என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ டேப்லெட்கள், ஐமேக் AIO, மேம்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்களின் இந்திய விற்பனை துவங்கியது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபேட் ப்ர டேப்லெட்கள், ஐமேக் AIO மற்றும் மேம்ப்டுத்தப்பட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்களின் இந்திய விற்பனை ஒருவழியாக துவங்கியுள்ளது. இவற்றை ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
புதிய ஐபேட் மாடல்கள் ஏற்கனவே ஆப்பிள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு சிறப்பம்சங்களும் இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
10.5-இன்ச் ஐபேட் ப்ரோ

புதிய 10.5-இன்ச் ஐபேட் ப்ரோ சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. வை-பை வசதி கொண்ட மாடல்களின் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி விலை முறையே ரூ.50,800, ரூ.58,300 மற்றும் ரூ.73,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வை-பை மற்றும் செல்லுலார் வசதி கொண்ட மாடல் விலை ரூ.61,400, ரூ.68,900 மற்றும் ரூ.84,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
12.9 இன்ச் ஐபேட் ப்ரோ

புதிய 12.9-இன்ச் ஐபேட் ப்ரோ சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. வை-பை வசதி கொண்ட மாடல்களின் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி விலை முறையே ரூ.63,500, ரூ.70,900 மற்றும் ரூ.86,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வை-பை மற்றும் செல்லுலார் வசதி கொண்ட மாடல் விலை ரூ.74,100, ரூ.81,400 மற்றும் ரூ.97,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ டேப்லெட்களில் ஃபுல்-சைஸ் ஐ.ஒ.எஸ். 11 கீபோர்டினை திரையில் சப்போர்ட் செய்கிறது. இத்துடன் ட்ரூ-டோன் கலர் டிஸ்ப்ளே, 600நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் எச்.டி.ஆர். வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேக்புக் ப்ரோ

மேம்படுத்தப்பட்ட 13-இன்ச் மேக்புக் ப்ரோ டச் பார் இல்லாத மாடல் 128 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.1,04,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டச் பார் கொண்ட 13-இன்ச் மேக்புக் ப்ரோ ரூ.1,47,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 15-இன்ச் திரை கொண்ட பேஸ் மாடல் மேக்புக் ப்ரோ டச் ஐடி மாடல் ரூ.1,95,800 ஆகும். அனைத்து மாடல்களிலும் இன்டெல் ஏழாம் தலைமுறை கேபி லேக் பிராசஸர் மூலம் இயங்குகிறது.
மேக்புக் ஏர் மற்றும் 12-இன்ச் மேக்புக்

இன்டெல் ஏழாம் தலைமுறை கேபி லேக் பிராசஸர் மூலம் இயங்கும் ஆப்பிள் மேக்புக் ஏர் 128 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.80,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12-இன்ச் மேக்புக்கிலும் இன்டெல் கேபி லேக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,04,800 முதல் துவங்குகிறது.
ஐமேக் 21.5-இன்ச் மற்றும் 27-இன்ச்

மேம்படுத்தப்பட்ட 21.5 இன்ச் 4K ரெட்டினா டிஸ்ப்ளே இல்லாத ஐமேக் விலை ரூ.90,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 21.5 இன்ச் 4K ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட மாடல் ரூ.1,06,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 27-இன்ச் மாடல் ரூ.1,47,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்களுடன் ஆப்பிளின் புதிய இயங்குதளத்தின் பீட்டா பதிப்புகள் இந்த மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் இந்தியாவில் ஜூலை 10-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ5 பிராட்வெல் சிப்செட் கொண்டுள்ள மேக்புக் ஏர் 128 ஜிபி மாடல் ரூ.80,900 விலையிலும், 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.96,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது, இதன் முந்தைய மாடலின் விலை ரூ.1,29,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும் தற்சமயம் இதன் ஸ்டோரேஜ் 128 ஜிபி மட்டுமே வழங்கப்படுகிறது.
256 ஜிபி மேக்புக் ப்ரோ மாடல் ரூ.1,26,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ டச்பார் ரூ.1,000 குறைவாக நிர்யணிக்கப்பட்டுள்ளது. இதனால் 256 ஜிபி மாடல் ரூ.1,54,900 மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ரூ.1,71,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட 12 இன்ச் மேக்புக் தற்சமயம் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் சாதனத்தில் கேபி லேக் பிராசஸர்கள், 50 சதவிகித வேகம் கொண்ட எஸ்.எஸ்.டி. மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கீபோர்டுகளுடன் வழங்கப்படும்.
புதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வைபை மாடல் விலை ரூ.52,900 முதல் துவங்குகிறது. 256 ஜிபி மாடல் ரூ.60,900 மற்றும் 512 ஜிபி மாடல் ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று யு.எஸ்.பி. 3 போர்ட் கொண்டுள்ள மேக் மினி ரூ.40,990 முதல் துவங்குகிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்கைப் லைட் செயலியில் புதிய ஃபர்ம்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் செயலியில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஸ்கைப் லைட் செய்லிக்கு புதிய ஃபர்ம்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் மூலம் செயலியின் அல்காரிதம்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடியோ சாட் செய்யும் போதும் குறைந்தளவு மொபைல் டேட்டாவை ஸ்கைப் லைட் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் வேகம் சீரற்ற நிலையில் இருக்கும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள செயலியாக ஸ்கைப் லைட் இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட சில மாதங்களில் இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் ஸ்கைப் லைட் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆதார் வேலிடேஷன் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதார் உலகின் மிகப்பெரிய தேசிய அடையாள குறியீட்டு எண் ஆகும். இந்த குறியீட்டு எண் மக்கள் அரசாங்கம், வியாபாரம் மற்றும் பல்வேறு தளங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஸ்கைப் லைட் செயலியில் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், மற்றவர்களுடன் அதிக பாதுகாப்புடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
புதிய வசதியை கொண்டு அழைப்புகளை மேற்கொள்பவர் அல்லது அழைப்புகளை மறுமுனையில் பெறுபவர்கள் ஆதார் வெரிபிகேஷன் செய்ய கோரிக்கை விடுக்கலாம், இதை செயல்படுத்த "Verify Aadhaar identity" பட்டனை கிளிக் செய்து, 12-இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்து ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் (one-time password) மூலம் உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் எண் மூலம் ஒருமுறை உறுதி செய்துவிட்டால் அடுத்தடுத்த அழைப்புகளில் மீண்டும் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
பட்ஜெட் விலையில் போட்டோ எடிட்டிங் செய்ய உதவும் பிரத்தியேக டேப்லெட் சாதனத்தை கோடாக் வெளியிட்டுள்ளது. கோடாக் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
கோடாக் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அந்நிறுவனம் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராக்களை தவிர்த்து புகைப்படங்களை எடிட் செய்ய ஏதுவாக புதிய டேப்லெட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்கோஸ் நிறுவனம் வடிவமைத்து, தயாரித்துள்ள புதிய டேப்லெட் மென்பொருள் அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இமேஜிங் செயலிகள், 1 ஜிபி ரேம் மூலம் புகைப்படங்களை சீராக எடிட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
கூகுளின் ஸ்நாப்சீட், சைபர்லிண்க் போட்டோ டைரக்ட் என பல்வேறு பிரபல செயலிகள் கோடாக் டேப்லெட்டில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள கோடாக் டேப்லெட் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
10.1 இன்ச் திரை, 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வகை மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் புதிய கோடாக் டேப்லெட் 89 டாலர்கள் மற்றும் 134 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கோடாக் டேப்லெட் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எச்பி நிறுவனத்தின் புதிய கன்வெர்டிபிள் லேப்டாப்கள் வெளியிடப்பட்டுள்ளது. எச்பி பெவிலியன் X360 மற்றும் எச்பி ஸ்பெக்டர் X360 என அழைக்கப்படும் நோட்புக் சாதனங்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
கணினி மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள எச்பி நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள புதிய சாதனங்களுடன் எச்பி ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
எச்பி-யின் புதுவரவு சாதனங்கள் லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் சிறப்பம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கும் கன்வெர்டிபிள் லேப்டாப்களின் விலை ரூ.40,290 முதல் துவங்குகிறது.
எச்பி பெவிலியன் X360 மற்றும் ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்:

புதிய எச்பி பெவிலியன் X360 முழுமையான மெட்டல் வடிவமைப்பு மற்றும் 11.0 இன்ச், 14.0 இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இவற்றுடன் மல்டி-டச் டிஸ்ப்ளே, பேக்லிட் கீபோர்டு மற்றும் எச்பி இமேஜ்பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய பெவிலியன் X360 லேப்டாப் ஏழாம் தலைமுறை இன்டெல் பிராசஸர், Nvidia GeForce கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 2 ஜிபி வீடியோ ரேம், 1000 ஜிபி SSHD, 8 ஜிபி SSD தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெக்டர் X360 லேப்டாப் 1.3 கிலோ எடையில் 13.3 இன்ச் ஐபிஎஸ் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. ஏழாம் தலைமுறை இன்டெல் பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி PCIe SSD ஸ்டோரேஜ் மற்றும் இமேஜ்பேட் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை தேதி:

புதிய எச்பி பெவிலியன் X360 லேப்டாப் விலை 11.6 இன்ச் மாடல் ரூ.40,290 முதல் துவங்குகிறது. அதிகபட்சமாக 14.0 இன்ச் மாடல் ரூ.55,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்பி ஸ்பெக்டர் X360 லேப்டாப் 13.3 இன்ச் மாடல் ரூ.1,15,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் விற்பனை எச்பி விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் முன்பதிவு இன்றே துவங்கிவிட்டது. எச்பி பெவிலியன் X360 முன்பதிவு கட்டணம் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பெவிலியன் X360 மற்றும் ஸ்பெக்டர் X360 லேப்டாப்களில் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் எச்பி ஆடியோ பூஸ்ட் இரண்டு ஸ்பீக்கர்களிலும் வழங்கப்பட்டுள்ளது. எச்பி ஆக்டிவ் பென் நோட்புக் திரையில் வரையும் போது வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங்-இன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 20-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய டேப்லெட் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ள புதிய டேப்லெட் பார்சிலோனாவில் நடைபெற்று முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த முன்னணி சிறப்பம்சங்கள் வழங்கப்படவில்லை என்றாலும், புதிய டேப்லெட் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மற்றும் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க அட்ரினோ 530 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 9.7 இனஅச் எச்டிஆர் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1536x2048 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி டேப் எஸ்3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.
4ஜி வசதி கொண்ட நானோ-சிம் ஸ்லாட், வை-பை, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி 3.1, டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
புதிய கேலக்ஸி டேப் எஸ் 3 சாதனத்துடன் புக் கவர், கீபோர்டு கவர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த எஸ்-பென் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியுள்ள புதிய டேப் எஸ் சீரிஸ் சாதனம் இந்தியாவில் ரூ.47,990 என்ற விலையில் விற்பனை செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது.
வோடபோன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டேப் என்8 சாதனம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் ரக டேப்லெட்டை ஏற்கனவே பிளாக்பெரி மற்றும் ஆல்காடெல் சாதனங்களை தயாரித்த டிசிஎல் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
வோடபோன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டேப் என்8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வொல்கானோ பிளாக் நிறத்தில் கிடைக்கும் புதிய டேப்லெட் 10.1 இன்ச் ஐபிஎஸ், 1200x800 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் MT8735B பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 4600 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள ஸ்மார்ட் டேப் என்8 புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமராவும், 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டேப் என்8 எல்டிஇ கேட்4, ப்ளூடூத் 4.1, வைபை உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ 8.0 டெஸ்டிங் தளத்தின் மூலம் லீக் ஆகியுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய டேப் ஏ 8.0 பட்ஜெட் ரகத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி டேப் ஏ 8.0 பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய டேப்லெட் வெளியாகும் தேதி குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
GFXBench தளத்தில் புதிய டேப்லெட் SM-T355 என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி டேப் ஏ 8.0 இதே பெயரில் பட்டியலிடப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்கலில் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் 8.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 அட்ரினே 308 ஜிபியு கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 2 ஜிபி ரேம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் பேட்டரி மற்றும் எத்தனை நிறங்களில் வெளியிடப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
பெர்லின் நகரில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ விழாவில் புதிய டேப்லெட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியகியுள்ள சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது புதிய சாம்சங் டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது. தற்சமயம் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 இந்தியாவில் ரூ.16,500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டேப்லெட்களில் வழங்கப்பட இருக்கும் ரேம் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்த 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டேப்லெட்களில் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியான தகவல்களில் இரு டேப்லெட்களிலும் 4ஜிபி ரேம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் சிறிய 9.7 இன்ச் மாடலில் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய 10.5 இன்ச் மாடலில் அதிக ரேம் வழங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான டியர்டவுன் தகவல்களில் 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலில் 4ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிள் ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் சிறப்பம்சங்கள்:

* 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே
* A10X ஃபியூஷன் சிப்செட் M10 மோஷன் கோபிராசஸர்
* 64 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மாடல்கள்
* ஐ.ஒ.எஸ் 10, புதிய ஐ.ஒ.எஸ் 11 அப்கிரேடு செய்யும் வசதி
* டச் ஐடி கைரேகை ஸ்கேனர்
* 12 எம்பி ஐசைட் கேமரா, ட்ரூ டோன் பிளாஷ்,
* 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
* 7 எம்பி எச்டி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
* 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 30.4‐ வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
ஆப்பிள் ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் சிறப்பம்சங்கள்:

* 12.9 இன்ச் 2732x2048 பிக்சல் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே
* A10X ஃபியூஷன் சிப்செட் M10 மோஷன் கோபிராசஸர்
* 64 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மாடல்கள்
* ஐ.ஒ.எஸ் 11
* டச் ஐடி கைரேகை ஸ்கேனர்
* 12 எம்பி ஐசைட் கேமரா, ட்ரூ டோன் பிளாஷ்,
* 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
* 7 எம்பி எச்டி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
* 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 41 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
இந்தியாவில் புதிய ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் மாடல் விலை ரூ.52,900 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.87,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் மாடல் விலை ரூ.65,900-இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,00,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஏ3 10 டேப் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஆல்காடெல் ஏ3 10 டேப் என அழைக்கப்படுகிறது. புதிய டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என ஆல்காடெல் அறிவித்துள்ளது.
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்காடெல் ஏ3 10 டேப் ஆணட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 10.0 இன்ச் 1280x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய டேப்லெட் 4ஜி எல்டிஇ, வை-பை, ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி ஒடிஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆல்காடெல் நிறுவனத்தின் பிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆல்காடெல் கோ பிளிப் என அழைக்கப்படும் புதிய பீச்சர் போன் 2.8 இன்ச், 240x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி எல்டிஇ, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 482 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
உலகில் ஜிஃப் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் விதமாக பேஸ்புக் தளத்தில் கமெண்ட்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் கமெண்ட்களிலும் ஜிஃப்களை உபயோகிக்க முடியும்.
புதுடெல்லி:
ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட் (Graphic Interchange Format, GIF) ஜூன் 15, 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது.
அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஃப் வசதி பேஸ்புக்கின் மெசன்ஜர் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மெசன்ஜர் செயலியை போன்றே பேஸ்புக் தளத்திலும் கமெண்ட் ஐகானை கிளிக் செய்தால் போட்டோ, வீடியோ, எமோஜி, ஸ்டிக்கர் ஐகான்களிடையே ஜிஃப் ஐகானும் சேர்க்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் கமெண்ட்களில் உள்ள ஜிஃப் ஐகானை கிளிக் செய்து பேஸ்புக் ஏற்கனவே அதிகம் பயன்படுத்தப்படும் ஜிஃப்களை வரிசைப்படுத்தும். இதோடு புதிய ஜிஃப்களை தேடும் சர்ச் பாக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அபேட்ட் செய்யப்பட்ட பேஸ்புக் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் அதாவது நிமிடத்திற்கு 25,000 ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவித்திருந்தது. 2016-இல் மட்டும் ஜிஃப் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2017 முதல் நாளில் மட்டும் 40 கோடி ஜிஃப்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் டேப்லெட் சாதனங்களின் விற்பனை 16 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய சி.எம்.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் டேப்லெட் சாதனங்களின் விற்பனை 16 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக சமீபத்திய சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான விளம்பரங்கள் இல்லாததே விற்பனை சரிவுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர்- டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாத காலகட்டத்தில் இந்திய டேப்லெட் விற்பனை 6 சதவிகிதம் குறைந்துள்ளது. எனினும் இந்திய டேப்லெட் சந்தையில் 34 சதவிகிதம் பேர் டேட்டாவிண்ட் டேப்லெட்களை பயன்படுத்தி வருகின்றனர். டேட்டாவிண்ட் நிறுவனத்தை தொடர்ந்து ஐபால் 16 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 15 சதவிகித பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம்பிடித்துள்ளது.
4ஜி மற்றும் 3ஜி சார்ந்த டேப்லெட்களின் விற்பனை முந்தைய காலாண்டை விட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி மொத்தம் 31 சதவிகித டேப்லெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2ஜி மற்றும் வைபை சார்ந்த டேப்லெட்கள் 62 சதவிகிதம் சரிந்துள்ளது.
இந்தியாவில் 4ஜி பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து 4ஜி டேப்லெட்கள் 50 சதவிகிதம் வரையிருக்கும் என சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






