என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இந்தியாவில் 9.7 இன்ச் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 3 அறிமுகம்
By
மாலை மலர்20 Jun 2017 9:29 AM GMT (Updated: 20 Jun 2017 9:29 AM GMT)

சாம்சங்-இன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 20-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய டேப்லெட் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ள புதிய டேப்லெட் பார்சிலோனாவில் நடைபெற்று முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த முன்னணி சிறப்பம்சங்கள் வழங்கப்படவில்லை என்றாலும், புதிய டேப்லெட் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மற்றும் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க அட்ரினோ 530 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 9.7 இனஅச் எச்டிஆர் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1536x2048 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி டேப் எஸ்3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.
4ஜி வசதி கொண்ட நானோ-சிம் ஸ்லாட், வை-பை, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி 3.1, டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
புதிய கேலக்ஸி டேப் எஸ் 3 சாதனத்துடன் புக் கவர், கீபோர்டு கவர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த எஸ்-பென் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியுள்ள புதிய டேப் எஸ் சீரிஸ் சாதனம் இந்தியாவில் ரூ.47,990 என்ற விலையில் விற்பனை செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
