என் மலர்
தொழில்நுட்பம்

போட்டோ எடிட்டிங் வசதி கொண்ட புது டேப்லெட் அறிமுகம்
பட்ஜெட் விலையில் போட்டோ எடிட்டிங் செய்ய உதவும் பிரத்தியேக டேப்லெட் சாதனத்தை கோடாக் வெளியிட்டுள்ளது. கோடாக் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
கோடாக் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அந்நிறுவனம் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராக்களை தவிர்த்து புகைப்படங்களை எடிட் செய்ய ஏதுவாக புதிய டேப்லெட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்கோஸ் நிறுவனம் வடிவமைத்து, தயாரித்துள்ள புதிய டேப்லெட் மென்பொருள் அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இமேஜிங் செயலிகள், 1 ஜிபி ரேம் மூலம் புகைப்படங்களை சீராக எடிட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
கூகுளின் ஸ்நாப்சீட், சைபர்லிண்க் போட்டோ டைரக்ட் என பல்வேறு பிரபல செயலிகள் கோடாக் டேப்லெட்டில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள கோடாக் டேப்லெட் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
10.1 இன்ச் திரை, 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வகை மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் புதிய கோடாக் டேப்லெட் 89 டாலர்கள் மற்றும் 134 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கோடாக் டேப்லெட் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Next Story






