என் மலர்
செய்திகள்

மைக்ரோசாப்ட் ஸ்கைப் லைட்: புது அப்டேட், புது அம்சங்கள்
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்கைப் லைட் செயலியில் புதிய ஃபர்ம்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் செயலியில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஸ்கைப் லைட் செய்லிக்கு புதிய ஃபர்ம்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் மூலம் செயலியின் அல்காரிதம்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடியோ சாட் செய்யும் போதும் குறைந்தளவு மொபைல் டேட்டாவை ஸ்கைப் லைட் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் வேகம் சீரற்ற நிலையில் இருக்கும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள செயலியாக ஸ்கைப் லைட் இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட சில மாதங்களில் இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் ஸ்கைப் லைட் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆதார் வேலிடேஷன் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதார் உலகின் மிகப்பெரிய தேசிய அடையாள குறியீட்டு எண் ஆகும். இந்த குறியீட்டு எண் மக்கள் அரசாங்கம், வியாபாரம் மற்றும் பல்வேறு தளங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஸ்கைப் லைட் செயலியில் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், மற்றவர்களுடன் அதிக பாதுகாப்புடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
புதிய வசதியை கொண்டு அழைப்புகளை மேற்கொள்பவர் அல்லது அழைப்புகளை மறுமுனையில் பெறுபவர்கள் ஆதார் வெரிபிகேஷன் செய்ய கோரிக்கை விடுக்கலாம், இதை செயல்படுத்த "Verify Aadhaar identity" பட்டனை கிளிக் செய்து, 12-இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்து ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் (one-time password) மூலம் உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் எண் மூலம் ஒருமுறை உறுதி செய்துவிட்டால் அடுத்தடுத்த அழைப்புகளில் மீண்டும் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
Next Story






