என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) லீக்ஸ்: விரைவில் வெளியாகலாம் என தகவல்
    X

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) லீக்ஸ்: விரைவில் வெளியாகலாம் என தகவல்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ 8.0 டெஸ்டிங் தளத்தின் மூலம் லீக் ஆகியுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய டேப் ஏ 8.0 பட்ஜெட் ரகத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி டேப் ஏ 8.0 பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய டேப்லெட் வெளியாகும் தேதி குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. 

    GFXBench தளத்தில் புதிய டேப்லெட் SM-T355 என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி டேப் ஏ 8.0 இதே பெயரில் பட்டியலிடப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்கலில் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் 8.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 அட்ரினே 308 ஜிபியு கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 2 ஜிபி ரேம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் பேட்டரி மற்றும் எத்தனை நிறங்களில் வெளியிடப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    பெர்லின் நகரில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ விழாவில் புதிய டேப்லெட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியகியுள்ள சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது புதிய சாம்சங் டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது. தற்சமயம் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 இந்தியாவில் ரூ.16,500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×