்மன் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தில் மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் மற்றும் ஆங்கில்டு எட்ஜ் மற்றும் மெட்டல் சர்ஃபேசஸ் கொண்டுள்ளது. 
    டெல் நிறுவனத்தின் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்பேஸ் ப்ரோ லேப்டாப் போன்று காட்சியளிக்கும் டெல் 7285 வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும்.
    சான்பிரான்சிஸ்கோ:
      
    டெல் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் பார்க்க மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. 

    இந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்லெட் மற்றும் கழற்றக் கூடிய கீபோர்டு கொண்டுள்ள புதிய லேப்டாப் 13-இன்ச் டிஸ்ப்ளே 2880x1920 பிக்சல் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. 

    டெல் 2-இன்-1 மாடல் இன்டெல் கோர் i5 பிராசஸர் 128 ஜிபி மெமரி மற்றும் i7 பிராசஸர் 256 ஜிபி மெமரியும் 8 அல்லது 16 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    டெல் 7285 லேடிட்டியூட் நோட்புக் விலை 1199 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.78,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கீபோர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மேட் 549.99 டாரல்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,439 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×